கொரியா நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரியா நீரிணை
கொரியா நீரிணையைக் காட்டும் நிலப்படம்.
நிப்பானியப் பெயர்
Kanji 対馬海峡/朝鮮海峡
ஹிரகனா எழுத்துக்கள் つしまかいきょう/ちょうせんかいきょう
Revised HepburnTsushima Kaikyō /Chōsen kaikyō
தென் கொரியப் பெயர்/வட கொரியப் பெயர்
அங்குல் எழுத்துமுறை대한해협/조선해협
Hanja大韓海峽/朝鮮海峽
Revised RomanizationDaehan Haehyeop /Chosŏn Haehyŏp
கொரியா நீரிணையில் இட்சிமா தீவைக் காட்டும் நிலப்படம்
மேற்கத்திய கால்வாயையும் (கொரியா நீரிணை) கிழக்கத்திய கால்வாயையும் (இட்சிமா நீரிணை) காட்டும் நிலப்படம்

கொரியா நீரிணை (Korea Strait) தென் கொரியாவிற்கும் யப்பானிற்கும் இடையே வடமேற்கு அமைதிப் பெருங்கடலில் கிழக்கு சீனக்கடல், மஞ்சள் கடல் (மேற்கு கடல்) மற்றும் கிழக்கு கடல்களை இணைக்கும் நீரிணை[1][2].

இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு மேற்கு கால்வாய் எனவும் இட்சுஷிமா நீரிணை எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.

கொரியா நீரிணை என்ற பெயர் இருவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று இது கொரியாவிற்கும் இட்சிமா தீவிற்கும் இடையேயுள்ள கடலைக் குறிக்கிறது;[3] இந்த விவரிப்பில் மேற்கு கால்வாய்க்கும் (கொரியா நீரிணை) கிழக்குக் கால்வாய்க்கும் (இட்சிமா நீரிணை) இடையில் இட்சிமா தீவு அமைந்துள்ளது.[4]

இரண்டாவதாக கொரியாவிற்கும் கியூஷூ தீவிற்கும் இடையேயுள்ள பரந்த கடற்பரப்பை விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.[5]

புவியியல்[தொகு]

இந்த நீரிணையின் வடக்கு கடலோரம் கொரியத் தீபகற்பத்தின் தெற்கு கடலோரம் ஆகும். நீரிணையின் தெற்கு கடலோரங்கள் இட்சிமாத் தீவின் மேற்கு கடற்கரையையோ அல்லது கியூஷூ, ஒன்சூ தீவுகளின் மேற்கு கடலோரங்களையோ பயன்பாட்டிற்கேற்ப குறிக்கலாம்.

இந்த நீரிணை 200 கிமீ (120 மைல்) அகலமாக உள்ளது; இதன் ஆழம் சராசரியாக 90 முதல் 100 மீட்டர்கள் வரை (300 அடி) உள்ளது.

மேற்கத்தியக் கால்வாய் கிழக்கத்தியக் கால்வாயை விட ஆழமாகவும் (227 மீ வரை) குறுகலாகவும் உள்ளது.

நீரோட்டங்கள்[தொகு]

வெப்ப நீரோட்டம் (இடுசிமா-கைய்ரு) இந்த நீரிணையின் தெற்கு வடக்காக ஓடுகிறது.[6]

குரோசியோ நீரோட்டத்தின் ஒரு கிளை இந்த நீரிணை ஊடேச் செல்கிறது. இதன் வெப்பமான கிளையே இட்சிமா கைய்ரு நீரோட்டமாகும். யப்பானியத் தீவுகளில் துவங்கும் இந்த நீரோட்டம் கிழக்கு கடல் ஊடே சென்று பின்னர் then divides along either shore of சக்கலின் தீவின் இருகரைகளிலும் பிரிந்து வடக்கு அமைதிப் பெருங்கடலுக்கு இந்த நீரிணை வழியாகச் செல்கிறது. இதன்வழியில் ஹொக்கைடோவின் வடக்கு அமைந்துள்ளது. இறுதியாக சக்கலின் தீவின் வடக்கில் விலாடிவொஸ்டொக் வழியாக ஓக்கோட்சுக் கடலில் கலக்கிறது. இந்த நீரோட்டத்தின் நீர்-நிறை பண்புகள் பெரிதும் வேறுபடுகின்றன; கொரியா, சீனா தென்கிழக்கு கடலோரங்களின் குறைந்த உப்புச்சத்தே இதற்கு காரணமாகும்.

பொருளியல் முதன்மை[தொகு]

இந்த நீரிணை வழியாக பல பன்னாட்டுக் கலங்கள் செல்கின்றன. தெற்கு தென்கொரியாவின் துறைமுகங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய சரக்குகள் உட்பட பலத்த சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. தென் கொரியாவும் யப்பானும் இந்த நீரிணையில் தங்கள் நிலப்பரப்பு உரிமையை கடலோரத்திலிருந்து 3 கடல்சார் மைல்களாக (5.6 கிமீ) மட்டுப்படுத்திக் கொண்டுள்ளன. இதனால் நீரிணை வழியே கட்டற்ற போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்றது.[1][2] யப்பான் அணுக்கரு ஆயுதங்களை தனது நிலப்பகுதியில் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை; தனது கடலெல்லையை 3 கடல்சார் மைல்களாக (வழமையான 12க்கு மாற்றாக, குறைத்துக் கொண்டுள்ளதால் அணுக்கரு-ஆயுதமேந்திய ஐக்கிய அமெரிக்கக் கடற்படை போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் யப்பானின் தடையை மீறாது நீரிணையைக் கடக்க முடிகிறது.[7]

பயணிகள் போக்குவரத்தும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. வணிகமய நாவாய்கள் தென்கொரியாவின் புசான், ஜியோஜெ நகரங்களிலிருந்து Geoje]] யப்பானியத் துறைகளான புக்குவோக்கா, இட்சுசிமா, சிமொனோசெகி, ஹிரோஷிமாவிற்குச் செல்கின்றன. இட்சுசிமாத் தீவை புக்குவோக்காவுடனும் தென்கொரியாவின் ஜேஜு தீவை தென்கொரிய பெருநிலப்பரப்புடனும் இணைக்கும் நாவாய் சேவைகளும் உண்டு. புசானையும் யப்பானியத் துறைகளையும் சீனாவின் துறைமுகங்களோடு இணைக்கும் போக்குவரத்தும் இந்த நீரிணையைப் பயன்படுத்துகின்றது.

தொடர்புடையப் பக்கங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரியா_நீரிணை&oldid=3850422" இலிருந்து மீள்விக்கப்பட்டது