புசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புசான்
부산시
பெருநகர் பகுதி
புசான் பெருநகரம்
  transcription(s)
 • அங்குல் 부산
 • Hanja
 • Revised Romanization Busan Gwangyeoksi
 • McCune-Reischauer Pusan Kwangyŏksi
Official logo of புசான்
புசான் சின்னம்
தென்கொரியாவின் நிலப்படத்தில் புசான் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது
தென்கொரியாவின் நிலப்படத்தில் புசான் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது
நாடு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி தென் கொரியா
மண்டலம் இயோங்னம்
மாவட்டங்கள் 15
அரசு
 • வகை மேயர்-நகரமன்றம்
 • மேயர் சு பியங்-சூ (சேனுரி கட்சி)
 • மன்றம் புசான் பெருநகர மன்றம்
 • தேசிய பிரதிநிதி
 - தேசிய சட்டமன்றம்
18 / 299
6.0% (மொத்த இடங்கள்)
18 / 245
7.3% (தொகுதி இடங்கள்)
பரப்பளவு[1]
 • பெருநகர் பகுதி 767.35
மக்கள்தொகை (2012)[2]
 • பெருநகர் பகுதி 3
 • அடர்த்தி 4
 • பெருநகர் 8
அஞ்சல் குறியீடு 600-010, 619-963
தொலைபேசி குறியீடு (+82) 051
மலர் ஆக்கத்திசு மலர்
மரம் ஆக்கத்திசு
பறவை நீள் சிறகு கடற்பறவை
இணையதளம் busan.go.kr (ஆங்கிலம்)

புசான் (Busan, 부산 or 釜山, அலுவல்முறையாக புசான் பெருநகரம்) தலைநகரம் சியோலுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரும் பெருநகரமாகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 3.6 மில்லியன் ஆகும்.[1] பெருநகரப் பகுதியில் அண்மித்த ஊர்களையும் சேர்த்து, மக்கள்தொகை ஏறத்தாழ 4.6 மில்லியனாக உள்ளது. இது தென்கொரியாவின் மிகப்பெரிய துறைமுக மாநகரமாக விளங்குகிறது; சரக்குப் போக்குவரத்தில் உலகின் ஐந்தாவது மிகுந்த போக்குவரத்துமிக்க துறைமுகமாக விளங்குகிறது.[3] கொரிய நாவலந்தீவின் தென்கிழக்குக் கோடியில் இந்த நகரம் அமைந்துள்ளது. நக்டோங் ஆற்றுக்கும் சுயோங் ஆற்றுக்கும் இடையேயுள்ள குறுகிய பள்ளத்தாக்குகளில் நகரத்தின் நெரிசலானப் பகுதிகள் அமைந்துள்ளன. நிர்வாகத்திற்காக இது ஓர் சிறப்பு நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புசான் பெருநகரப் பகுதி 15 மாவட்டங்களாகவும் ஒரே கவுன்டியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

புசானில் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏபிஈசி 2005 கொரியா போன்ற நிகழ்வுகளை ஏற்று நடத்தியுள்ளது. 2002 உலகக்கோப்பை காற்பந்து நடைபெற்ற நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏலத்தில் பங்கேற்றது.[4]

ஏயுண்டே கடற்கரை
குவாங்கன் பாலம்

புசானில் கொரியாவின் நீண்ட கடற்கரையான ஏயுண்டே கடற்கரையும் நீண்ட ஆறான நக்டோங் ஆறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. உலகின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி, சின்செகே சென்டம் நகர் இங்குதான் அமைந்துள்ளது.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Busan: Population and area of Administrative units". Dynamic Busan: Busan Metropolitan City. பார்த்த நாள் 2010-03-24.
  2. [1], Retrieved 2013-07-01.
  3. http://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=ah2Znx0vQ580 Empty Containers Clog Busan Port as Trade Slumps, bloomberg.com – March 3, 2009 02:12 EST
  4. People's Daily Online (2005-11-14). "Pusan to declare bid to host 2020 Olympic Games". பார்த்த நாள் December 8, 2006.
  5. "Largest Department Store - Guinness World Records Blog post - Home of the Longest, Shortest, Fastest, Tallest facts and feats". Community.guinnessworldrecords.com (2009-06-29). பார்த்த நாள் 2011-09-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புசான்&oldid=1739933" இருந்து மீள்விக்கப்பட்டது