நீள் சிறகு கடற்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீள் சிறகு கடற்பறவை
Seagull in flight by Jiyang Chen.jpg
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கடற்பறவை (Charadriiformes)
துணைவரிசை: ரன் (Lari)
குடும்பம்: Laridae
Vigors, 1825
பேரினம் (உயிரியல்) (Genera)

11, see text

2013ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நேரத்தில் சிட்னி அருகில் உள்ள க்யூமா கடற்கரையில் இரண்டு பறவைகள் பறக்கும் காட்சி

நீள் சிறகு கடற்பறவை [1][2] (gull) யானது ஆலா (Tern) என்ற பறவையின் குடும்ப வகைப்பாட்டினைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதேபோல் ரன் (Lari), தாசுமேனியாக்கடல் பகுதில் வாழும் பறவை, குட்டையான இறகுளையுடைய கடல்பறவை (auk), நீரில் நடக்கும் பறவை (wader), நீர் மேல் தவழ்ந்து செல்லும் பறவை (Skimmer), போன்றவை இந்த இனத்தைச் சேர்ந்தவையாகும்.[3][4] நீள் சிறகு கடற்பறவை இருபத்தியோராம் நூற்றாண்டுவரை (Larus) என்ற குடும்பத்தில் தான் சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது வெளிநாட்டுப் பேரினங்கள் பல காரணங்களால் மாற்றம் கண்டுள்ளன. இப்பறவையின் பழைய பெயர் இடாய்ச்சு மொழியில் Möwe தென்மாக்கிய மொழியில் måge, இடச்சு meeuw மற்றும் பிரான்சிய மொழியில் mouette என்று அந்தந்த நாட்டு பேச்சு வழக்கில் அழைக்கிறார்கள்.[5][6][7]

நீள் சிறகு கடற்பறவை பெரும்பாலும் கருப்புத் தலையுடனும், சாம்பல் நிற மற்றும் வெள்ளை இறகுடனும் காணப்படும். இவை நீளமான அலகையும், சவ்வால் இணைந்த கால் விரல்களையும் கொண்டவை. இப்பறவைகள் பெரும்பாலும் உணவு தேடி உண்பவையாகவும் ஒருசில பறவைகள் சந்தர்ப்பவாதமாகவும் உண்டு வாழும். இவை ஒரு ஊனுண்ணியாக உள்ளது. சிறிய வகையான நண்டுகள், மீன்களைப் பிடித்து உண்ணுகின்றன. பெரிய இரையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு இப்பறவைக்கு தாடைகள் இல்லை. அநேகமாக இப்பறவைகள் கடற்கரை ஓரத்திலும், தீவுக்கூட்டங்களிலும் வாழுகின்றன.[8] இதன் இனப்பெருக்கம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்தாலும், அவற்றிற்கு இறகுகள் முழுவதும் முளைக்க நான்கு ஆண்டுகள் வரை ஆகும். பொதுவாக பெரிய வெள்ளை தலையுடைய பறவைகள் 49 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[9]

இப் பறவைகள் பெரிய கூடு கட்டும். அதோடு இவைகள் கூடும் கூட்டத்தில் பெருத்த சத்தம் இருந்துகொண்டே இருக்கும். தாவரங்களின் பாகங்களால் கூடுகளைக் கட்டி முட்டை இடுகின்றன. இதன் இளம் குஞ்சுகளின் மேல் உதிரும் வகையில் சிறு சிறு முடிகள் இருக்கும்.[10]

இப்பறவைகள் கடலின் மேற்பரப்பில் தெரியும் திமிங்கிலம் போன்ற விலங்குகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. [11]இவ்வகையான பறவை இனங்கள் அநேகமாக மனிதர்கள் போல நகரத்திலும் வனத்திலும் கூட்டமாக வாழும் குணம் கொண்டுள்ளது. [12]இப்பறவைகளின் கூட்டங்கள் இருக்கும் இடங்களில் வேறு பறவைகள் அத்துமீறி நுழையும் போது சண்டையிட்டு விரட்டும் குணம் கொண்டுள்ளது. குணமானது. [13]

அமைப்பியல்[தொகு]

நீள் சிறகு கடற்பறவைகளின் கிரேட் பிளாக் (Little Gull) வகைகளில் 120 கிராம் (4.2 அவுன்ஸ்) எடை, 29 செ.மீ. (11.5 அங்குலம்) உயரமும், பெரிய பறவைளில் பெரிய கருப்பு நீள் சிறகு கடற்பறவைகளில் (Great Black-backed Gull) 1.75 கிலோ (3.8 பவுண்ட்) எடை, 76 செமீ (30 அங்குலம்), உயரமும் கொண்டதாக உள்ளன. இதன் உடல் தடிமனாகவும், நீண்ட இறகுகளுடனும், நீண்ட கழுத்தும் கொண்டு ஒரே சீரான நிறத்தில் காணப்படுகிறது.

இனங்களின் பட்டியல்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீள்_சிறகு_கடற்பறவை&oldid=3218786" இருந்து மீள்விக்கப்பட்டது