உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலா
Greater Crested Tern
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
'

ஆலா (ஒலிப்பு) (Tern) புவிமுனைகளில் வாழும் ஒரு பறவை. உலகிலேயே அதிக தூரம், சுமார் 12,000 மைல்கள் ஒரு வழியில், வட துருவப் பிரதேசத்திலிருந்து தென் துருவப் பிரதேசத்துக்கு குளிர் நாட்களில் பறந்து இடம் பெயரும்.

ஆலா பருமனில் புறாவை விட சற்றே மெலிந்திருக்கும். உடலை விட நீளமான இறக்கைகள் கொண்டது ஆலா. அதன் வால் சிறகுகள் மீனின் வால் பொன்ற அமைப்பில் இருக்கும். இறக்கைகளின் மேல் புரம் சாம்பல் நிறத்திலும் அடிப் புரமும் வயிறும் வெள்ளையாகவும் இருக்கும்[1]. இப்பறவையின் கால்கள் குட்டையானவை. தலை, கழுத்து, மார்பு, வயிறு, கால்கள், அலகு இவற்றின் நிறம் ஒவ்வொரு வகை ஆலாவில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆலாக்கள் இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும். திடீரென ஒரு ஆலா செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் வாயில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும். அப்படிப் பறக்கும் போதே வாயில் உள்ள மீனை உயரத் தூக்கி எறிந்து மீன் தலை கீழாக வரும் போது மீண்டும் அதனைக் கவ்வி விழுங்கும். மீனின் உடலில் பின் நோக்கிச் சாய்ந்திருக்கும் செதில்கள் பறவையின் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறது.

ஆலாப்பறவைகளில் கிட்டத் தட்ட நாற்பத்தைந்து வகை ஆலாக்கள் உண்டு. ஆற்று ஆலா (River Tern) என்ற பறவையை ஆறு, ஏரிகளின் அருகில் காணலாம். இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்திலும் அலகுகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். கோடை காலத்தில் தலையும் பின் கழுத்தும் கருப்பு நிறமாக இருக்கும்.

மேற்குறிப்புக்கள்[தொகு]

  1. Harrison, Colin J.O. (1991). Forshaw, Joseph. ed. Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. pp. 110–112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85391-186-0
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலா&oldid=3839948" இலிருந்து மீள்விக்கப்பட்டது