ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு | |
---|---|
தலைமையகம் | சிங்கப்பூர் |
வகை | பொருளாதார மன்றம் |
உறுப்பு நாடுகள் | |
தலைவர்கள் | |
• APEC ஹோஸ்ட் பொருளாதாரம் 2023 | ஜோ பைடன் |
• நிறைவேற்றுப் பணிப்பாளர் | ரெபேக்கா பாத்திமா சாண்டா மரியா |
உருவாக்கம் | 1989 |
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.[1]. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.
ஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது.
வரலாறு
[தொகு]ஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.
முதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.
அங்கத்துவ நாடுகள்
[தொகு]தற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இந்தியா இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனவாயினும், 2010 இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.[4][5][6][7]
அதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா[8], எக்குவடோர்[9] போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.
சந்திப்பு இடம்பெற்ற இடங்கள்
[தொகு]வருடம் | # | திகதிகள் | நாடு | நகரம் | இணையத்தளம் |
---|---|---|---|---|---|
1989 | 1 வது | நவம்பர் 6–7 | ஆஸ்திரேலியா | கான்பரா | |
1990 | 2 வது | ஜூலை 29–31 | சிங்கப்பூர் | சிங்கப்பூர் | |
1991 | 3 வது | நவம்பர் 12–14 | தென்கொரியா | சியோல் | |
1992 | 4 வது | செப்டெம்பர் 10–11 | தாய்லாந்து | பேங்காக் | |
1993 | 5 வது | நவம்பர் 19–20 | ஐக்கிய அமெரிக்கா | சியாட்டில் | |
1994 | 6 வது | நவம்பர் 15–16 | இந்தோனேசியா | போகோர் | |
1995 | 7 வது | நவம்பர் 18–19 | ஜப்பான் | ஒசாக்கா | |
1996 | 8 வது | நவம்பர் 24–25 | பிலிப்பீன்சு | மணிலா மற்றும் சுபிக் | |
1997 | 9 வது | நவம்பர் 24–25 | கனடா | வான்கூவர் | |
1998 | 10 ஆம் தேதி | நவம்பர் 17–18 | மலேசியா | கோலாலம்பூர் | |
1999 | 11 ஆம் தேதி | செப்டெம்பர் 12–13 | நியூசிலாந்து | ஓக்லாந்து | |
2000 | 12 ஆம் தேதி | நவம்பர் 15–16 | புருணை | பண்டார் செரி பெகவான் | [2] பரணிடப்பட்டது 2003-03-14 at the Library of Congress Web Archives |
2001 | 13 ஆம் தேதி | அக்டோபர் 20–21 | சீனா | சாங்காய் | |
2002 | 14 ஆம் தேதி | அக்டோபர் 26–27 | மெக்சிக்கோ | லாஸ் கபோஸ் | |
2003 | 15 ஆம் தேதி | அக்டோபர் 20–21 | தாய்லாந்து | பேங்காக் | |
2004 | 16 ஆம் தேதி | நவம்பர் 20–21 | சிலி | சாண்டியாகோ | [3] |
2005 | 17 ஆம் தேதி | நவம்பர் 18–19 | தென்கொரியா | புசான் | |
2006 | 18 ஆம் தேதி | நவம்பர் 18–19 | வியட்நாம் | ஹனோய் | [4] பரணிடப்பட்டது 2006-02-25 at the வந்தவழி இயந்திரம் |
2007 | 19 ஆம் தேதி | செப்டெம்பர் 8–9 | ஆஸ்திரேலியா | சிட்னி | [5] பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம் |
2008 | 20 ஆம் தேதி | நவம்பர் 22–23 | பெரு | லிமா | [6] பரணிடப்பட்டது 2007-10-13 at the வந்தவழி இயந்திரம் |
2009 | 21 ஆம் தேதி | நவம்பர் 14–15 | சிங்கப்பூர் | சிங்கப்பூர் | [7] |
2010 | 22 ஆம் தேதி | நவம்பர் 13–14 | ஜப்பான் | யோகோஹாமா | [8] |
2011 | 23 ஆம் தேதி | நவம்பர் 12–13 | ஐக்கிய அமெரிக்கா | ஹொனோலுலு | [9] பரணிடப்பட்டது 2011-03-26 at the வந்தவழி இயந்திரம் |
2012 | 24 ஆம் தேதி | செப்டெம்பர் 9–10 | ரஷ்யா | விளாதிவசுத்தோக் | [10] பரணிடப்பட்டது 2021-06-26 at the வந்தவழி இயந்திரம் |
2013 | 25 ஆம் தேதி | அக்டோபர் 5–7 | இந்தோனேசியா | பாலி | [11] |
2014 | 26 ஆம் தேதி | நவம்பர் 10–11 | சீனா | பெய்ஜிங் | |
2015 | 27 ஆம் தேதி | நவம்பர் 18–19 | பிலிப்பீன்சு | பாசாய் | |
2016 | 28 ஆம் தேதி | நவம்பர் 19–20 | பெரு | லிமா | |
2017 | 29 ஆம் தேதி | நவம்பர் 10–11 | வியட்நாம் | தா நாங் | |
2018 | 30 ஆம் தேதி | நவம்பர் 17–18 | பப்புவா நியூ கினி | மார்சுபி துறைமுகம் | |
2019 | சிலி | சாண்டியாகோ | |||
2020 | 31 ஆம் தேதி (தாமதமாகிறது) | நவம்பர் 20 | மலேசியா | கோலாலம்பூர் (ஆன்லைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டது) | |
2021 | 32 ஆம் தேதி | ஜூலை 16 மற்றும் நவம்பர் 12 | நியூசிலாந்து | ஓக்லாந்து (ஆன்லைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டது) | |
2022 | 33 ஆம் தேதி | நவம்பர் 18–19 | தாய்லாந்து | பேங்காக் | |
2023 | 34 ஆம் தேதி | நவம்பர் 15–17 | ஐக்கிய அமெரிக்கா | சான் பிரான்சிஸ்கோ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (உலக வங்கி)
- ↑ சீனக் குடியரசு (ROC) தனது பெயரை இக்கூட்டமைப்பில் "சீனக் குடியரசு" என்றோ அல்லது "தாய்வான்" என்றோ அழைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பதிலாக "சீன தாய்பெய்" என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் அரசுத் தலைவர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை, அமைச்சர்கள் மட்டத்திலேயே தனது தூதுக் குழுவை அனுப்புகிறது.
- ↑ ஹாங்காங் பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்தபோது 1991இல் ஏபெக்கில் இணைந்தது. 1997 இல் சீன மக்கள் குடியரசுடன் இணைக்கப்பட்டதில் இருந்து இது "ஹாங்காங், சீனா" என்று வழங்கப்பட்டு வருகிறது.
- ↑ APEC 'too busy' for free trade deal, says Canberra
- ↑ இந்திய அங்கத்துவம் பற்றிய பிரச்சினை
- ↑ "Extend a hand to an absent friend". Archived from the original on 2007-12-23. பார்க்கப்பட்ட நாள் 2007-09-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-14. பார்க்கப்பட்ட நாள் 2007-11-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2007-09-09.
- ↑ [1]
வெளி இணைப்புகள்
[தொகு]- ஏபெக் இணையத்தளம்
- ஏபெக் 2007, சிட்னி இணையத்தளம் பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம்