தா நாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தா நாங்
Đà Nẵng
நகராட்சி
Thành phố Đà Nẵng
  transcription(s)
 • Chữ Nôm 城舖沱灢
 • Quốc ngữ thành phố Đà Nẵng
மை கீ கடற்கரை. பா நா கம்பிவட ஊர்தி. மார்பிள் மலைகள்· நோவோட்டல் தனாங் ஹான் நதிபாலம்
மை கீ கடற்கரை. பா நா கம்பிவட ஊர்தி. மார்பிள் மலைகள்· நோவோட்டல் தனாங் ஹான் நதிபாலம்
Da Nang in Vietnam.svg
நாடு  வியட்நாம்
பிரதேசம் தென் மத்திய கோஸ்ட்
தெனொயிம் Dananger
அரசு
 • Party's Secretary (Bí thư Thành ủy) Trần Thọ
 • People's Council's President (Chủ tịch Hội đồng Nhân Dân) Nguyễn Bá Thanh
 • People's Committee's President (Chủ tịch Ủy ban Nhân Dân) Văn Hữu Chiến
பரப்பளவு[1]
 • மொத்தம் 1,285.4
மக்கள்தொகை (2014)
 • மொத்தம் 10,07,400
 • அடர்த்தி 780
நேர வலயம் Indochina Time (ஒசநே+07:00)
 • கோடை (பசேநே) No DST (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு 511
இணையதளம் danang.gov.vn

தா நாங் (Đà Nẵng, 城舖沱灢, இந்த ஒலிக்கோப்பு பற்றி listen) என்பது வியட்நாமின் பிரதான துறைமுக நகரங்களில் ஒன்றாகும்(மற்றவை ஹோ சி மின் நகரம் மற்றும் கைபோங்). இதுவே வியட்நாமின் தென் மத்திய கோஸ்ட்டின் மிகப்பெரிய நகரமாகும். தா நாங் தென் கடலின் கரையோரமாகவும் ஹான் ஆற்றின் தொடக்க எல்லையிலும் அமைந்துள்ளது. மத்திய வியட்நாமின் வணிக மற்றும் கல்வியின் மத்திய நிலையமாக இது விளங்குகிறது. தா நாங் நிலையான இலகுவாக அணுகக்கூடிய வகையில் ஒரு துறைமுகத்தையும் கொண்டுள்ளது. இது தேசிய வழி 1Aயிலும் மற்றும் வடக்கு-கிழக்கு ரயில்வேயிலும் அமைந்துள்ளமையால் இதை போக்குவரத்தின் மையமாக கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம் போன்றவற்றிற்கு 100 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்நகரம் முற்காலத்தில் டை வியாட் குடியேற்றத்தின் போது குவா கான் (Cửa Hàn) என அழைக்கப்பட்டது. பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் போது டூரன் மற்றும் டுரோன் (Tourane அல்லது Turon) என்றும் அழைக்கப்பட்டது. தா நாங்கே வியட்நாமின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார மையமாகும்(ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோய்க்கு அடுத்ததாக).

1997ற்கு முன்னர் இந்நகரம் குவாங் நாம்-டா நாங் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1 சனவரியில் 1997ல் தா நாங் குவாங் நாம் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வியட்நாமின் ஐந்து சுதந்திர நகராட்சிகளில் ஒன்றாக மாறியது. தா நாங் முதல் தர நகரங்களில் ஒன்றாக பட்டியல் இடப்பட்டுள்ளது.[2] வியட்நாமின் மாகாணங்கள் மற்றும் மத்திய ஆட்சி நகரங்களை விட நகரமயமாக்கல் விகிதத்தில் தா நாங் முன்னிடத்தில் உள்ளது.[3] தா நாங்கே வியட்நாமின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாகும்.[4]

காலநிலை[தொகு]

தா நாங் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது. இது இரு பருவங்களைக் கொண்டுள்ளது. செப்டெம்பர் தொடக்கம் மார்ச் வரை தைபூன் மற்றும் ஈர பருவமும், ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்து வரை வறண்ட பருவத்தையும் கொண்டுள்ளது. இங்கு வெப்பநிலை பொதுவாக அதிகமாகவே காணப்படுகிறது. இந்நகர வருடாந்த சராசரி வெப்பநிலை 25.9 °C (78.6 °F) ஆகும். சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை வெப்பநிலை மிகவும் அதிகமாக காணப்படும் (averaging 33 to 34 °C (91 to 93 °F), மற்றும் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி மிகவும் குறைவாகவும் காணப்படும் (averaging 18 to 19 °C (64 to 66 °F)). குளிர் காலத்தில் குளிராகவும், ஈரமாகவும் மற்றும் அதிக காற்றாகவும் இருக்கும். வருடாந்த சராசரி ஈரப்பதம் 80.6% ஆகும். அக்டோபர் தொடக்கம் திசம்பர் வரை ஈரப்பதம் மிகவும் அதிகமாக காணப்படும்(84% கிட்டும்), சூன் தொடக்கம் சூலை வரை ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும் (74–75% கிட்டும்).[5]

சராசரியாக தா நாங் 2,505 mm (98.6 in) மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. அக்டோபர் தொடக்கம் நவம்பர் வரை அதிக மழைவீழ்ச்சி கிடைக்கிறது (ranging from 550 to 1,000 mm (22 to 39 in)), மற்றும் சனவரி தொடக்கம் ஏப்ரல் வரை குறைந்த மழை வீழ்ச்சியையும் பெறுகிறது (ranging from 23 to 40 mm (0.91 to 1.57 in)).[6]

தட்பவெப்ப நிலை தகவல், தா நாங்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32
(90)
35
(95)
37
(99)
41
(106)
39
(102)
38
(100)
38
(100)
38
(100)
37
(99)
36
(97)
35
(95)
32
(90)
41
(106)
உயர் சராசரி °C (°F) 24.8
(76.6)
26.1
(79)
28.7
(83.7)
31.0
(87.8)
33.4
(92.1)
33.9
(93)
34.3
(93.7)
33.9
(93)
31.5
(88.7)
29.6
(85.3)
27.0
(80.6)
24.9
(76.8)
29.93
(85.87)
தினசரி சராசரி °C (°F) 21.7
(71.1)
23.0
(73.4)
25.1
(77.2)
27.2
(81)
29.2
(84.6)
29.7
(85.5)
29.8
(85.6)
29.7
(85.5)
27.8
(82)
26.4
(79.5)
24.3
(75.7)
22.1
(71.8)
26.33
(79.4)
தாழ் சராசரி °C (°F) 18.5
(65.3)
19.8
(67.6)
21.5
(70.7)
23.3
(73.9)
24.9
(76.8)
25.5
(77.9)
25.3
(77.5)
25.5
(77.9)
24.1
(75.4)
23.2
(73.8)
21.6
(70.9)
19.3
(66.7)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 8
(46)
7
(45)
11
(52)
7
(45)
18
(64)
20
(68)
17
(63)
21
(70)
21
(70)
12
(54)
7
(45)
11
(52)
7
(45)
பொழிவு mm (inches) 96.2
(3.787)
33.0
(1.299)
22.4
(0.882)
26.9
(1.059)
62.6
(2.465)
87.1
(3.429)
85.6
(3.37)
103.0
(4.055)
349.7
(13.768)
612.8
(24.126)
366.2
(14.417)
199.0
(7.835)
2,044.5
(80.492)
ஈரப்பதம் 83 83 83 82 78 75 74 76 81 84 84 84 80.6
சராசரி பொழிவு நாட்கள் 13.7 6.9 4.8 5.6 8.9 8.0 8.6 11.4 15.4 21.2 20.9 18.6 144
சூரியஒளி நேரம் 136.4 144.1 105.4 207.0 257.3 237.0 257.3 207.7 174.0 145.7 120.0 116.6 2,108.5
Source #1: World Meteorological Organisation (UN)[7]
Source #2: Weatherbase (record highs, lows, and humidity) [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Statistical Handbook of Vietnam 2014, General Statistics Office Of Vietnam
  2. Quyết định số 145/2003/QĐ/TTg ngày 15/7/2003
  3. "Đà Nẵng - Trung tâm vùng kinh tế trọng điểm miền Trung"
  4. Bureau of East Asian and Pacific Affairs (27 May 2010). "Background Note: Vietnam". U.S. Department of State. பார்த்த நாள் 2010-06-21.
  5. 5.0 5.1 "Weatherbase: Historical Weather for Da Nang". Weatherbase. பார்த்த நாள் 11 August 2012.
  6. Danang People's Committee website
  7. "World Weather Information Service - Đà Nẵng".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா_நாங்&oldid=1976907" இருந்து மீள்விக்கப்பட்டது