வியட்நாமியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாமியர்கள்
கின் மக்கள்
நிகுவாய் வியட் (người Việt)
நிகுவாய் கின் (người Kinh)
மொத்த மக்கள்தொகை
~86 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 வியட்நாம்81,328,696 (2015)[1]
 ஐக்கிய அமெரிக்கா1,548,449 (2010)[2]
 கம்போடியா600,000[3]
 பிரான்சு350,000[4]
 கனடா220,425 (2011)
 ஆத்திரேலியா210,800 (2010)[5]
 சீனக் குடியரசு200,000 (2014)[6]
 செருமனி150,000[7]
 தென் கொரியா143,000 (2013)[8]
 சப்பான்135,657 (2014)[9]
 லாவோஸ்100,000
 மலேசியா70,000[10]
 ஐக்கிய இராச்சியம்28,000 (born in Vietnam, 2014 ONS estimate)[11]
"At least 55,000" (total community, 2007 estimate)[12]
 செக் குடியரசு60,931 (2010)[13]
 போலந்து50,000
 உருசியா36,225[14]
 சீனா30,000
 பிலிப்பீன்சு27,600
 நோர்வே21,721(2014)[15]
 நெதர்லாந்து20,603(2014)[16]
 தாய்லாந்து10,000[17]
 டென்மார்க்14,669(2014)[18]
 சுவிட்சர்லாந்து14,496
 கத்தார்8,000 (2008)[19]
 மக்காவு7,199 (2011)[20]
 பெல்ஜியம்7,151 (2001)[18]
 நியூசிலாந்து4,875 (2006)[21]
 பின்லாந்து4,645[22]
 உக்ரைன்3,850 (2001)[23]
 அங்கேரி3,019 (2011)[24]
 சிலவாக்கியா3,000[25]
 இத்தாலி3,000
மொழி(கள்)
வியட்நாமிய மொழி
சமயங்கள்
ஓங்கலாக வியட்நாமிய நாட்டுப்புற சமயம், மக்காயாண புத்தசமயம் இணைவோடு. சிறுபான்மையினர் கிறிஸ்தவர்கள் (பெரும்பகுதி உரோமன் கத்தோலிக்கர்களும் பிற குழுவினரும்.[26]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
  • கின் மக்கள் (ஜிங் அல்லது கின் மக்கள் எனப்படுபவர்)
  • மூவோங் மக்கள்
  • மேலும் காண்க, பையூயே.

வியட்நாமியர்கள் (Vietnamese people) அல்லது கின் மக்கள் (Kinh people) (வியட்நாமியம்: người Việt அல்லது người Kinh) என்பவர்கள் இன்றைய வடக்கு வியட்நாமிலும் தென்சீனத்திலும் தோன்றிய தென்கிழக்காசிய இனக்குழு மக்கள் ஆவர். இவர்கள் 1999 கணக்கெடுப்பின்படி, வியட்நாமின் பெரும்பான்மை, அதாவது 86% அளவு மக்கள் ஆவர். அலுவல்முறையில் வியட்நாமில் வாழும் பிறரிடம் இருந்து வேறுபடுத்த இவர்கள் கின் மக்கள் எனப்படுகின்றனர். பண்டைய வியட்நாமியரின் மிகப் பழைய பதிவு இவர்களை இலாசு வியட் எனச் சுட்டுகிறது.

இவர்கள் புவிப்பரவல்படியும் மொழியியலாகவும் தென்கிழக்காசியர்கள் என வழங்கப்பட்டாலும் நெடுங்கால சீனக் குடியேற்ற ஆட்சியால் இவர்களின் பண்பாடு கிழக்காசிய மக்களை ஒத்தே அமைகிறது. அதாவது, மிகவும் குறிப்பாக அவர்களின் வடக்கண்மை மக்களாகிய தென்சீன மக்களையும் பிற தென்சீனாவில் வாழும் பிற இனக்குழு மக்களையும் ஒத்தே அமைகிறது. வியட் எனும் சொல் பாக் வியட் என்பதன் சுருக்கமே. நாம் எனும் சொல்லின் பொருள் தெற்கு என்பதாகும்.

தோற்றம்[தொகு]

வரலாற்றுப் பதிவுகளில் வியட்நாமியர் இலாசு அல்லது இலாசு வியட் எனப்படுகின்றனர். வியட்நாம் நாடு வான்லாங் எனப்பட்டது.

ஏழு தனித்தன்மை வாய்ந்த மரபுக் குறிப்பான்களைத் தவிர வியட்நாமியர்கள் மரபியலாக கிழக்காசிய மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளனர்.[28][29] தேசிய புவிப்பரப்பியல் கழகத்தின் மரபுவரைவியலின் ஆய்வுப்படி வியட்நாமியர் கிழக்கு, தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு இடைப்பட்டவர்களாக அமைகின்றனர்.[30] மற்றொரு அண்மக்கால 92015) ஆய்வுப்படி, வியட்நாமியர் சீனரை விட யப்பானியரோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.[31] இந்த ஆய்வில் க்ருதப்பட்ட ஆய்வுக்கான வியட்நாமியர்கள் கின் இனக்குழு மக்கள் ஆவர். இவர்களே வியட்நாமில் 80% அளவு மக்கள்தொகையினராக அமைகின்றனர்.[30]

தொன்மமும் தொடக்கநிலை வரலாறும்[தொகு]

தொன்மவியல்படி, முதல் வியட்நாமியர் ஆவு சோ எனும் துறக்க உலகத் (வானுலகத்) தேவதைக்கும் இலாசுலோங் குவான எனும் தும்பிக் கடவுளுக்கும் பிறந்தவர் ஆவர். அவர்கள் திருமணம் செய்துகொண்டு 100 முட்டைகளையிட்டனர். இவற்றில் இருந்து முதல் நூறு குழந்தைகள் பிறந்தனர். இவர்களது மூத்தமகன் கூங் எனும் அரசனாக ஆட்சிபுரிந்தான்.

முதல் வியட்நாமியர்கள்[தொகு]

மிகப் பழைய வியட்நாமியர்கள் இந்தோனேசியத் தீவுக் கூட்ட்த்தில் இருது மலாய் தீவகம், தாய்லாந்து வழியாக தோங்கின் கழிமுகப்படுகையின் சிவப்பு ஆற்று விளிம்புகளில் குடியேறும்வரை மெதுவாகப் படிப்படியாக நகர்ந்து வந்துள்ளனர் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். தொல்லியலாளர்கள் சாவகம், மலேசியா, தாய்லாந்து, பர்மாவின் வடக்குப் பகுதிவரை பிந்தைய பிளிசுடோசீன் காலக் கற்கருவிகளைப் பின்பற்றி ஆய்வு செய்கின்றனர். இவையே தென்கிழக்காசியாவில் பயன்பட்ட முதல் கற்கருவிகளகவும் கருதப்படுகின்றன. மேலும், இதே நேரத்தில் வடக்கு பர்மாவிலும் சீனாவிலும் நிலவிய இமையமலைத் தொடர்ச்சி ஒரு பனிநிலை அரணாக அமைந்து தென்கிழக்காசிய மக்களைத் தனிமைப்படுத்தியதாகவும் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். கடந்த பெருமப் பனியூழிக் காலத்தில் (கி.மு 25,000-18,000), கடல்நீர் மட்டங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. இதனால். தீவுகளிலும் தீவகக் கடலோரங்களிலும் மேலீடாக இருந்த நீர் மட்டம் குறைந்து, சுந்தா எனும் கண்டவிளிம்புத்தட்டை நீர்மட்ட்த்தில் இருந்து வெளிப்பட வைத்தது.

நீரில் இருந்து வெளிப்பட்ட சுந்தா கண்டவிளிம்புத் தட்டு மாபெரும் உப்பளச் சமவெளியாக அமைந்ததாகக் கருதப்படுகிறது, இதனால், முன்பு இப்பகுதியைப் பயன்படுத்திய் மக்கள் மற்ற கடலோரப் பகுதிகளுக்கும் தீவுப் பகுதிகளுக்கும் குடியேறப் நேர்ந்துள்ளது. பின்னர், பனியாறுகள் கரைந்ததும், சுந்தா கண்டவிளிம்புத் தட்டு மீண்டும் நீருள் மூழ்கியது. இவ்விடத்தில் மேலீடான நீர்மட்டமே அமைவதால், சிறுபடகுகளில் வணிகரும் பயணிகளும், உயரலைகளும் கொந்தளிப்புகளும் உள்ள ஆழ்கடல் ஏதங்கள் ஏதுமின்றி, பயணம் செய்ய முடிந்தது. இவ்வாறாக, இந்தப் பகுதியின் புவிப்பரப்பியலும் பண்பாடுகள் இங்கே எழுச்சிகாண பெரும்பங்காற்றியுள்ளது. நிலப்படத்தில் காட்டியுள்ளது போல, சுந்தா கண்டவிளிம்புத் தட்டுக்கு வெளியே கடல் ஆழமாக அமைகிறது. அச்சமூட்டும் ஆழமான இந்தக் கடற்பகுதியில், சீன சோங் அரசகுலப் (கி.பி 960-1279) போர்க்கலங்கள் கடக்கும் வரை (இவை பிந்தைய ஐரோப்பியப் படைப் போர்க்கலங்களின் முன்னோடி) எவருமே பயணம் செய்ததில்லை.

பனியாறுகள் உருகியதும் இந்தக் கடற்கரையோரங்களில் நீர்மட்டம் உயர்ந்தது; வணிகரும் மற்ற பயணியரும் தாம் விரும்பியபடி மீண்டும் சிறுபடகுகளில் பயணம் செய்து பிறபகுதிகளுக்குச் செல்லவோ அல்லது தம் சமயக் கருத்துகளை இப்பகுதிகளிலேயே பரப்பவோ முடிந்தது. அடுத்த 4000 ஆண்டுகளுக்கு, அதாவது கி.மு 8000 வரை மக்கள் தென்கிழக்காசிய நிலப்பகுதி வழியாக நகர்ந்து தோங்கின் கழிமுகப் படுகையை நோக்கிச் செல்லலாயினர்; சிலர் இடைப்பகுதிகளில் தங்கி வாழலாயினர். முடிவாக, புலம்பெயர்ந்து வந்த இம்மக்களின் கால்வழியினர் புதிய கற்கால வளர்ச்சியை கி.மு 8000 முதல் கி.மு 800 கால இடைவெளியில் அடைந்தனர். அந்நிலையில் எளிய கற்கருவிகளைப் பயன்படுத்தினர். இம்மக்களின் பண்பாட்டு எச்சங்களும் கோவாபிங்கியப் பண்பாடும் சிவப்பாற்றின் ஓரத்திலும் தோங்கின் கழிமுகப் படுகையில் அமைந்த கோவா பின் குகைகளில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இடைநிலைப் புதிய கற்காலகட்டத்தில் ( கி.மு2500 முதல் கி.மு 2000 வரையில்), இன்றைய வியட்நாம் பகுதியில் மேலும் பல்வேறு மக்களும் வந்து தோங்கின் கழிமுகப் படுகையில் நடுவில் உள்ள பாசு சோன் மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். இவர்கள் கோவாபிங்கிய நீக்கிரிட்டோக்களை விட உயரமானவர்களாகவும் மென்தோலினராகவும் உள்ளனர்; இவர்கள் கூடைமுடையும் கலையில் வல்லவர்களாக விளங்கினர்; மேலும், இவர்கள் மெருகேற்றிய இருவிளிம்புக் கற்கருவிகளைச் செய்து பயன்படுத்தினர்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "The world factbook". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-11-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. [1] United States Census Bureau. Retrieved 14 November 2013
  3. "The World Factbook — Central Intelligence Agency". www.cia.gov. 2010-12-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-11 அன்று பார்க்கப்பட்டது.
  4. Étude de la Transmission Familiale et de la Practique du Parler Franco-Vietnamien (in French) Retrieved on 22-12-2015.
  5. Statistics, c=AU; o=Commonwealth of Australia; ou=Australian Bureau of. "Main Features – Country of birth". www.abs.gov.au.
  6. Vietnamese in Taiwan fear an anti-Vietnam backlash may soon ensue பரணிடப்பட்டது மே 17, 2014 at the வந்தவழி இயந்திரம்
  7. "Archived copy". 2012-03-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-02-17 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  8. [2]. Retrieved on 2014-06-15.
  9. "法務省:【在留外国人統計(旧登録外国人統計)統計表】". www.moj.go.jp.
  10. "Malaysia to raise minimum wage for Vietnamese laborers". Thanh Nien News. 1 March 2013. Archived from the original on 11 ஜனவரி 2014. https://web.archive.org/web/20140111085255/http://www.thanhniennews.com/2010/pages/20130101-malaysia-raise-minimum-wage-for-vietnamese-laborers.aspx. பார்த்த நாள்: 11 January 2014. 
  11. "Table 1.3: Overseas-born population in the United Kingdom, excluding some residents in communal establishments, by sex, by country of birth, January 2014 to December 2014". Office for National Statistics. 27 August 2015. 3 May 2016 அன்று பார்க்கப்பட்டது. Figures given are the central estimates. See the source for 95 per cent நம்பக இடைவெளிs.
  12. "Vietnamese Community in Great Britain". Runnymede Trust. 2020-04-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-12-19 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Obsah nenalezen – ČSÚ" (PDF). www.czso.cz.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-11 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Many new Syrian immigrants".
  16. "Bevolking; generatie, geslacht, leeftijd en herkomstgroepering, 1 januari" (Dutch). Statistics Netherlands. September 3, 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  17. Việt Nam và Thái Lan hợp tác dạy tiếng Việt பரணிடப்பட்டது 2020-01-09 at the வந்தவழி இயந்திரம். Vietbao.vn (2008-07-14). Retrieved on 2011-05-30.
  18. 18.0 18.1 "Archived copy". June 17, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 8, 2009 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-11 அன்று பார்க்கப்பட்டது.
  20. "Macau Population Census". Census Bureau of Macau. May 2012. 22 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  21. Vietnamese – Facts and figures – Te Ara Encyclopedia of New Zealand. Teara.govt.nz (2009-03-04). Retrieved on 2011-05-30.
  22. Người Việt ở Phần Lan náo nức chuẩn bị Tết Mậu Tý – Tiền Phong Online பரணிடப்பட்டது 2012-05-29 at Archive.today. Tienphong.vn. Retrieved on 2011-05-30.
  23. All-Ukrainian Population Census 2001: The distribution of the population by nationality and mother tongue State Statistics Committee of Ukraine. Retrieved 4 September 2012
  24. Népszámlálás 2011 பரணிடப்பட்டது 2019-07-17 at the வந்தவழி இயந்திரம்.Retrieved on 2013-03-28.
  25. Bộ Ngoại giao Việt Nam பரணிடப்பட்டது மே 3, 2007 at the வந்தவழி இயந்திரம்
  26. Pew Research Center: The Global Religious Landscape 2010.
  27. 27.0 27.1 வார்ப்புரு:Vi icon "Cộng đồng người Việt Nam ở nước ngoài". Quê Hương. 2005-03-09. Archived from the original on 2006-12-24. https://web.archive.org/web/20061224034320/http://www.quehuong.org.vn/vi/nr041215095635/nr050107191630/ns050111144902. பார்த்த நாள்: 2007-02-22. 
  28. Ivanova R; Astrinidis A; Lepage V et al. (December 1999). "Mitochondrial DNA polymorphism in the Vietnamese population". Eur. J. Immunogenet. 26 (6): 417–22. doi:10.1046/j.1365-2370.1999.00184.x. பப்மெட்:10583463. http://doi.org/10.1046/j.1365-2370.1999.00184.x. 
  29. Ivanova RExpression error: Unrecognized word "etal". (December 1999). "Mitochondrial DNA polymorphism in the Vietnamese population". Eur. J. Immunogenet. 26: 417–22. doi:10.1046/j.1365-2370.1999.00184.x. பப்மெட்:10583463. 
  30. 30.0 30.1 Genographic Project / Your Regional Ancestry: Reference Populations, retrieved 21 August 2015
  31. "Mission accomplished: Researchers successfully sequence Vietnamese human genome". 26 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமியர்&oldid=3670553" இருந்து மீள்விக்கப்பட்டது