அங்குல் எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அங்குல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அங்குல் (한글) அல்லது
சோசனவுல்
வகை Featural alphabet
மொழிகள் கொரிய மொழி
சியா-சியா (2009ம் ஆண்டு நிலவரம்)[1][2][3]
உருவாக்கியது அரசர் பெரும் செயோங்
காலக்கட்டம் 1443 முதல் இன்றுவரை
மூல முறைகள் artificial script
அங்குல் (한글) அல்லது
சோசனவுல்
ஒருங்குறி அட்டவணை U+AC00 to U+D7A3,
U+1100 to U+11FF,
U+3131 to U+318E,
U+FFA1 to U+FFDC
ஐஎஸ்ஓ 15924 Hang
Hangulpedia.svg

அங்குல் (Hangul) என்பது கொரிய மொழியின் தாயக எழுத்துமுறை ஆகும். இது சீன-கொரிய படவெழுத்து முறையிலிருந்தும் வேறுபட்டது. 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இவ்வெழுத்து முறை இன்று வட கொரியா, தென் கொரியா] ஆகிய நாடுகளில் அரச அலுவல் மொழிக்குரிய எழுத்தாகவும், சீனாவின் யன்பியன் கொரியத் தன்னாட்சிப் பகுதியில் இணை மொழியான கொரிய மொழிக்குரிய எழுத்தாகவும் விளங்குகின்றது. ஆசுத்திரோனீசிய மொழியான சியா-சியா மொழிக்கான எழுத்துக்களை உருவாக்கும் திட்டத்தில் அங்குல் எழுத்துமுறையைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்குல் எழுத்துக்கள் அசைத் தொகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதியும், 24 அங்குல் எழுத்துக்களில் குறைந்தது இரண்டு எழுத்துக்களையாவது கொண்டுள்ளன. இவற்றில் 14 மெய்யெழுத்துக்களில் இருந்தும், 10 உயிரெழுத்துக்களில் இருந்தும் குறைந்தது ஒவ்வொன்றாவது அடங்கியிருக்கும். இந்த அசைத் தொகுதிகளை இடமிருந்து வலமாகக் கிடைநிலை வரிசைகளிலோ அல்லது மேலிருந்து கீழாக நிலைக்குத்தாக அமையும் நிரல்கள் வலமிருந்து இடமாகச் செல்லும்படியோ எழுதலாம். தொடக்கத்தில் அங்குல் மேலும் பல எழுத்துக்களைக் கொண்டிருந்தது.

குறிப்புகள்[தொகு]

  1. Indonesian tribe to use Korean alphabet
  2. (LEAD) Indonesian tribe picks Korean alphabet as official writing system
  3. Indonesian Tribe Picks 'Hangeul' as Writing System
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குல்_எழுத்துமுறை&oldid=1754822" இருந்து மீள்விக்கப்பட்டது