அசை (ஒலியியல்)
மொழியியலின் ஒரு பிரிவான ஒலியியலில் அசை என்பது, பேச்சொலித் தொடர் அமைப்பின் ஓர் அலகைக் குறிக்கும். பேச்சொலியின் அடிப்படைத் துணுக்கு அசை ஆகும். அசைக்குப் பொருள் கிடையாது. ஒரு மொழியில் இடம்பெறும் சொற்கள், உருபன்கள், தொடர்கள் போன்றவை அசைகளால் ஆனவை. இவற்றின் அமைப்பு மொழிக்கு மொழி வேறுபட்டு அமையலாம். ஒரு சொல் அல்லது உருபன் ஓர் அசையை அல்லது அதற்கு மேற்பட்ட அசைகளைக் கொண்டிருக்கக் கூடும். ஒன்று, இரண்டு, மூன்று அசைகளைக் கொண்ட சொற்களைத் தமிழில் முறையே ஓரசைச் சொற்கள், ஈரசைச் சொற்கள், மூவசைச் சொற்கள் என்பர். நாலசைச் சொற்கள், ஐந்தசைச் சொற்களும் உள்ளன எனினும் தமிழில் இத்தகைய சொற்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அம்மா என்னும் சொல்லில் அம், மா என இரண்டு அசைகள் உள்ளன. இது போலவே படகு என்னும் சொல்லில் ப, ட, கு என்னும் மூன்று அசைகள் உள்ளன. எனவே அம்மா ஈரசைச் சொல்லும், படகு மூவசைச் சொல்லும் ஆகும்.
அசையமைப்பு
[தொகு]ஒலியியலின் பெரும்பாலான கோட்பாடுகளின் படி அசைகளைப் (σ) பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். இவை:
- முதல் அசை (ω): மெய்யொலி, சில மொழிகளில் கட்டாயமானது, வேறு சில மொழிகளில் விருப்பத்துக்கு உரியது வேறு சில மொழிகளில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுகிறது.
- இடை அசை (ν): மெல்லொலி, பல மொழிகளில் இது கட்டாயம்.
- இறுதி அசை (κ): மெய்யொலி, சில மொழிகளில் இது விருப்பத்துக்கு உரியது, வேறு சிலவற்றில் இது கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றது அல்லது தடுக்கப்பட்டுள்ளது.
ஒலியியல் (Phonetics)
[தொகு]ஒலியியல் என்பது பேச்சொலிகளை ஆராயும் ஒரு அறிவியில் துறையாகும். ஒரு மொழியைப் பேசும்போது பல ஒலிகள் தோன்றுகின்றன. அவ்வொலிகளையே பேச்சொலிகள் என்கிறோம். அப்பேச்சொலிகளை அறிவியல் முறைப்படி ஆராய்வதையே ஒலியியல் என்கிறோம். ஒலி உறுப்புகளால் ஒலிகள் எழுப்படும் முறை, காற்றில் அது கலந்து செல்கின்ற நிலை கேட்பவர்கள் அதை உணர்ந்து கொள்கின்ற முறை ஆகியவை இவ்வியலில் இடம் பெறுகின்றன. ஒலியை ஆராயும் முறையில் மூன்று முறைகள் முக்கியமானவையாக உள்ளன.
1.பௌதிக ஒலியியல் : (Acoustic Phonetics)
[தொகு]இதில் பேச்சொலியின் பௌதிகத்தன்மை ஆராயப்படுகின்றன. ஒலி உறுப்புகளின் அசைவுகள், ஒலி உருப்பில் உள்ள காற்றில் உண்டாக்கப்படும் அதிர்ச்சி ஆகியவை ஆராயப்படுகின்றன. இவற்றை அளந்து அறிய பலவிதமான அறிவியில் கருவிகளையும் கணிதத்தையும் ஒலியியலாளர் பயன்படுத்துகின்றனர்.
2. கேட்பொலியியல் : (Auditory Phonetics)
[தொகு]இது மனிதனுடைய கேட்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆராய்வதாகும். எனவே இது ஒலி ஆராய்ச்சிக்கு பெரிதாக உதவுவதில்லை.
3. உச்சொரிப்பொலியியல் : (Articulatory Phonetics)
[தொகு]மனிதனுடைய உடலுறுப்புகளில் சிறப்பாக ஒலி உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒலியின் பிறப்பை ஆராயும் இயலை உச்சொரிப்பொலியியல் என்கிறோம். உடல் உறுப்புகளும் அவற்றின் அசைவுகளும், மனித இனத்திற்குப் பெரும்பாலும் ஒன்றுபோல் இருக்கின்றன. அதனால் இவ்வுறுப்புகளின் அளவுகளின் அடிப்படையில் ஒலிகளை ஆராய்வது அறிவியல் முறையாகும். உதடு, நாக்கு ஆகியவற்றின் அசைவுகளை அறிந்து கொள்வதற்கு அதிகமான பயிற்சி தேவையில்லை. விளக்கிக் காட்டினால் ஒவ்வொருவரும் இவ்வுறுப்புகளை இயக்கி ஒலிகளை உண்டாக்குவார்கள். இவ்வகை ஒலிகளை ஆராய்வதே உச்சொரிப்பொலியியல் எனப்படுகிறது.
ஒலி உறுப்புகளும் அவற்றின் தொழில்களும்
[தொகு]மனிதனிடம் உதடு, பல், நாக்கு, அண்ணம், உள்நாக்கு, முன்தொண்டை, க்கறை, காற்றுக்குழல், காற்றுக்குழல் மூடி, குரல்வளை, ஒலிதசைகள், நுரையீரல்கள் முதலியன ஒலி உறுப்புகளும், ஒலிகள் தோன்றுவதற்கு உதவும் உறுப்புகளும் அமைந்திருக்கின்றன. இவற்றின் பல்வேறு தொழிற்பாட்டால் பல்வேறு ஒலிகளை மனிதன் உண்டாக்குகிறான்.
ஒலி உறுப்புகளை இருவகைகளாகப் பிரிக்கலாம் :
1.ஒலிப்பான்
2.ஒலிப்புமுனை
1. ஒலிப்பான் (Articulator) :
[தொகு]இது தங்குதடையின்றி அசைகின்ற ஒலி உறுப்பாகும் இவ்வுறுப்பினை வளைத்தும் நெளித்தும் பலவாறு பயன்படுத்தலாம். எ.கா. 1. நாக்கு 2. இதழ்கள்
2. ஒலிப்பு முனை (Points of Articulation)
[தொகு]இது வாயின் மேற்பகுதியாகும். இதில் அசையாத இடங்கள் அடங்கும் இவ்வடிவங்களை ஒலிப்பான் சென்று தொடலாம். இவ்வாறு ஒலிப்பானும் ஒலிமுனையும் பொருந்துவதை ஒலிப்பிடம் என்று சொல்கிறோம். எ.கா. ‘நுனிநா’ ஒரு ஒலிப்பான் நுனி, அண்ணம் ஒரு ஒலிப்பு முனை ஆகும் நுனிநா, நுனி அண்ணம் ஒலி ஒலிப்பிடம் ஆகும்.
உயிரொலிகள் :
நுரையீரலிருந்து வெளிவரும் காற்று மற்ற ஒலி உறுப்புகளால் தங்கு தடையின்றி வெளிவரும் பொழுது எழும் ஒலிகளை உயிரொலிகள் என்கிறோம். எ.கா. ‘அ’ முதல் ‘ஔ’ வரை
மெய்யொலிகள் :
நுரையீரலிலிருந்து வெளிவரும் காற்று, ஒலி உறுப்புக்கள் அதிர்வதாலோ, காற்று அடைபடுவதாலோ வெளிவரும் காற்றை அதிரச்செய்வதாலோ பிறக்கும் ஒலிகளை மெய்யொலிகள் என்கிறோம்.
மெய்யொலி வகைகள்
[தொகு]மெய்யொலியை பொதுவாக ஐந்து வகைப்படுத்தலாம்.
1. அடைப்பொலி - க்,ச்,ப்,ட்
2. உரசொலி - மொழிக்கு முதலில் வரும் சகரம்
3. மூக்கொலி - ங் ஞ் ண் ந் ம் ன்
4. மருங்கொலி - ல்,ள்
5. ஆடொலி - ர்,ற்
1. அடைப்பொலி (Stops)
இவ்வொலிகளை அடைப்பான் வெடிப்பொலி எனவும் வழங்குவர். ஆங்கிலத்தில் Plosives எனவும் குறிப்பிடுவர். அடைப்பொலிகள் தோன்றுவதற்கு இரண்டு செயல்கள் முக்கியமானவை. 1. காற்று மூக்கறையில் உள்ளே செல்லாதவாறு மூக்கறை வாயிலை நன்றாக அடைத்துக் கொள்ளவேண்டும். 2. வாயில் எங்காவது ஒரு இடத்தில் முற்றிலும் அடைத்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த இரண்டாவது அடைப்பைத் திடீரென திறக்கும் பொழுது அடைப்பொலிகள் உண்டாகும். எ.கா. க், ச், ட், ப்
2. உரசொலிகள் (Fricatives) :
காற்று வரும் ஒலியை குறுக்கி ஒரு சிறு இடுக்கின் வழியாக உராய்வுடன் செல்லும்போது பிறப்பவை உரசொலிகள் ஆகும். மொழிக்கு முதலில் ‘ச’ வருகிற இடமெல்லாம் தமிழில் உரசொலிகள் எனப்படுகின்றன.
3. மூக்கொலிகள் (Nasals) : இதழிலிருந்து உள்நாக்கு வரையில் வாயில் எங்காவது ஒரு இடத்தில் அடைத்துக்கொண்டு மூக்கறை வாயிலைத் திறந்து காற்றை அதன் வழியாக வெளியிடும்பொழுது மூக்கொலிகள் பிறக்கின்றன. எ.கா. : ங, ஞ, ண, ந, ம, ன
4. மருங்கொலிகள் (Laterals)) :
காற்றின் போக்கை நடு இடத்தில் தடுத்துக்கொண்டு அதனை இருபக்கமோ, ஒரு பக்கமோ செலுத்தும்போது பிறக்கும் ஒலிகளை மருங்கொலிகள் என்கிறோம். எ.கா. : ல், ள்
5. ஆடொலி (Rhotics) :
வளைந்து நெளியும் ஆற்றலுடைய நெகிழ்ந்த உறுப்புக்களை வேகமாக ஆடவிடுவதால் எழும் ஒலி ஆடொலி ஆகும். எ.கா. : ‘ர்’ நாக்கு அதிர்வதால் ஏற்படுகிறது. ஆடொலியின் மற்றொருவகை அடியொலி ஆகும். இதனை வருடொலி என்றும் சொல்வார்கள். ஆடும் பகுதி ஓரே ஒரு அடியோடு நின்றுவிடுமாயின் அது அடியொலி தமிழில் ‘ர்’ ‘ற்’ என இரண்டு ஒலிகள் உள்ளன. இதில் ‘ரகரம்’ அடியொலியாக வருகிறது.
உயிரொலிகள்
[தொகு]நுரையீரலிருந்து வெளிவரும் காற்று மற்ற ஒலி உறுப்புக்களால் தங்கு தடையின்றி வெளிவரும்பொழுது எழும் ஒலிகளை உயிரொலிகள் என்கிறோம். உயிரொலிகளின் உச்சரிப்பில் மூன்று தொழில்கள் சிறப்பாகக் கவனிக்கப்படவேண்டும். 1. உதடுகளின் வடிவம் 2. நாக்கு, அண்ணத்தை நோக்கிச் செல்லும் உயரம். 3. நாக்கு முன்னோக்கிச் செல்லும் அளவு இம்மூன்றையும் தவிர மூக்கறை வாயிலைத் திறந்தோ, அடைத்தோ வைத்து கொள்வதாலும், வளைவாலும் உயிரொலிகள் பலவகை பிறக்கின்றன. எ.கா : உ, ஊ, ஒ, ஓ ஆகிய உயிர்களை உச்சரிக்கும் பொழுது உதடுகள் குவிகின்றன. இவ்வாறு உதடுகள் குவிந்து எழும்போது உண்டாகும் உயிர்களை இதழ்குவி உயிர்கள் (Rounded Vowels) என்று சொல்கிறோம்.
சில உயிர்ஒலிகளை ஒலிக்கின்றபோது உதடுகள் இயற்கையாக இருக்கின்றன அல்லது உதடுகள் விரிகின்றன. இவ்வாறு உதடுகள் விரிவடைவதாலோ அல்லது இயற்கையாக இருக்கும் பொழுதோ எழும் ஒலிகளை இதழ்விரி உயிர்கள் Unrounded Vowels என்கிறோம். இவ்வுயிர்களை இதழ்குவியா உயிர் எனவும் வழங்குவர்.
விறைப்புயிர்களும் நெகிழ்வுயிர்களும் :
தமிழில் நெட்டுயிர்களை அவற்றின் குற்றுயிர்களை விறைப்பாக உச்சரிக்கிறோம். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகியவை விறைப்புயிர்களாகும். தமிழில் உள்ள குறில் உயிர்களை ஒலிக்கும் போது அவ்வளவாக நாக்கு விறைப்பதில்லை அதற்கு மாறாக நெகிழ்ந்த நிலையில் உள்ளது இவ்வாறு நெகிழ்ந்த நிலையில் ஒலிக்கப்படும் குற்றுயிர்களை நெகிழ்வுயிர்கள் என்கிறோம். எ.கா. : அ, இ, உ, எ, ஒ
உயிர் முக்கோணம் :
உயிரொலிகளில் அடிப்படையான ஒலிகள் அ, இ, உ ஆகியவையாகும். இதனை உயிர் முக்கோணம் (Vowel Tri Angle) என்கிறோம். நாக்கு படிந்திருக்கும் நிலையில் அகரம் உண்டாகிறது. நாக்கு உள் நாக்கை நோக்கி எழும்போது ‘உகரம்’ உண்டாகிறது. இகரத்துடன் எகரத்தையும், உரத்துடன் ஒகரத்தையும் சேர்த்து கூறுவர். பேச்சு வழக்கில் இகரம் எகரமாகவும், உகரம் ஒகரமாகவும் திரிகின்றது. எ.கா. : இலை -> எலை, இடம் -> எடம், உலகம் -> ஒலகம், இழை -> எலை, உலக்கை -> ஒலக்கை
விறைப்புயிர்கள் :
பேச்சு உறுப்புகளின்தசையில் ஒலிக்கும் போது ஏற்படும்விறைப்பின் தன்மையினால் விறைப்புயிர்கள் உண்டாகின்றன. தமிழில் உள்ள நெடில் உயிர்களை விறைப்புயிர்கள் என்கிறோம்.
ஈரூயிர் :
தமிழில் ஐ, ஔ என்ற இரண்டு உயிரொலிகள் உள்ளன. இவை இரு உயிர்களின் சேர்க்கையில் தோன்றிய காரணத்தால் ஈருயிர் (Dipthongs) எனப்படும். இரண்டு உயிராலிகளை ஓரே ஒலிகளாக இணைத்து ஓர் ஒலியனாக வழங்கும்போது அதனை ஈருயிர் என்கின்றனர். தமிழல் ஐ, ஔ ஈருயிர்களாகும். அ + இ = ஐ என்னும் ஒலியனும் அ + உ = ஔ என்னும் ஒலியனும் தோன்றியுள்ளன.
அரை உயிர் :
தமிழ் இலக்கண அறிஞர்கள் கூறுகின்ற உடம்படு மெய்யை ஒலி நூலார் அரை உயிர்கள் (SemiVowels) என்கின்றனர். ய, ர, வகரம் ஆகியவை அரைஉயிர்கள் ஆகும். உயிரொலிகளின் பிறப்பின் தன்மையை இவகைள் பெறுகின்றன. ஆனால் மெய்யொலிகளுக்குரிய ஒலிப்பிடத்தைப் பெறுகின்றன. இவை உயிரொலிகளை இணைக்கும் பாலமாக இவை அமைகின்றன. வாழை + இலை = வாழையிலை
உயிர் நிழல் :
(அளபெடை) உயிரொலி இரண்டு மாத்திரைகளை அதிக அளவாகப் பெறும் இரு மாத்திரைக்கு அதிகமாக உயிரொலிகள் அளபெடுத்தும் வந்தால் அதனை உயிரளபெடை என்கிறோம்.
மூவளவு இசைத்தல் :
ஆய்தம் : தமிழ்மொழியில் உயிராலியிலும் சேராமல், மெய்யொலியிலும் சேராமல் ஆய்தம் என்ற ஓர் ஒலி உள்ளது. தொல்காப்பியர் இதனை சார்பொலி என்கிறார் இது தனி ஒலியாக மொழியிலில் வருவது இல்லை. எதாவது ஒரு ஒலியின் திரிபாக வருகிறது. முள் + தீது = முட்டீது கள் + தீது = கட்றீது இதனை ஆராய்ந்த மாணிக்க நாயக்கர் ஆங்கில ஒலியின் உரசொலியாகக் கருதுகிறார்.
(i) இசையொலி :
குரல் வளையில் உள்ள குரல் நார்களின் (அ) தசை நார்களின் வழியாக காற்று வெளியாகும் போது குரல் நார்களில் காற்று பட்டும் படாமலும் வெளியாகும். இநநிலையில் ஒலி அசைவுகள் தோன்றுகின்ற இவ்வசைவுகளின்போது உண்டாகும் ஒலிகளை இசைஒலிகள் என்கிறோம். எ.கா. : A B G D - இது பெரும்பாலும் அடைப்பொலியாக வரும்.
(ii ) இசைஇல் ஒலி :
குரல்வளையில் நெகிழும் தன்மையுள்ள இரண்டு தசைநார்கள் உள்ளன. காற்றுகுரல் நார்களில் எந்தவிதமான அசைவும் ஏற்படாமல் ஒலி தோன்றுமானால் அதை இசை இல் ஒலி என்கிறோம். மாற்றொலி : (Allophone) தொல்காப்பியர் குறிப்பிடுகின்ற குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகியவற்றை மொழியியலாளர் மாற்றொலி வகையைச் சார்ந்தவையாக கருதுகின்றனர். இம்மூன்று எழுத்துக்களும் முதலெழுத்துக்கள்ன சிறப்பிடத்தையே தமக்குரிய பிறப்பிடமாகக் கருதுகின்றன.
ஒலி எழுதும் முறை
[தொகு](Phonetic Transcription) பேச்சொலிகள் எல்லாவற்றுக்கும் எழுத்து வடிவம் இல்லை. பேச்சொலிகள் அனைத்துக்கும் வரிவடிவம் தருவதனை ஒலி எழுதும் முறை என்கிறோம். உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் காணப்படும். எல்லா ஒலிகளையும் தொகுத்து ஒரு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்அட்டவணையை உலக ஒலி ஆய்வுக்கழகம் தயாரித்துள்ளது.
வல்லொலி, மெல்லொலி மாற்றம் :
தமிழில் வல்லொலிகள் எல்லா நலிகளிலும் வன்மையாக ஒலிப்பதில்லை மொழி முதல் மொழி இடை, இரட்டிக்கும் இடம் ஆகிய இடங்களில் வன்மையாக ஒலிக்கின்றன. ஏனைய இடங்களில் மென்மையாக ஒலிக்கின்றன. கப்பல், அகம் ஆகிய எடுத்தக்காட்டுகளில் ககரம் ஒர நிலையில் K ஆகவும் ஒரு நிலையில் G ஆகவும் ஒலிக்கின்றது. இதைத்தான் வல்லொலி, மெல்லொலி மாற்றம் என்கிறோம்.
மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை நூல்கள்
[தொகு]1. மொழியில் வரலாறு