யப்பான் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யப்பான் கடல்

யப்பான் கடல் (Sea of Japan) மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆசிய நிலப்பகுதி, யப்பானியத் தீவுக்கூட்டம் மற்றும் உருசியாவின் சக்காலின் தீவு ஆகியவற்றுக்கிடையே பரவியுள்ள கடல் ஆகும். இது யப்பான், வடகொரியா, உருசியா, மற்றும் தென்கொரியா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது. முழுவதும் பசிபிக் பெருங்கடலால் முற்றிலும் சூழப்பட்டுள்ள காரணத்தால் மத்திய தரைக்கடல் போலவே இக்கடலிலும் அலைகள் எழுவதில்லை.[1] இத் தனித்துவம் காரணமாக இக்கடலில் நீரின் உப்புத்தன்மை, கடல்வாழ் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பெருங்கடலினின்றும் வேறுபட்டு காணப்படுகின்றன. இக்கடலில் பெரிய தீவுகளோ, குடாக்களோ, முனைகளோ ஏதும் காணப்படவில்லை. இக்கடலின் உள்வாங்கும் மற்றும் வெளியேற்றும் நீர்மட்டமானது இதனருகிலுள்ள நீரிணைப்புகள், கடல்கள் மற்றும் பசிபிக் பெருங்கடலால் தீர்மானிக்கப்படுகிறது. இக்கடலில் கலக்கும் ஆறுகள் மொத்தமாக ஒரு விழுக்காடு அளவு நீரை மட்டுமே இக்கடலில் கலக்கின்றன.

யப்பான் கடல் நீரில் ஆக்சிஜன் செறிவு அதிகமாகக் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் உயிரினப் பல்தன்மை உற்பத்திக்கு இது முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் மீன்பிடித்தல் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாகத் திகழ்கிறது. அரசியல் காரணமாக இங்கு ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கிழக்கு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கு இக்கடல் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

பெயர்கள்[தொகு]

சப்பான் கடல் (Sea of Japan) என்பது ஆங்கிலேயர்களால் இக்கடலுக்கு வைக்கப்பட்ட பெயராகும். பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் இவ்வாறே அழைக்க்கப்படுகிறது. எனினும் இக்கடலைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் இது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கடலின் மீது மேலாதிக்கம் கொண்ட நாடுகளை இதன் மூலம் இனங்காண முடிகிறது. சீன மொழியில் இக்கடல் ரைபன் கை Rìběn hǎi(日本海) எனவும், யப்பான்சுகொயே மோர் (Японское море, literally "Japan Sea") என உருசிய மொழியிலும், சோசியான் டோங்கேயி அல்லது சோசியான் கிழக்குக் கடல் (조선동해, literally "Joseon East Sea") என வடகொரிய மொழியிலும், டோங்கேயீ அல்லது கிழக்குக் கடல் (동해, literally "East Sea") என தென்கொரிய மொழியிலும் அழைக்கப்படுகிறது. இதன் பெயர்கள் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. தென்கொரிய மொழியில் கிழக்குக் கடல் என்றழைக்கப்படுவதே ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய மொழிகளில் பிரெஞ்சு மொழியில் இதன் பெயர் "மெர் டு சப்பான்(Mer du Japon) என்பதாகும் மேலும் சப்பானிசுசெசு மியர் (Japanisches Meer) என செருமனியிலும், இத்தாலியில் மர் டெல் கியாப்பன் (Mar del Giappone) எனவும், எசுப்பானிய மொழியில் மர் டெல் சப்பான் ("Mar del Japón) எனவும் அழைக்கப்படுகிறது.

புவியியல்[தொகு]

Map showing Japanese archipelago, Sea of Japan and surrounding part of continental East Asia in Early Miocene (23–18 Ma).
Map showing Japanese archipelago, Sea of Japan and surrounding part of continental East Asia in Middle Pliocene to Late Pliocene (3.5–2 Ma).

யப்பான் கடலானது முற்காலத்தில் முழுவதும் நிலங்களால் சூழப்பட்ட, கிழக்கு ஆசியாவுடன் தொடர்பு கொள்வதற்கான நிலப்பாலமாக விளங்கியது.[2] முந்தைய மயோசினியக் காலகட்டத்தில் சப்பான் வளைவு உருவாகத் தொடங்கியது.[3] முந்தைய மயோசினியக் காலத்தில் சப்பான் கடல் திறப்பு மெல்ல மெல்ல அகன்று யப்பானிய நிலப்பகுதி வடக்கு, தெற்கு எனப் இரண்டாகப் பிரிந்தன.[3] மயோசினியக் காலத்தில் யப்பான் கடல் மேலும் விரிவடைந்தது.[3] அதன் பின்னர் பிந்தைய மயோசினியக் காலத்தில் சப்பான் நிலப்பகுதி பல தீவுக்கூட்டங்களாக பிளவடைந்தது[3] இக்கால கட்டத்தில் யப்பானின் வடகிழக்குப் பகுதியில் உயர் மலைத் தொடர்கள் எழும்பத் தொடங்கின.[3]

நீரிணைகள்[தொகு]

தற்பொழுது வடக்கே சாகாலின்தீவு, உருசிய நிலப்பகுதிகள், மேற்கே கொரிய தீபகற்பம், கிழக்கிலும் தெற்கிலும், யப்பானிய ஒக்காயிடோ தீவுகள்,ஒன்சூ, கியுசூ ஆகிய தீவுகளால் சூழப்பட்டதாக அமைந்துள்ளது. இது மற்ற கடல்களுடன் அநிது நீரிணை வழியாகத் தொடர்புகொண்டுள்ளது. ஆசியநிலப் பகுதி மற்றும்சாகாலின் தீவுகளுக்கிடையேயுள்ள டார்டாரி நீரிணைப்பு, சாகாலின் தீவுகளுக்கும் ஒக்காயிடோ வுக்குமிடையேயுள்ள லா பெரௌசு நீரிணை, ஒக்காயிடோ மற்றும் ஒன்சூ தீவுகளுக்கிடையேயுள்ள சுகாரு நீரிணை, ஒன்சூ மற்றும் கியூசு தீவுகளுக்கிடையேயுள்ள கன்மொன் நீரிணை, கொரிய தீபகற்பத்திற்கும் கியூசு தீவிற்குமிடையேயுள்ள கொரிய நீரிணை ஆகியவையே அவையாகும்.

கொரிய நீரிணையானது மேற்கு கால்வாய் மற்றும் சுசிமா நீரிணையை உருவாக்குகிறது. சுசிமா தீவின் இருபுறங்களிலும் உருவான நீரிணைகள் அண்மைய நிலவியல் காலத்தில் உருவானதாகும். இவற்றுள் மிகப் பழமையானவை சுகாரு மற்றும் சுசிமா நீரிணைகள் ஆகும். இதன் உருவாக்கமானது யப்பானியத் தீவுகளில் நியோசியக் காலத்தைய அதாவது 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிலவிய யானைகளின் இட மாற்றத்தை தடை செய்தது. சமீபத்தில் அதாவது 60,000 ஆண்டுமுதல் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய உருவாக்கமான லா பெரௌசு நீரிணையானது ஒக்காயிடோ தீவுகளைப் பிரித்து முற்காலத்தைய மம்மூத்துகள் நகர்வதைத் தடுத்து நிறுத்தியது.[4] இக்கடலின் நீரிணைகள் 100 மீட்டருக்கும் குறைவான ஆழமே கொண்டவை.இதன் காரணமாகவே யப்பான் கடல் நீரும், கடல் வாழ் உயிரிகளும் பெருங்கடலினின்று வேறாக தனித்துவம் மிக்கனவாக காணப்படுகின்றன.[5]

அமைப்பு[தொகு]

யப்பான் கடல் பரப்பு 978,000 km2 (378,000 sq mi) வரை பரவியுள்ளது. இதன் சராசரி ஆழம் 1,752 m (5,748 அடி) ஆகும். இதன் அதிகபட்ச ஆழம் 3,742 m (12,277 அடி) ஆகும்.இது தென்கிழக்கில் விரிவடைந்து வடகிழக்கே செல்லச்செல்ல குறுகியும் ஒரு கேரட் வடிவில் காணப்படுகிறது. இதனுடைய அதைக கடற்கரை நீளம்7,600 km ஆகும் இதில் பெரும்பகுதி (3,240 km) உருசியப் பகுதியில் அமைந்துள்ளது. கடல் வடக்கு தெற்காக 2,255 km வரை பரந்துள்ளது. இப்பகுதியின் அதிக பட்ச ஆழம் 1,070 km.[6]

வடிநிலங்கள்[தொகு]

யப்பான் கடலில் மூன்று முக்கிய கடல் வடிநிலங்கள் அமைந்துள்ளன. அவை தென்கிழக்கில் யமாட்டோ வடிநிலம், வடக்கில் சுசிமா வடிநிலம், தென்மேற்கில் யப்பானிய வடிநிலம் ஆகியனவாகும்.[4] கடல் தோற்றங்களில் மிகவும் ஆழமானது யப்பானிய வடிநிலமாகும். சுசிமா வடிநிலத்தில் 2300 மீட்டருக்கும் ஆழமான பகுதிகளும் உள்ளன.[6] கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடலின் கண்ட அடுக்குகள் (கண்டத்திட்டு) பரந்து காணப்படுகின்றன, ஆனால் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக கொரியக் கடற்கரைப் பகுதியில் இது குறுகியும் சரசரியாக 30 கி.மீ.ஆகவும் உள்ளது.[5]

கண்டத் திட்டுகள்[தொகு]

இக்கடலில் (44° வடக்கிற்கும் மேல்) மூன்று தனித்துவமான கண்டத் திட்டுகள் காணப்படுகின்றன. இவை மாடிப்படி போன்ற அமைப்பில் காணப்படுகின்றன. இவை சற்றே தெற்காகச் சரிந்து முறையே 900–1400, 1700–2000 and 2300–2600 மீட்டர் ஆழங்களில் கடலில் நீருக்கடியில் ஆழ்கின்றன. இதன் கடைசிப் படிநிலை அமைப்பானது கடலின் மிக ஆழமான பகுதிவரை அதாவது 3500 மீட்டர் வரை மிகவும் செங்குத்தாக இறங்குகிறது. இதன் அடிப்பகுதி தட்டையாகவுள்ளது. ஆனால் இதில் சில பீடபூமிகளும் கடலடி மலைகளின் முகடுகளும் காணப்படுகின்றன. இவை வடக்கிலிருந்து மத்திய கடல் பகுதி வரை 2,300 மீட்டர் வரை பரவியுள்ளன.[5]

கடற்கரைப் பகுதி[தொகு]

யப்பானியக் கடற்கரைப்பகுதி ஓக்குசிரி முகடு, சாடோ முகடு, அக்குசான் கடற்கரை, யாமாட்டோ முகடு, வாகாசா முகடு, ஓகி முகடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். யாமாட்டோ முகடு பகுதியில் கிரானைட், ரியோலைட், பசால்ட் ஆகிய பாறைகள் காணப்படுகின்றன. இதன் அடிப்பகுதி சீரற்ற எரிமலைப்பாறைகளால் ஆனது. இக்கடலின் பெரும்பாலான பிற நிலப்பரப்புகள் கடல் சார்ந்த தோற்றங்களாகும். இதன் கடல் படுகையானது 300 மீட்டர்கள் (980 அடிகள்) வரை கீழிறங்கியுள்ளது. மேலும் கண்ட இயற்கையின் காரணமாக இப்பகுதி சேறு, மணல் மற்றும் பாறைத் துண்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதன் ஆழமான பகுதி 300 மற்றும் 800 மீட்டர்கள் (980 மற்றும் 2,620 அடி) வண்டல் படிவுகளால் ஆனது. இப்படிவுகள் கடற்க்ரைப் பகுதிகளில் நீல நிறத்திலும் ஆழமான பகுதிகளில் சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.[4]

தீவுகள்[தொகு]

இக்கடலில் தென் கொரியாவின் உல்லெங்குடோ தீவைத் தவிர மிகப்பெரிய தீவுகள் எதுவும் காணப்படவில்லை. இதன் சிறிய தீவானது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. பிற இதன் அறியப்பட்ட தீவுகள் மொனெரான் தீவு, ரெபன் தீவு, ரிசிரி தீவு, ஓகுசிரி தீவு, ஓசிமா-ஒக்காயிடோ தீவுகள், சாடோ-நீகாட்டா தீவுகள், ஓகினசிமா-முனகாட்டா தீவுகள், உல்லெங்குடோ, ஆசுகோல்டு, ருசுக்கி தீவு, புடியாட்டின் தீவு ஆகியனவாகும். இதன் கடற்கரைப் பகுதி ஒரு கோடு போல நீண்டு குறைவான பெரிய முனைகள், குடாக்கள் கொண்டு நேராகக் காணப்படுகிறது. சாக்காலின் தீவில் இதன் கடற்கரை எளியதாகவும் சப்பானியத் தீவுகளில் இது சற்றே கரடுமுரடாகவும் உள்ளது.

குடாக்கள்[தொகு]

இக்கடலின் மிகப்பெரிய வளைகுடா உருசியப் பகுதியில் அமைந்துள்ள மகா பீட்டர் வளைகுடா ஆகும். மேலும் சோவெட்சுகயா கவான், விளாடிமிரா, ஓல்கா, போசியெத் ஆகியவையும் உருசியாப்பகுதியில் அமைந்துள்ளன. ஜப்பான் பகுதியில் இசிகாரி, ஒக்காயிடோ, டோயாமா, வாகாசா ஆகியனவும் வடகொரியப் பகுதியில் கிழக்குக் கொரிய வளைகுடாவும் அமைந்துள்ளன. இதன் முக்கிய முனைகள் லாசரிவா, பெச்சனியீ, போவோரோட்னி, குரோமோவா, போகிபி, டைக், கொர்சாகொவா, கிரில்லான், சொயா, நொசாப்பு, தப்பி, நையுடா, ரெபன், ரிசிரி, ஓகுசிரி, சாடோ, ஓகி ஆகியனவாகும்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tides in Marginal, Semi-Enclosed and Coastal Seas – Part I: Sea Surface Height". ERC-Stennis at Mississippi State University. Archived from the original on 2004-03-18. பார்க்கப்பட்ட நாள் 2007-02-02.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. Totman, Conrad D. (2004). Pre-Industrial Korea and Japan in Environmental Perspective. https://books.google.com/books?vid=ISBN9004136266&id=W_Hdu9QrD9YC&pg=PA16. பார்த்த நாள்: 2007-02-02. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Kameda Y. & Kato M. (2011). "Terrestrial invasion of pomatiopsid gastropods in the heavy-snow region of the Japanese Archipelago". BMC Evolutionary Biology 11: 118. எஆசு:10.1186/1471-2148-11-118.
  4. 4.0 4.1 4.2 Sea of Japan, Encyclopædia Britannica on-line
  5. 5.0 5.1 5.2 5.3 A. D. Dobrovolskyi and B. S. Zalogin Seas of USSR. Sea of Japan, Moscow University (1982) (in Russian)
  6. 6.0 6.1 6.2 Sea of Japan, Great Soviet Encyclopedia (in Russian)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யப்பான்_கடல்&oldid=3514059" இலிருந்து மீள்விக்கப்பட்டது