பியொங்யாங்வட கொரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டேடொங் ஆறு இந்நகரம் வழியாக செல்கிறது. 2008 -ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மொத்த மக்கட்தொகை 3,255,288 ஆகும் . பியோங்யாங் நேரடியாக நிர்வகிக்கப்படும் நகரம் மற்றும் வட கொரிய மாகாணங்களுக்கு சமமான அந்தஸ்தைக் கொண்டுள்ளது.
இது கொரியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது[1]. இது கோஜோசியன் மற்றும் கோகுரியோ உள்ளிட்ட இரண்டு பண்டைய கொரிய இராச்சியங்களின் தலைநகராக இருந்தது, மேலும் கோரியோவின் இரண்டாம் தலைநகராகவும் செயல்பட்டது. முதல் சீன-ஜப்பானியப் போரின்போது நகரத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, ஆனால் அது ஜப்பானிய ஆட்சியின் கீழ் புதுப்பிக்கப்பட்டு ஒரு தொழில்துறை மையமாக மாறியது. 1948 இல் வட கொரியா நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பியோங்யாங் அதன் உண்மையான தலைநகராக மாறியது. கொரியப் போரின்போது இந்த நகரம் மீண்டும் அழிக்கப்பட்டது, ஆனால் சோவியத் உதவியுடன் போருக்குப் பிறகு விரைவாக மீண்டும் கட்டப்பட்டது.
பியோங்யாங் வட கொரியாவின் அரசியல், தொழில்துறை மற்றும் போக்குவரத்து மையமாகும். இது வட கொரியாவின் முக்கிய அரசாங்க நிறுவனங்களுக்கும், கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சிக்கும் சொந்த ஊர்.
1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது