ஒலிபெயர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் உள்ள எழுத்துக்களை கணினியில் உருவாக்க அம்மொழியிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஈடான ஒலி வடிவைத் தரும் ஆங்கில எழுத்தையோ அல்லது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்பையோ தட்டுவதன் மூலம் அவ்வெழுத்தைப் பெறும் அமைப்பு மென்பொருள் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. இம்முறை ஒலிபெயர்ப்பு (transliteration) என அறியப்படுகிறது. உதாரணமாக "அ" எனும் தமிழ் எழுத்தை "a" எனும் ஆங்கில எழுத்தைத் தட்டிப் பெறலாம், "ம" எனும் தமிழ் எழுத்தை "ma" எனும் இரு ஆங்கில எழுத்துக்களின் தொகுப்பைத் தட்டிப் பெறலாம். "அம்மா" எனும் தமிழ் வார்த்தையை "ammaa" எனும் ஆங்கில எழுத்துக்களைத் தட்டிப் பெறலாம். "உனக்காக" எனும் தமிழ் வார்த்தையை "unakkaaga" எனும் ஆங்கில எழுத்துக்கள் உருவாக்குகின்றன. இதில் "க" எனும் குறில் எழுத்துககான "ka" என்பதில் "a" ஒரு முறையும் "கா" எனும் நெடில் எழுத்துக்கான "kaa" என்பதில் "a" இரு முறையும் வரும் வகையில் ஒலி பெயர்ப்பு அமையப்பெற்றுள்ளது.

தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவமைப்பு (transliteration scheme)

தமிழை கணினியில் வடிக்க உதவும் ஒலிபெயர்ப்பு மென்பொருட்களை உருவாக்குவோர் பயன்படுத்தும் தமிழெழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்கள் அனேகமாக ஓரேவிதமாக இருப்பினும் அவற்றில் வேற்றுமைகளும் உள்ளன, சில மென்பொருட்களில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சில ஆங்கில எழுத்துக்கள் அதற்குரிய தமிழ் ஒலியமைப்பைப் பெறாமலும் இருப்பதுண்டு. இது நடைமுறைச் சிக்கல்களில் ஒன்று. இயல்பாகத் தமிழ் எழுதுக்களுக்கீடாக அமையும் ஆங்கில எழுத்துக்களும் அவற்றின் தொகுப்பும் கீழ்க்கண்ட அட்டவணைகளில் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் தமிழில் இயல்பாக இல்லாத ஒலிகளை உள்ளடக்கிய க்ரந்தம் எனப்படும் வடமொழி எழுத்துக்களும், ஆங்கில வார்த்தைகளை மொழிமாற்றம் செய்யாமல் அவற்றின் உச்சரிப்பில் தமிழில் எழுத உதவும் விசேஷமான எழுத்துக்களும், அவற்றுக்கீடான ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளன.

உயிரெழுத்துக்களும் ஆய்த எழுத்தும்

a aa, A i ii, I, ee u uu, U, oo e ae, E ai o oa, O, oe au, ow, ou q

மெய்யெழுத்துக்கள்

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் r ல் வ் ழ் ள் ற் ன்
k, g, kh, c, gh ng, nG s, ch gn, Gn, nj t, d N, nd th, dh n, nh, nth, ndh p, b m y r l v, w z, zh L R, tr, dr n, nh

க்ரந்த எழுத்துக்களும் விசேஷ எழுத்துக்களும்

ஸ்ரீ ஷ் ஸ் ஹ் க்ஷ் எப் ஃஜ் ஃஸ்
sri, sree, shri sh s, S h ksh f, ph Z, z x

உயிர்மெய்யெழுத்துக்கள்

ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் உரிய ஆங்கில எழுத்து அல்லது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புடன் தேவையான உயிரெழுத்துக்குரிய ஆங்கில எழுத்து அல்லது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்பைத் தட்ட முறையான உயிர்மெய்யெழுத்துக்கள் கிடைக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிபெயர்ப்பு&oldid=3931039" இலிருந்து மீள்விக்கப்பட்டது