உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாசிம் பின் முஹம்மது அல்தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாசிம் பின்முஹம்மது அல்தானி
جاسم بن محمد آل ثاني
கத்தார்அமீர்
ஆட்சிக்காலம்1878–1913
முன்னையவர்முஹம்மது பின் அல்தானி(தந்தை)
பின்னையவர்அப்துல்லாஹ் பின் ஜாசிம் அல்தானி (மகன்)
புதைத்த இடம்
Lusail Cemetery
தந்தைமுஹம்மது பின் அல்தானி
மதம்சன்னி இஸ்லாம்

சேக் ஜாசிம் பின் முஹம்மது அல்தானி(அரபு மொழி: جاسم بن محمد آل ثاني‎; c. 1825 – 17 சூலை 1913), கத்தாரின் நிறுவனர் என்றழைக்கப்படுகிறார் ,இவருக்கு 19 குழந்தைகள் அனைவரும் ஆண்களாவர்.

இளமைக்காலம் மற்றும் ஆட்சி

[தொகு]

இவரின் பிறப்பு துல்லியமாக அறியப்படவில்லை எனினும் தோராயமாக 1825ல் பிறந்ததாக அறியப்படுகிறார். ,தான் ஒரு தமிம் இன பழங்குடி  என்கிறார், முஹம்மது பின் தானி அவர்களின் மூத்த மகனாவார் தனது தந்தையின் புதிய நாட்டிற்கான கொள்கைகளை வகுத்தலில் துணை நநின்று அவரின் அரசியல் அறிவையும் திறம்பட  பெற்றார் தனது 21ம் அகவையில் கத்தாரின் இளம் தலைவராக உருவெடுத்தார்.

பிராந்த்தியத்தில் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியை தொடர்ந்து அரேபிய தீபகற்பத்தில் ஜாசிம் பின் முஹம்மது அல்தானி  ஐக்கிய ராச்சியம் மற்றும் இந்தியாவின் செல்வாக்குடன் எல்லையை வகுத்துக்கொண்டது.

சிறைவாசம்

[தொகு]

ஜாசிம் பின் முஹம்மது அல்தானி பஹ்ரைனிய அரசர் முஹம்மது பின் கலிஃபா அவர்களால்  பஹ்ரைனில் நடைபெற்ற பேச்சுவார்த்ன்தையின் போது சிறைபிடிக்கப்பட்டார்.இந்நிகழ்வின்  பிண்ணனியில் அபுதாபி அரசு இருந்தது.பின்னர் கத்தாரில் நடந்த தாக்குதலில் பலர்  கொல்லப்பட்டனர். 

ஓட்டோமான் பேரரசுடன் மோதல்கள்

[தொகு]

ஓட்ட்டோமான் பேரரசின் பாக்தாத் ஆளுநர் உத்தரவின் பேரில் கத்தாரில் படைகள் அனுப்பபட்டன பின்னர் சேக் ஜாசிம் அவர்கள் படைகளை ஏற்றுக்கொண்டு ஓட்டோமான் பேரரசின் நஜ்த் மாகாணத்தின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்டு அதன் துணை ஆளுனராக பொறுப்பேற்றார் .

டிசம்பர் 18 1878ல்   திடீர் திருப்பமாக ஓட்டோமான் பேரரசில் இருந்து விலகி சேக் ஜாசிம் அவர்கள் கத்தாரை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார்


இறப்பு

[தொகு]

1913ம் ஆண்டில் சூலை 17ம் நாள் மாலை இயற்கை எய்தினார். தோஹாவில் இருந்து 24 கிமி தொலைவிலுள்ள லுசைல் எனும் கிராமத்தில் இவரின்அ உடல்ட க்கம் செய்யப்பட்டது 


குழந்தைகள்

[தொகு]

சேக் ஜாசிம் அவர்களுக்கு மொத்தம் 19 பிள்ளைகளாவர் , அனைவரும் ஆண் மக்கள்