நடு ஆப்பிரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  நடு ஆப்பிரிக்கா
  நடு ஆப்பிரிக்கா (ஐநா வரையறுத்த பகுதிகள்)

நடு ஆப்பிரிக்கா (Central Africa) என்பது ஆப்பிரிகக் கண்டத்தில் உள்ள நடுப்பகுதியைக் குறிக்கும். இப்பகுதியில் புருண்டி, நடு ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் தனது ஆவணங்களில் நடு ஆப்பிரிக்கா (Middle Africa) என்ற வகைப்பாட்டில் சகாரா பாலைவனத்தின் தெற்குப் பகுதி, ஆனால் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கின் (Great Rift Valley) மேற்குப் பகுதி ஆகிய பகுதிகள் அடங்குகின்றன[1]. இப்பகுதி கொங்கோ ஆறு மற்றும் அதன் கிளைப் பகுதிகளைப் பெருமளவில் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் ஆவணங்களின் படி, நடு ஆப்பிரிக்காவில் அடங்கும் 9 நாடுகளாவன: அங்கோலா, கமரூன், நடு ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினி, காபொன், மற்றும் சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி[1]. இந்த ஒன்பது நாடுகளுடன் ஏனைய இரண்டு நடு ஆப்பிரிக்க நாடுகளுடன் மொத்தம் 11 நாடுகள் நடு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு (ECCAS) என்ற அமைப்பில் இணைந்துள்ளன[2].

நடு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு (1953–1963), (ரொடீசியா மற்றும் நியாசலாந்து கூட்டமைப்பு எனவும் அழைக்கப்படுகிறது) என்பது தற்போதைய மலாவி, சாம்பியா, மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது[3].

காலநிலை[தொகு]

ஆப்பிரிக்காவின் பெரும்பாலான அத்திலாந்திக் கரையோரப் பகுதிகள் வெப்ப வலயப் பிரதேசங்கள் ஆகும். ஆண்டு முழுவதும் சூடான, நனைந்த பகுதிகள் ஆகும். பெரும் அடர்த்தியான வெப்பவலய மழைக்காடுகளைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடு_ஆப்பிரிக்கா&oldid=3559914" இருந்து மீள்விக்கப்பட்டது