காபோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காபொன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காபொனியக் குடியரசு
République Gabonaise
கொடி of காபொன்
கொடி
சின்னம் of காபொன்
சின்னம்
நாட்டுப்பண்: La Concorde
காபொன்அமைவிடம்
தலைநகரம்லிப்ரவில்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
அரசாங்கம்குடியரசு
அலி பொங்கோ
ஜீன் ஐகி ந்டொங்
விடுதலை
• பிரான்சிடம் இருந்து
ஆகஸ்ட் 17 1960
பரப்பு
• மொத்தம்
267,668 km2 (103,347 sq mi)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
1,384,000 (150வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$9.621 பில்லியன் (136வது)
• தலைவிகிதம்
$7,055 (89வது)
மமேசு (2004)0.633
மத்திமம் · 124வது
நாணயம்பிராங்க் (XAF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மா.ஆ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1
அழைப்புக்குறி241
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGA
இணையக் குறி.ga

காபோன், அல்லது காபோனியக் குடியரசு (Gabonese Republic, Gabon, ஐபிஏ: gəˈbon), மேற்கு மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக எக்குவடோரியல் கினி, கமரூன், கொங்கோ குடியரசு மற்றும் கினி வளைகுடா ஆகிய நாடுகள் உள்ளன. பிரான்சிடம் இருந்து ஆகஸ்ட் 17, 1960 இல் விடுதலை அடைந்ததில் இருந்து இக்குடியரசு இரண்டு அதிபர்களினால் ஆளப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் ஒமார் பொங்கோ 1967 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் உள்ளார். பல கட்சி முறையையும் புதிய சனநாயகக் கொள்கைகளையும் 1990களின் ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட காபொன் நாடு வெளிப்படையான தேர்தல் முறைகளை அனுமதித்தது. சிறிய மக்கள் தொகை, ஏராளமான இயற்கை வளம், தாராளமான வெளிநாட்டு மூலதனம் காரணமாக இந்நாடு அப்பகுதியின் வளம் மிக்க நாடாகத் திகழ்கிறது.

புவியியல்[தொகு]

காபொன் வரைபடம்

காபொன் மத்திய ஆபிரிக்காவின் அட்லாண்ட்டிக் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. "ஓகூயி" இதன் நீளமான ஆறு ஆகும். உலகின் மிகப்பெரிய இயற்கை வனங்கள் இந்நாட்டில் உள்ளன.

இனம், மொழி, மதம்[தொகு]

இங்குள்ள மக்கள் அனைவரும் பாண்ட்டு (Bantu) என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இங்கு குறைந்தது நாற்பது இனக்குழுக்கள் தனித்தனி மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன. மிகப் பெரிய குழுக்கள் பெட்டி-பாகுயின் மாறும் பண்ட்ஜாபி (அல்லது ந்செபி). பிரெஞ்சு மொழி இங்கு அதிகாரபூர்வமான மொழி. 10,000 ற்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்கள் இங்கு வாழ்கிறார்கள். 55% இலிருந்து 77% மக்கள் கத்தோலிக்கர்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காபோன்&oldid=3463041" இருந்து மீள்விக்கப்பட்டது