கினி வளைகுடா

ஆள்கூறுகள்: 1°0′N 4°0′E / 1.000°N 4.000°E / 1.000; 4.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கினி வளைகுடா

கினி வளைகுடா, அத்திலாந்திக் பெருங்கடலின் வடகிழக்கு முடிவிடம் ஆகும். இது காபொன் நாட்டின் கேப் லோப்பேஸிற்கும் லைபீரியாவின் கேப் பல்மாஸிற்கும் இடையில் உள்ளது. புவிமையக் கோடும் நெட்டாங்கு மையக்கோடும் இடைவெட்டும் புள்ளி இவ்வளைகுடாவிலேயே உள்ளது. நைஜர் ஆறு, வோல்ற்றா ஆறு உட்பட பல ஆறுகள் இவ்வளைகுடாவில் கடலில் கலக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கினி_வளைகுடா&oldid=3824717" இருந்து மீள்விக்கப்பட்டது