நைஜர் ஆறு
நைஜர் ஆறு (ஜொலிபா (Joliba), ஐஸா பெர் (Isa Ber), ஓயா (Oya), கெர் என் கெரென் (gher n gheren)) | |
River | |
மாலியின் கௌலிகோரோ (Koulikoro) என்னுமிடத்தில் நைஜர் ஆற்றின் தோற்றம்.
| |
பெயர் மூலம்: தெரியாது. ஆற்றைக் குறிக்கும் பேபர் மொழிச் சொல்லான கேர் என்பதிலிருந்து வந்திருக்கக் கூடும். | |
நாடுகள் | கினியா, மாலி, நைஜர், பெனின், நைஜீரியா |
---|---|
கிளையாறுகள் | |
- இடம் | சொக்கோட்டோ ஆறு, கடுனா ஆறு, பெனூ ஆறு |
- வலம் | பானி ஆறு |
நகரங்கள் | தெம்பகூண்டா, பமாக்கோ, திம்புக்டு, நியாமே, லோகோஜா, ஒனிட்ஷா |
நீளம் | 4,180 கிமீ (2,597 மைல்) |
வடிநிலம் | 21,17,700 கிமீ² (8,17,649 ச.மைல்) |
நைஜர் ஆற்றைக் காட்டும் நிலப்படம், நைஜர் வடிநிலம் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது
|
நைஜர் ஆறு மேற்கு ஆபிரிக்காவின் முக்கியமான ஆறு. 4180 கிமீ (2600 மைல்) நீளம் கொண்ட இந்த ஆற்றின் வடிநிலம் 2,117,700 சதுர கிலோமீட்டர்கள் (817,600 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. [1] தென்கிழக்கு கினியாவில் உள்ள கினியா உயர் நிலப் பகுதியில் தொடங்கி, மாலி, நைகர், பெனின் எல்லை, நைஜீரியா போன்ற நாடுகளூடாகப் பாய்ந்து மிகப் பெரிய நைஜர் கழிமுகத்தின் ஊடாக கினியாக் குடாவுக்குள் கலக்கிறது. ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகளில், நைல் ஆறு, காங்கோ ஆறு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய ஆறு நைஜர் ஆறு.
இந்த '''நைஜர் நதி''' (/ˈnaɪdʒər/ NY-jər; பிரெஞ்சு மொழி: மொழியில் லேஃப்லூவே நைஜர்(le) fleuve Niger, pronounced [(lə) flœv niʒɛʁ])
முங்கொ பார்க் (Mungo Park) என்ற ஸ்காட்லாந்தின் ஆய்வாளர், நைஜர் நதியின் மத்திய பகுதியை அடைந்ததாக அறியப்படுகிறது
சொற்பிறப்பியல்
[தொகு]நைஜர் நதியானது, வெவ்வேறு பிராந்தியங்களில், வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு பெயர்களைப் பெற்றுள்ளது.
- "ஆறுகளின் ஆறு" என்ற பொருளையுடைய துவாரக் எக்ரூவ் என் இகரவென் (Egerew n-Igerewen)'
- ஸர்மாவில் (Zarma) "பெரிய ஆறு" என்ற பொருளையுடைய சோங்காவ் (Songhay) அல்லது பெர் (Ber) ஆறு
- க்வாராவில் (Kwara) ஹௌஸா (Hausa)
- ஓயாவில் (Oya) யோருப்பா(Yoruba) என்று பெயர் பெற்றுள்ளது.
- "பெரிய நீர்" என்ற பொருளையுடைய இக்போ ஒமிரி (Orimiri) அல்லது ஒமிலி (Orimili)
- "பெரிய நதி" என்ற பொருளையுடைய மாண்டிங் ஜெலிபா (Manding: Jeliba) அல்லது ஜொலிபா (''Joliba) ''
1550 ஆம் ஆண்டில், லியோ ஆபிரிகனஸ் (Leo Africanus) என்பவர் இத்தாலிய மொழியில் பிரசுரிக்கப்பட்ட டெல்லா டெஸ்கிரிட்டியோன் டெல்'ஆஃப்ரிகா எட் டெல்லெ காஸ் நாட்டபீலி சேய் ஐய் சோனோ (Della descrittione dell’Africa et delle cose notabili che iui sono) என்ற வெளியீட்டில், "நைஜர்" என்ற பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. பயன்பாடு என்பதாகும். இந்த பெயர் பெர்பர் (Berber) சொற்றொடர், " ஆறுகளின் ஆறு " என்ற பொருளில் ஜெர்-என்-ஜெர் (ger-n-ger) என்று குறிக்கப்பட்டது.[2]
புவியியல்
[தொகு]நைஜர் ஆறு ஒப்பீட்டளவில் தெளிவான ஆறு. இது நைல் நதி கொண்டு செல்லும் அளவில் பத்தில் ஒரு பங்கு படிவுகளையே கொண்டு செல்கிறது. இதன் நிலக்கூம்புப் (headland) பகுதி தொன்மைப் பாறைகளில் அமைந்திருப்பதால், குறைந்த அளவு வண்டலே ஆற்றில் கலக்கிறது.[3] நைல் ஆற்றைப் போலவே நைஜரிலும் ஆண்டுக்கு ஒரு முறை பெருக்கு ஏற்படுகின்றது. இது செப்டெம்பரில் தொடங்கி நவம்பர் மாதமளவில் உயர்நிலை அடைந்து மேயில் முடிவடைகிறது.[3]
திடீரென இது ஓடும் பாதையில் நிலத்தின் சரிவு குறைவடைவதால், வழமைக்கு மாறான ஒரு அம்சமாக உள்நாட்டுக் கழிமுகம் ஒன்றும் உருவாகியுள்ளது. இதனால் இவ்விடத்தில் வலைப் பின்னலாக அமைந்துள்ள சிற்றாறுகளும், சதுப்பு நிலங்களும், ஏரிகளும் பெல்ஜியம் நாட்டின் பரப்பளவுக்குச் சமனான நிலப்பகுதியில் பரந்து அமைந்துள்ளன. பருவகால ஆற்றுப் பெருக்கு வேளாண்மை, மீன்பிடித் தொழில் ஆகியவை தொடர்பில் மிகுந்த உற்பத்தித்திறன் கொண்டதாக அமைகின்றது.[4]
மோப்டியில் (Mopti) உள்ள கழிமுகத்தின் வழியே பாய்ந்து செல்லும் பானி (Bani) நதியின் அனைத்து நீரிழப்புகளுக்கு ஈடு செய்ய இயலாது. ஆண்டு சராசரி நீரிழப்பு 31 கிமீ 3 / எனக் கணக்கிடப்படுகிறது, ஆனால் ஒவ்வோர் ஆண்டிற்கும் இடையில் சராசரி நீரிழப்பு கணிசமான அளவு வேறுபடுகிறது.[5]
அசாதாரண நீர்வழி
[தொகு]நைஜர் ஆறு, கிர்(Gir) மற்றும் நி-கிர்(Ni-Gir) ஆகிய இரண்டு பண்டைய ஆறுகள் சேர்ந்து பய்ந்து, புவியியல் அமைப்பில் விசித்திரமான மாற்றங்களை வெளிப்படையாகக் கொண்டுள்ளது. திம்புக்டு (Timbuktu) அருகே உள்ள நதியின் தற்போதைய வளைகுடாவிற்கு மேற்கே நைஜர், மேற்கு திம்புக்டுவில் இருந்து வருகிறது. ஒரு முறை தாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறிய, நைஜர் ஆறு திம்புக்டுக்கு தெற்கே தொடங்கி கினியா வளைகுடாவிற்கு தெற்கே ஓடியது. அப்பொழுது ஆற்று நீரானது, திம்புக்டுவிற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள உலர் ஏரிகளுக்குள் சென்று ஏரிகளை நிரப்பியது. காலப்போக்கில் தாழ்மட்ட நைஜர் ஆற்றின், ஆற்றெதிர் நீரோட்டத்தின் மூலம் இயற்கைக் காரணி மண்அரிப்பு ஏற்பட்டு நில மேற்பரப்பு தேய்ந்தது. இதனால் மேல் நைஜர், தாழ்மட்ட நைஜரால் கைப்பற்றப்பட்டது.[6]
ஐரோப்பிய ஆய்வு
[தொகு]நைஜர் ஆற்றின் பெயர்த் தோற்றம் தெளிவாக இல்லை. மரபார்ந்த சகாப்தத்திலிருந்தே மத்தியதரைக்கடல் நாடுகளில் "நைஜர்" என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஐரோப்பியர்கள் நைஜர் ஆறு பாயும் பகுதியைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். டால்மியின் (Ptolemy) பாரம்பரிய ஆய்வு அறிக்கைகள் சஹாராவின் (Sahara) உட்புறத்தின் மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியது. அதில் அவர், "கிர்(Gir)" மற்றும் அதற்குத் தெற்கே "நி-கிர்(Ni-Gir)" என்ற இரண்டு ஆறுகள் பாலைவனத்தில் பாய்வது குறிப்பிடப்பட்டுள்ளார்.[7][8]
இது முதன்முதலாக, நவீன மொராக்கோ (Morocco) மற்றும் அல்ஜீரியாவின் (Algeria) எல்லையில், டுவாட்டின் (Tuat) வட மேற்கு விளிம்பில் வாடி கிர் (Wadi Ghir) என அடையாளம் காணப்பட்டது.
ஒரு பெர்பர் மொழியிலிருந்து பெறப்பட்ட அனைத்து நதிகளின் பெயர்களும் "வாய்க்கால் அல்லது கால்வாய்" எனப் பொருள் உடைய "கெர் (gher)" என்ற விகுதி கொண்டுள்ளதால், எளிதாகக் குழப்பம் எழுகிறது.[9] இந்த இரண்டு ஆறுகளையும் பிளெய்னி (Pliny) என்ற நீண்ட கால்வாய் நைல் நதியுடன் இணைத்தது என்ற கருத்து அரபு மற்றும் ஐரோப்பிய மக்களிடையே நிலவுகிறது.
வெப்பமண்டல மழை, பனி உருகுதல் போன்றவை நைல் சுழற்சியை பாதிக்கும் என்பது, பண்டைய மத்தியதரைக்கடல் உலகிற்கு தெரியாத உண்மையாகும்.[10]
ஆற்றைப்பற்றி அறிய மேற்கொள்ளப்பட்ட பல ஐரோப்பிய முயற்சிகள் தோல்வியுற்றன. 1796 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்காட்லாந்து ஆய்வாளர் முன்கோ பார்க் என்பவர் முதன்முதலாக ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்திய முதல் ஐரோப்பியர் ஆவார். 1799 இல் வெளிவந்த "ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளில் மேற்கொண்ட பயணங்கள்" என்ற அவரது புத்தகத்தில் நைஜர் பற்றிய உண்மைக் கோட்பாடுகள் நிறுவப்பட்டன.[11]
நைஜர் ஆற்றில், 1804 ஆம் ஆண்டு, ஹென்றி நிக்கோலஸ் (Henry Nicholls) தன் ஆய்வுகளைத் தொடங்கினார். நைஜர் துல்லியமாக முடியும் இடத்தில் இவரது பணிகள் தொடங்கின. ஆய்வுப் பயணத்தின் துவக்க புள்ளியே, உண்மையில் அதன் இலக்காக இருந்தது.[12]
ஜீன் ரோச்சின் (Jean Rouch) நைஜர் பற்றி ஆய்வுகள் செய்து, "நீர்யானை வேட்டை-La chasse à l’hippopotame" மற்றும் "கருப்பு மாந்திரிகர்கள் நிலத்தில்-Au pays des mages noirs" என்ற பெயருடைய மக்கள் இன அமைப்பியல் சார்ந்த, இரண்டு 35 எம். எம். ஆவணப்படங்களை வெளியிட்டார். அடுத்து, படமியைப் பயன்படுத்தி "நைஜர் அடி மரத்தைச் செதுக்கி உண்டாக்கும் படகு-Le Niger En Pirogue" என்ற விளக்கப் புத்தகம், ஃபெர்னாண்டு நாதன் (Fernand Nathan) என்பவரால் 1954ல் வெளியிடப்பட்டது.
இதைப் போன்று, ஜீன் சவ்வியின் (Jean Sauvy) "நைஜர் வம்சாவளி-Descente du Niger" என்ற விளக்கப் புத்தகம், எல். ஹார்மட்டன் (L 'Harmattan) என்பவரால் 2001ல் வெளியிடப்பட்டது.
பியரி பாண்டி (Pierre Ponty) தட்டச்சுக் கருவியின் உதவியுடன், நைஜர் பற்றிய பத்திரிகைக் கட்டுரைகளை அவ்வப்போது செய்திகளக வெளியிட்டார்.[13]
2005 ஆம் ஆண்டில் , நோர்வே சாகசக்காரர் ஹெல்கெ ஜெல்லாந்து (Helge Hjelland) கினியா-பிஸ்சாவில் (Guinea-Bissau) இருந்து நைஜர் நதியின் முழு நீளப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தை இவரே முழுமையாகப் படம்பிடித்து "மிகக் கொடூரமான பயணம்" என்ற ஆவணப்படத்தை வெளியிட்டார்.[14]
தூர்வாருதல் மற்றும் நதிப் போக்குவரத்து
[தொகு]செப்டம்பர் 2009 ல், நைஜீரிய அரசாங்கம் பாரோவிலிருந்து (Baro) வாரிக்கு (Warri) நைஜர் நதிக்கு 36 பில்லியன் செலவில் நைய்ரா (naira) தூர்வாருதல் பணியைத் துவக்கியது. பல நூறு கிலோமீட்டர்கள் தூரத்திற்கு வண்டல் மற்றும் சேற்றுப்படிவுகளை நீக்க அமைக்கப்பட்ட இயக்கமாக இது செயல்பட்டது.
தூர்வாருதல் நிகழ்வானது, கரையிலிருந்து வெகு தூரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு பொருட்களை எளிதாகக் கொண்டுசெல்ல உதவும். இத்திட்டமானது, ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என மதிப்பிடப்பட்டது. 43 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்டது. பின்னர் அரசாங்கத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
லோகோஜாவில் (Lokoja) பேசிய நைஜீரிய ஜனாதிபதி உமர் யர்அடுவ (Umaru Yar'Adua) இந்த திட்டம் நைஜர் ஆற்றின் மீது ஆண்டு முழுவதும் நீர்வழிப் பயணத்திற்கு வழிவகுக்கும் என்று கூறினார். அவர் 2020க்குள் இது நிறைவேறும் என்றும், உலகில் உள்ள தொழில்மயமான இருபது முன்னணி நாடுகளில் நைஜீரியா இடம்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.[15] நைஜீரிய போக்குவரத்துத் துறை அமைச்சர் அல்ஹாஜி இப்ராஹிம் பியோ (Alhaji Ibrahim Bio) தனது அமைச்சகம் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் திட்டத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்று உறுதிபடுத்துகிறார்.
கடந்த காலங்களில், கடலோர கிராமங்கள் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி சில ஆர்வலர்கள் இத்திட்டத்தை எதிர்த்தனர்.
2010 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், தூர்வாருதல் திட்டம் 50% முடிந்துள்ளது.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gleick, Peter H. (2000), The World's Water, 2000-2001: The Biennial Report on Freshwater, Island Press, p. 33, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55963-792-7; online at Google Books
- ↑ Hunwick, John O. (2003) [1999]. Timbuktu and the Songhay Empire: Al-Sadi's Tarikh al-Sudan down to 1613 and other contemporary documents. Leiden: Brill. p. 275 Fn 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11207-3.
- ↑ 3.0 3.1 Reader 2001, ப. 191.
- ↑ Reader 2001, ப. 191–192.
- ↑ FAO:Irrigation potential in Africa: A basin approach, The Niger Basin, 1997
- ↑ Tom L. McKnight; Darrel Hess (2005). "16, "The Fluvial Processes"". Physical Geography: A Landscape Appreciation (8th ed.). Upper Saddle River, New Jersey: Pearson, Prentice Hall. p. 462. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-145139-1.
- ↑ C. K. Meek, The Niger and the Classics: The History of a Name. The Journal of African History. Vol. 1, No. 1 (1960), pp. 1-17
- ↑ Law, R. C. C. (1967), "The Garamantes and Trans-Saharan Enterprise in Classical Times", The Journal of African History, 8 (2): 181–200, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/S0021853700007015. Law carefully ties together the classical sources on this, and explains the mix of third hand reports and mythology that was current in both the European and Arab worlds.
- ↑ Thomson 1948, ப. 258–259.
- ↑ Law (1967) pp.182–4
- ↑ de Gramonte, Sanche (1991), The Strong Brown God: Story of the Niger River, Houghton Mifflin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-56756-4
- ↑ Frank T. Kryza, The Race for Timbuktu: In Search of Africa’s City of Gold, New York: HarperCollins, 2006, p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0060560657.
- ↑ Baugh, Brenda, About Jean Rouch, Documentary Education Resources, பார்க்கப்பட்ட நாள் 27 Jan 2010
- ↑ Bergen International Film Festival - The Cruelest Journey பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் https://amehn.wordpress.com/the-cruellest-journey/
- ↑ Wole Ayodele (2009-09-09). "Yar'Adua Flags off Dredging of River Niger". This Day Online. Archived from the original on 2009-09-14. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.http://allafrica.com/stories/200909110317.html
- ↑ "N36bn River Niger dredging project 50% completed – FG". Punch on the web. 2010-03-25. Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2010-05-11.http://www.vanguardngr.com/2010/03/n36bn-dredging-of-river-niger-not-cancelled-presidency/