நைஜீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நைஜீரியா கூட்டாட்சிக் குடியரசு
Orílẹ̀-èdè Olómìnira Àpapọ̀ Naìjírìà


Republik Nijeriya
جمهورية نيجيريا
Republic nde Naigeria
Republik Federaal bu Niiseriya

கொடி சின்னம்
குறிக்கோள்: "ஒன்றியமும் பக்தியும், அமைதியும் முன்னேற்றமும்"
நாட்டுப்பண்: "Arise O Compatriots, Nigeria's Call Obey"
தலைநகரம் அபுஜா
9°10′N 7°10′E / 9.167°N 7.167°E / 9.167; 7.167
பெரிய நகர் லேகோஸ்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
பிராந்திய மொழிகள் ஹௌசா, இக்போ, யொரூபா
மக்கள் நைஜீரியர்
அரசாங்கம் கூட்டாட்சிக் குடியரசு
 •  குடியரசுத் தலைவர் உமாரு யார்'அடுவா (PDP)
 •  அநுசாரி குடியரசுத் தலைவர் குட்லக் ஜானதன (PDP)
 •  செனட் தலைவர் டேவிட் மார்க் (PDP)
 •  பிரதான நீதிபதி இத்ரிஸ் குடிகி
விடுதலை ஐக்கிய இராச்சியத்திலிருந்து
 •  கூற்றமும் திட்டப்படமும் அக்டோபர் 1 1960 
 •  குடியரசுக் கூற்றம் அக்டோபர் 1 1963 
பரப்பு
 •  மொத்தம் 9,23,768 கிமீ2 (32வது)
3,56,667 சதுர மைல்
 •  நீர் (%) 1.4
மக்கள் தொகை
 •  2005 கணக்கெடுப்பு 133,530,0001 (9வது)
 •  2006 கணக்கெடுப்பு 140,003,542 (Not approved & preliminary)[1]
 •  அடர்த்தி 145/km2 (71வது)
374/sq mi
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $191.4 பில்லியன் (47வது²)
 •  தலைவிகிதம் $1,500 (165வது²)
ஜினி (2003) 43.7
மத்திமம்
மமேசு (2007) Green Arrow Up Darker.svg 0.470
Error: Invalid HDI value · 158வது
நாணயம் நைஜீரிய நைரா (₦) (NGN)
நேர வலயம் WAT (ஒ.அ.நே+1)
 •  கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 234
இணையக் குறி .ng
1 கணக்கெடுப்புகள் 2006க்கு முன்பு எடுக்கப்பட்டவை. மாற்றங்கள் இருக்கலாம்.

நைஜீரியா அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆப்ரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். [2] இதன் மேற்கில் பெனின் குடியரசும் சாட், கேமரூன் ஆகியன கிழக்கிலும் நைஜர் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. ஐநூறுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர்.

அரசும் அரசாங்கமும்[தொகு]

நைஜீரியா ஒரு குடியரசு நாடு. இதன் அரசு அமெரிக்க அரசினை ஒத்தது. நாட்டின் உயரிய பதவியை அதிபர் வகிப்பார். மேலவை, கீழவை என இரண்டு அவைகள் உண்டு. செனட் எனப்படும் மேலவையில் 109 உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். கீழவையில் 360 உறுப்பினர்கள் இருப்பர். சுதந்திரத்துக்கும் முன்னரும், பின்னரும், சமயம், பழங்குடியினர், சாதி ஆகியன அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நைஜீரிய மக்கள் குடியரசுக் கட்சி, நைஜீரிய அனைத்து மக்கள் கட்சி ஆகியன பெரிய கட்சிகளாக உள்ளன. ஹௌசா, இக்போ, யொருபா இனத்தவர் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இராணுவம்[தொகு]

நைஜீரிய அரசின் ராணுவத்திற்கு சில பொறுப்புகள் உண்டு. நைஜீரியாவைப் பாதுகாத்தலும், மேற்கு ஆப்பிரிக்காவில் அமைதியை நிலை நாட்டுவதும் இதன் பொறுப்புகள். இது வான்படை, தரைப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் கொண்டுள்ளது. பிற நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும் பங்கு வகித்துள்ளது. [3]

புவியியல்[தொகு]

இது மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவில் உள்ளது. இதன் பரப்பளவு 923,768 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். பெனின், நைகர், சாடு, கேமரூன் உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது. இங்கு நைஜர், பெனுவே ஆறுகள் பாய்கின்றன.

சட்டம்[தொகு]

பொதுமக்களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வடக்குப் பகுதியில் வாழும் இசுலாமியருக்கான தனி சட்டங்களும் உண்டு. இதன் உயர்மட்ட நீதிமன்றம், நைஜீரியாவின் உயர்நீதிமன்றம் ஆகும்.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

இது முப்பத்தாறு மாநிலங்களைக் கொண்டுள்ளது. இவற்றைப் பிரித்து, 774 உள்ளூர் பகுதிகளும் உண்டாக்கப்பட்டுள்ளன. அபுஜே என்னும் தேசியத் தலைநகரம் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. லேகோஸ் என்ற நகரம் அதிக மக்களைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் பெட்ரோலிய உற்பத்தியாளர்களில் 12வது இடத்தைப் பெற்றுள்ளது. கடலை, கோக்கோ, பனைமரத்து எண்ணெய் ஆகியன முக்கிய வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் ஆகும். தொலைத்தொடர்புகள் துறையிலும் முன்னேறி உள்ளது.

மொழிகள்[தொகு]

அலுவல் மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. கல்வி மொழியாகவும், வணிக மொழியாகவும் பயன்படுகிறது. இந்த நாட்டில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் பூர்விக மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மையோர் ஆங்கிலத்திலும், தங்கள் தாய்மொழியிலும் பேசும் வல்லமை பெற்றுள்ளனர். நகர்ப்பகுதிகல் தவிர்த்த பிற இடங்களில், ஆங்கில அறிவு குறைவாகவே உள்ளது. அண்டை நாடுகளில் பேசும் பிரெஞ்சு மொழியையும் சிலர் கற்றிருக்கின்றனர். ஹவுசா, இக்போ, யொருபா ஆகியன பிற முக்கிய மொழிகள் ஆகும்.

மக்கள்[தொகு]

இது ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு. ஏறத்தாழ 151 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க மக்கள் தொகையில் 18% மக்கள் இங்குள்ளனர். உலகளவில் மக்கள் தொகை அடிப்படையில் ஏழாவது இடத்தில் உள்ளது. மக்கள் நலவாழ்வு சதவீதம் மிகக் குறைவாக உள்ளது.

சமயம்[தொகு]

இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் இசுலாம், கிறித்தவ சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.

விளையாட்டு[தொகு]

இங்கு கால்பந்தாட்டம் முக்கிய விளையாட்டாக உள்ளது. இதுவே தேசிய விளையாட்டாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கூடைப்பந்தாட்டமும் விளையாடுகின்றனர்.

கல்வி[தொகு]

மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. ஆனால், கட்டாயக் கல்வி முறை இல்லை. பள்ளி வகுப்புகளில், மாணவர்களின் வருகைப்பதிவுகள் குறைவாக உள்ளன. பள்ளிக் கல்வி முறை, ஆறு ஆண்டுகள் இளநிலையும், மூன்று ஆண்டுகள் இடநிலையும், மூன்றாண்டுகள் மெல்நிலையும் உள்ளது. நான்காண்டுகள் பல்கலைக்கழக படிப்பு மேற்கொள்ளப்படும்.

வெளிநாடுகளுடளான உறவு[தொகு]

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பிலும் பங்கு கொண்டுள்ளது.

பண்பாடு[தொகு]

இலக்கியம்[தொகு]

நைஜீரியாவைச் சேர்ந்த வோலே சோயின்கா என்பவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்.

திரைத்துறை[தொகு]

ஆப்பிரிக்க இசையில் நைஜீரியா பெரும்பங்கு வகித்துள்ளது. திரைத்துறையை நோல்லிவுட் என அழைக்கின்றனர்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nigeria: Census 2006 Puts Nigerians At 140 Million", allAfrica.com, 30 December 2006
  2. Library of Congress – Federal Research Division (July 2008). Country profile: Nigeria. p. 9. http://lcweb2.loc.gov/frd/cs/profiles/Nigeria.pdf. பார்த்த நாள்: 28 December 2011. 
  3. O'Loughlin, Ed (11 March 1998) "Nigerians outshine the British brass", The Independent (London)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைஜீரியா&oldid=2261569" இருந்து மீள்விக்கப்பட்டது