செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா
கொடி Coat of arms
நாட்டுப்பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்"
நிலை பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம்
தலைநகரம்ஜேம்சுடவுன் [1]
பெரிய குடியிருப்பு ஹாஃப் ட்ரீ ஹால்லோ
15°56′0″S 5°43′12″W / 15.93333°S 5.72000°W / -15.93333; -5.72000
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள்
  • செயின்ட் எலனியர்
  • அசென்சியர்
  • டிரிசுதானியர்
பகுதிகள்  செயிண்ட் எலனா
 அசென்சன் தீவு
 டிரிசுதான் டா குன்ஃகா
Leaders
 •  அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
 •  ஆளுநர் மார்க் ஆன்ட்ரூ கேப்சு
 •  அசென்சன் தீவின் நிர்வாகி மார்க் ஆலந்து[2]
 •  டிரிசுதான் டா குன்ஃகாவின் நிர்வாகி அலெக்ஸ் மித்தாம்
நிறுவப்பட்டது ஐக்கிய இராச்சியத்தின் சார்பு பகுதியாக
 •  செயின்ட் எலினா உரிமை முறி வழங்கப்பட்டது 1657 
 •  பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஆட்சி முடிவு 22 ஏப்ரல் 1834[3] 
 •  அசென்சன் இணைப்பு 12 செப்டம்பர் 1922 
 •  டிரிசுதான் டா குன்ஃகா இணைப்பு 12 சனவரி 1938 
 •  தற்போதைய அரசியலமைப்பு 1 செப்டம்பர் 2009 
பரப்பு
 •  மொத்தம் 394 கிமீ2
152 சதுர மைல்
மக்கள் தொகை
 •  2014 கணக்கெடுப்பு 7,729 (219வது)
 •  அடர்த்தி 13.4/km2
34.7/sq mi
நாணயம்
நேர வலயம் கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒ.அ.நே​)
வாகனம் செலுத்தல் left
அழைப்புக்குறி
  • +290 (செயின்ட் எலினா & டிரிசுதான்)
  • +247 (அசென்சன்)
இணையக் குறி
  • .sh
  • .ac
a. பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலத்திற்காக.

செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா (Saint Helena, Ascension and Tristan da Cunha)[4] தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமாகும். இதில் செயிண்ட் எலனா தீவு, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டமும் அடங்கியுள்ளன. செப்டம்பர் 1, 2009 வரை இவை செயின்ட் எலினாவும் சார்பு பகுதிகளும் என அழைக்கப்பட்டன. செப்டம்பர் 1, 2009இல் இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு இந்த மூன்று தீவுகளுக்கும் சமமான நிலையைத் தந்துள்ளது.[5]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

நிர்வாகத்திற்காக புவியியலை ஒட்டி இந்த ஆள்புலம் மூன்று பகுதிகளாக, செயின்ட் எலினா, அசென்சன், டிரிசுதான் டா குன்கா, பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்தனியான சட்டப்பேரவைகளால் ஆளப்படுகின்றன. செயின்ட் எலினாவின் சட்டப் பேரவைக்கு ஆட்புலத்தின் ஆளுநர் தலைமையேற்க, மற்றவற்றிற்கு நிர்வாக அதிகாரி தலைமை ஏற்கிறார்.

நிர்வாகப்
பகுதி
பரப்பளவு
கிமீ2
பரப்பளவு
ச மைல்
மக்கள்தொகை நிர்வாக
மையம்
செயிண்ட் எலனா 122 47 5,809 ஜேம்ஸ்டவுன்
அசென்சன் தீவு 88 34 1,532 ஜார்ஜ்டவுன்
டிரிசுதான் டா குன்ஃகா 184 71 273 ஏழுகடலின் எடின்பர்கு
   டிரிசுதான் டா குன்ஃகா 98 38 264 ஏழுகடலின் எடின்பர்கு
   அணுகவியலா தீவு 14 5 0
   நைட்டிங்கேல் தீவு 3.2 1 0
   காஃப் தீவு 68 26 9 (நிரந்தர குடியிருப்பவர் இல்லை) டிரான்சுவால் விரிகுடா
மொத்தம் 394 152 7,614 ஜேம்ஸ்டவுன்

செயின்ட் எலினா தீவு மேலும் எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]

மேற்சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]