தெற்கு சூடான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெற்கு சூடான் குடியரசு
Republic of South Sudan
தெற்கு சூடான் கொடி தெற்கு சூடான் சின்னம்
பாடல்
"தெற்கு சூடான் ஓயீ!"
Location of தெற்கு சூடான்
தலைநகரம்
பெரிய நகரம்
யூபா
04°51′N 31°36′E / 4.850°N 31.600°E / 4.850; 31.600
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
பிரதேச மொழிகள் ஜூபா அரபு மொழி, டின்கா 2–3 மில்லியன், வேறு மொழிகள்: நூயெர், சாண்டி, பாரி, சிலூக்
தேசிய இனங்கள்  டின்கா, நூயெர், பாரி, மற்றும் பலர்.
மக்கள் தெற்கு சூடானியர்
அரசு கூட்டாட்சி அமைப்பு
 -  அரசுத்தலைவர் சல்வா கீர் மயர்தித்
விடுதலை சூடானிடம் இருந்து 
 -  அமைதி உடன்பாடு சனவரி 6, 2005 
 -  தன்னாட்சி சூலை 9, 2005 
 -  சூடானிடம் இருந்து பிரிந்தது சூலை 9, 2011 
பரப்பளவு
 -  மொத்தம் 619745 கிமீ² (45வது)
239285 சது. மை 
மக்கள்தொகை
 -   மதிப்பீடு 7,500,000–9,700,000 (2006)[1]
11,000,000–13,000,000 (Southern Sudan claim, 2009)[2] 
 -  2008 குடிமதிப்பு 8,260,490 (கேள்விக்குரியது)[3] (94வது)
நாணயம் சூடானியப் பவுண்டு (SDG)
நேர வலயம் கிழக்கு ஆப்பிரிக்க நேரம் (ஒ.ச.நே.+3)
தொலைபேசி +249
தெற்கு சூடானின் 10 மாகாணங்கள்

தெற்கு சூடான் (South Sudan, அதிகாரபூர்வமாக தெற்கு சூடான் குடியரசு[4]), கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடாகும். இதன் தலைநகர் சூபா. தெற்கு சூடானின் எல்லைகளாக, கிழக்கே எத்தியோப்பியா; தெற்கே கென்யா, உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு; மேற்கே நடு ஆப்பிரிக்கக் குடியரசு; மற்றும் வடக்கே சூடான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. வெள்ளை நைல் நதியால் உருவாக்கப்பட்ட பெருமளவு சதுப்பு நிலங்கள் இங்குள்ளன.

தெற்கு சூடான் நாடு ஆரம்பத்தில் பிரித்தானியர் மற்றும் எகிப்தியரின் கூட்டுரிமையுடன் கூடிய ஆங்கிலோ-எகிப்திய சூடானின் கீழ் ஆளப்பட்டு வந்தது. பின்னர் 1956 ஆம் ஆண்டில் சூடான் குடியரசின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. சூடானில் இடம்பெற்ற முதலாவது உள்நாட்டுப் போரை அடுத்து 1972 ஆம் ஆண்டில் இது சூடானின் கீழ் தன்னாட்சியுடன் கூடிய சிறப்புப் பகுதியாக 1983 ஆம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் இடம்பெற்ற இரண்டாவது உள்நாட்டுப் போரை அடுத்து 2005 ஆம் ஆண்டில் சூடானிய அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாடு உருவானது. அதே ஆண்டின் பிற்பகுதியில் சூடானின் கீழ் மீண்டும் தன்னாட்சி அமைப்பாக உருவானது. 2011 ஆம் ஆண்டு சனவரியில் இங்கு இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பை அடுத்து 2011 சூலை 9 ஆம் நாள் உள்ளூர் நேரம் அதிகாலை 12:01 மணிக்கு தனிநாடானது. கருத்தறியும் வாக்கெடுப்பில் 99% வாக்காளர்கள் சூடானில் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்[5].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


ஆள்கூற்று : 4°51′N 31°36′E / 4.850°N 31.600°E / 4.850; 31.600

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_சூடான்&oldid=2016168" இருந்து மீள்விக்கப்பட்டது