அங்கோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República de Angola
அங்கோலாக் குடியரசு
அங்கோலா கொடி அங்கோலா சின்னம்
குறிக்கோள்
"Virtus Unita Fortior"  (Latin)
" ஒற்றுமையே உறுதி "
நாட்டுப்பண்
Angola Avante!  (போர்ச்சுகீசு)
"முன்னேகு அங்கோலா!"

Location of அங்கோலா
தலைநகரம்
பெரிய நகரம்
லுவாண்டா
8°50′S 13°20′E / 8.833°S 13.333°E / -8.833; 13.333
ஆட்சி மொழி(கள்) போர்த்துக்கீசு
அரசு பலகட்சி மக்களாட்சி
 -  குடியரசுத் தலைவர் யோசே டோஸ் சாந்தோஸ்
 -  தலைமை அமைச்சர் ஃவெர்னாண்டோ டா பியேடாடே
Fernando da Piedade
விடுதலை போர்த்துகல் இடமிருந்து 
 -  நாள் நவம்பர் 11 1975 
பரப்பளவு
 -  மொத்தம் 1246700 கிமீ² (23rd)
481354 சது. மை 
 -  நீர் (%) மிகச்சிறிளவு
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 15,941,000 (61ஆவது)
 -  1970 குடிமதிப்பு 5,646,166 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $43.362 பில்லியன் (82ஆவது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,813 (126ஆவது)
ம.வ.சு (2004) Red Arrow Down.svg 0.439 (low) (161ஆவது)
நாணயம் குவான்சா (Kwanza) (AOA)
நேர வலயம் மே.ஆப்.நேரம் (WAT) (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) பார்க்கப்படுவதில்லை (ஒ.ச.நே.+1)
இணைய குறி .ao
தொலைபேசி +244
பேசப்படும் பிற மொழிகள்: lஉபுண்டு (மொழி), கிம்புண்டு, சோக்வே, கிக்கோங்கோ

அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இது வைரம், நிலத்தடி எரியெண்ணெய், முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. முன்னர் போர்த்துகல் நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது.

அரசியல்[தொகு]

அங்கோலாவின் குறிக்கோள் முழக்கம் “இலத்தீன் மொழியில் "Virtus Unita Fortior", (விர்ட்டஸ் ஊனித்தா ஃவோர்த்தியோர்) “ஒன்றுபட்டால் நல்லொழுக்கம் வலுப்படும்” அல்லது “ஒற்றுமையே நல்லொழுக்க வலு" என்பதாகும்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

அங்கோலாவின் மாகாணங்களை எண்ணிட்டுக் காட்டும் நிலவரைபடம்

அங்கோலாவானது 18 மாகாணங்களாகவும் 163 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அவற்ருள் 18 மாகாணங்களாவன:

 1. பெங்கோ (Bengo)
 2. பெங்கேலா(Benguela)
 3. பியே(Bié)
 4. கபிண்டா(Cabinda)
 5. குவாண்டோ குபாங்கோ(Cuando Cubango)
 6. குவான்சா னோர்த்தே(Cuanza Norte)
 7. குவான்சா சுல் (Cuanza Sul)
 8. கியூனீன் (Cunene)
 9. ஹுவாம்போ (Huambo)
 10. ஹியூலா (Huila)
 11. லுவாண்டா (Luanda)
 12. லுவாண்டா நோர்த்தே
  (Luanda Norte)
 13. லுவாண்டா சுல் (Lunda Sul)
 14. மலாஞ்சே (Malanje)
 15. மொக்சிக்கோ (Moxico)
 16. நமீபே (Namibe)
 17. உயிகே (Uige)
 18. சயர் (Zaire)

படைப் பிரிவு[தொகு]

அங்கோலாவின் படைத் துறையானது அங்கோலாவின் படைக்கலம் தாங்கிய விடுதலை பொது அணியின் (((Forças Amadas Populares de Libertação de Angola—FAPLA) சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அது நிலப்படை, கடற்படை, வான்படை என்னும் முப்பிரிவுகளும் கொண்டது. 2002ன் செய்திகளின்படி நிலப்படையில் மொத்தம் 400 டாங்கிகளுடன் 90,000 படையாட்களும், 7 கலங்களுடன் 4000 கடற்படைஞர்களும், 104 போர் வானூர்திகளுடன் 6000 வான்படையாட்களும் கொண்டிருந்தது

நிலவியல் அமைப்பு[தொகு]

அங்கோலாவின் நிலவரைபடம்

நிலப்பரப்பின் அடிப்படையில் அங்கோலா உலகின் 23 ஆவது பெரிய நாடாகும். இதன் பரப்பளவு 481,321 சதுர மைல் (1,246,700 சதுர கிலோ.மீ[1]),

மேற்கோள்கள்[தொகு]

 • Much of the material in these articles comes from the CIA World Factbook 2000 and the 2003 U.S. Department of State website.

வெளி இணைப்புகள்[தொகு]

 • Republic of Angola (அரசின் ஏற்புடைய வலைநுழைவாயில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கோலா&oldid=2011359" இருந்து மீள்விக்கப்பட்டது