மக்களாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மக்களாட்சியின் அளவைத் தீர்மானிப்பது மக்களாட்சிச் சுட்டெண் ஆகும். ஜனவரி 2007 இல் தி எக்கொனொமிஸ்ட் இதழ் வெளியிட்ட மதிப்பீடுகளின் படி படத்தில் காட்டப்பட்டிருக்கும் வெளிறிய நீலப் பகுதிகள் மக்களாட்சிச் சுட்டெண்ணின் மொத்தமான 10 புள்ளிகளில் 9.5 புள்ளிகளும் (சுவீடன் 9.88 புள்ளிகளுடன் அதி கூடிய மக்களாட்சி கொண்ட நாடாகும்), கருப்புப் பகுதியில் உள்ள நாடுகள் குறைந்த மக்களாட்சிச் சுட்டெண் கொண்டவையாகும் (வட கொரியா 1.03 புள்ளிகளுடன் மிகக் குறைந்த மக்களாட்சிச் சுட்டெண் உடைய நாடாகும்).
மக்களாட்சி நாடுகள் எனக்கோரும் நாடுகள் தகவல் 2006 யூன் படி.
  மக்களாட்சி எனக்கோரும் நாடுகள்
  மக்களாட்சி எனக்கோராத நாடுகள்

மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர்.

மக்களாட்சியின் வரலாறு[தொகு]

உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று மிகப்பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க விடுதலைப் போர், பிரெஞ்சுப் புரட்சி, உருசியப் புரட்சி மற்றும் இந்திய சுதந்திரப்போர் ஆகியவை மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.

மக்களாட்சியின் பொருள்[தொகு]

மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள்.

"மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ குறிப்பிடுகிறார்.[1] அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்றும் கூறுகிறார்.[1][2]"மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்று முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார்.

மக்களாட்சியின் வகைகள்[தொகு]

மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன.

நேரடி மக்களாட்சி[தொகு]

நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தனர்.

பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறையான மக்களாட்சி நடைபெற்றது. இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது.

20ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும்.

மறைமுக மக்களாட்சி[தொகு]

மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் சார்பாளிகளைத் (பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுக்கின்றனர். இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது.

மக்களாட்சி வெற்றி பெற அவசியமான காரணிகள்[தொகு]

அரசியல் அறிவு படைத்த மக்கள் இருத்தல்[தொகு]

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்துத் தமது வாக்கினைப் பயன்படுத்துவதனால் நாட்டிற்குப் பொருத்தமான ஆட்சியாளர்களைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு வாக்காளருக்குக் கிடைக்கின்றது. அத்துடன் அதிகாரத்திற்கு வந்தபின்பு ஆளும் கட்சியினால் செயற்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பது மக்களின் கடமையாகும். இதற்காக மக்கள் சிறந்த அரசியல் அறிவுடையோராக இருக்க வேண்டியுள்ளது.

அதேபோன்று அரசியல் அறிவு படைத்த புத்திசாதுரியமான மக்களை கொண்ட சமூகத்தின் அங்கத்தவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதோடு பிறரது உரிமைகளுக்கும் மதிப்பளிப்பவர்களாகவும் விளங்குவர். இதன் காரணமாக சமூக முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கும், குற்றச் செயல்கள் துஷ்பிரயோகங்களற்ற சமூகமொன்றை உருவாக்குவதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

நேர்மையாக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய தலைவர்கள் இருத்தல்[தொகு]

மக்களாட்சியில் பிரதேச மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை ஆட்சி நிர்வாகத்தை நடாத்துவதற்காக பிரதிநிதிகள் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் முக்கிய பணி தேசிய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஆட்சியை மேற்கொள்வதாகும். தலைவர்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பொறுப்பு வாய்ந்த விதத்திலும் செயற்படுவதே மக்களின் எதிபார்ப்பாகும். அத்துடன் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதானது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும், தேசிய அபிவிருத்திக்கும் காரணமாகலாம்.

சுதந்திரமாகச் செயற்படும் நீதித்துறை இருத்தல்[தொகு]

நாட்டை ஆட்சி செய்வதற்குச் சட்டதிட்டங்கள் அவசியமானவை. அது போன்று சகலருக்கும் பொதுவான சட்ட ஒழுங்கொன்று செயற்படல் சட்டத்திற்குக் கீழ்ப்படிவுள்ள சமூகமொன்று உருவாகுவதற்கு அடிப்படையாக அமையும். சட்டத்தின் கீழ்ப்படிதல், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியன மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணிகளாகும். சமூகப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் என்பன நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதிலும் மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலுமே தங்கியுள்ளன.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 Kilcullen, R.J.. "Aristotle, The Politics". Introduction to Political Theory. Macquarie University. பார்த்த நாள் 2007-11-15.
  2. "Aristotle (384-322 BCE): General Introduction". The Internet Encyclopedia of Philosophy. பார்த்த நாள் 2007-11-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்களாட்சி&oldid=2224117" இருந்து மீள்விக்கப்பட்டது