சர்வாதிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடால்ஃப் ஹிட்லர் மற்றும் பெனிட்டோ முசோலினி. ஹிட்லரின் கொள்கைகள் மற்றும் ஆணைகள் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியது.

சர்வாதிகாரம் என்பது நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசு வடிவம் ஆகும். இதில் ஆட்சியாளர் ஒரு சர்வாதிகாரியாகச் செயல்படுவார். கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ரோமச் சர்வாதிகாரிகள் தொடர்பில், சர்வாதிகாரி என்பதன் பொருள் சற்று வேறானது. அக்காலத்தில் ரோமச் சர்வாதிகாரி என்பது, ரோமக் குடியரசின் ஒரு அரசியல் பதவி. நெருக்கடிநிலைக் காலங்களில் மட்டுமே இவர்களுக்கு முழுமையான அதிகாரம் இருக்கும். பிற காலங்களில் இவர்களது அதிகாரம் தன்விருப்பிலானதோ அல்லது பொறுப்பற்றதோ அல்ல. இவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். எனினும், கிமு 2 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்துக்குப் பின் வந்த ரோமச் சக்கரவர்த்திகள் அதிகாரத்தைத் தனிப்பட்டமுறையில் பயன்படுத்தியதுடன் தன்விருப்பாகவும் செயல்பட்டனர்.

தற்காலப் பயன்பாட்டில் சர்வாதிகாரம் என்பது நினைத்தபடி செயலாற்றும் அதிகாரம் கொண்டதும், சட்டத்துக்கோ, அரசியலமைப்புக்கோ, நாட்டுக்குள் இருக்கும் வேறெந்த சமூக அரசியல் காரணிகளுக்கோ கட்டுப்படாததுமான தலைமையைக் கொண்டிருக்கும்.

சில அறிஞர்கள், சர்வாதிகாரம் என்பது ஆளப்படுபவர்களின் இசைவு இன்றி ஆளுவதற்கான அதிகாரம் கொண்ட ஒரு அரசு வடிவம் என வரைவிலக்கணம் கூறுகின்றனர். வேறு சிலரோ இதை, "மக்களின் பொது நடத்தைகளினதும், தனிப்பட்ட நடத்தைகளினதும் ஏறத்தாழ எல்லா அம்சங்களையும் நெறிப்படுத்துகின்ற ஒரு அரசு" என்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வாதிகாரம்&oldid=1988806" இருந்து மீள்விக்கப்பட்டது