அரசப் பிரதிநிதி
Jump to navigation
Jump to search
அரசப் பிரதிநிதி (Regent), முடியாட்சி முறையில் ஆளப்படும் ஒரு நாட்டின் மன்னர் அல்லது ராணி நோய் அல்லது இயலாமையுடன் படுக்கையிலேயே காலம் தள்ளும் போதோ, அல்லது இளவரசன் குழந்தைப்பருவத்தினராக இருக்கும்போதோ அல்லது நடப்பு மன்னர் அல்லது ராணி வாரிசு இன்றி இறக்கும் போதோ, நாட்டின் அடுத்த மன்னரை/ராணியைத் தேர்ந்தெடுக்கும் வரையில், மன்னர் அல்லது ராணியின் நெருங்கிய உறவினர் அல்லது அமைச்சர் அல்லது படைத்தலைவர் ஒருவர் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் அரசப்பிரதிநிதியாக இருந்து செலுத்துவார்.[1] நாட்டின் மன்னர் அல்லது ராணியை தேர்ந்தெடுத்த பின், அரசப்பிரதிநிதி பதவி தானாக நீங்கி விடும்.