பேச்சு:மக்களாட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்களாட்சி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கட்டுரையில்,சனநாயகம் என்பது "மக்களால் மக்களுகாக நடாத்தபெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. இதனை மக்களாட்சி என்றே அழகாகச் சொல்லலாமே! தலைப்பை மக்களாட்சி என்று மாற்றிவிட்டு, உள்ளே சனநாயகம் என்றும் சொல்லாம் என்று நினைக்கின்றேன்.--செல்வா 15:57, 11 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

மக்களாட்சி நல்ல தமிழ். அதனையே முதன்மைப்படுத்தலாம்.--Kanags 21:24, 11 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
நன்றி, கனகு. --செல்வா 22:07, 11 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

பிரதிநிதி[தொகு]

பிரதிநிதி என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்?--Sivakumar \பேச்சு 07:30, 15 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

சிவகுமார், இது பற்றி நாம் முன்னமே கருத்தாடியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மக்களின் சார்பாக மக்களின் கருத்துக்களைத் எதிரொலிக்க, முன்வைக்க, தெரிவிக்க சட்டமன்றத்திலே உறுப்பினராக நிறுத்தப்படுபவர்தான் சார்பாளர் அல்லது "பிரதிநிதி" ஆகும். இது பற்றிய முன்நிகழ்ந்த பகுதியை கீழே இணைத்துள்ளேன்.

representation = முன்னிறுத்தல், ஒப்புநிறுத்தல், சார்புநிறுத்தல், சார்புநிற்றல். தமிழில், பெயர்ச்சொல் ஆக்கல் மிக எளிது. மேலும் பல பெயர்ச்சொல் வடிவங்களும் உண்டு. நட என்பது எப்படி நடத்தல், நடப்பு, நடை, நடத்தை, நடக்கை என்று பல்வேறு வடிவங்கள் கொள்ளுமோ அதே போல பல வினைச்சொற்களும் கொள்ளும் (மரபுக்கு ஏற்க). இங்கே சார்புநிலை, ஒப்புநிலை முத்லையவும் முதலியவும் செல்லும். இடமறிந்துதான் எது பொருத்தமாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.--செல்வா 23:14, 24 பெப்ரவரி 2007 (UTC)

இதற்கு இணையான தமிழ்ச் சொற்களை ஆக்கலாம்.--Sivakumar \பேச்சு 17:27, 5 ஜூன் 2007 (UTC)

சார்பாளர் என்பது representative. சார்பாண்மை என்பது representation. எனவே ஒரே சார்பாண்மை எனலாம், சிவகுமார்--செல்வா 17:34, 5 ஜூன் 2007 (UTC)

--செல்வா 12:11, 15 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா. இது குறித்து நாம் முன்பே உரையாடியதை மறந்து விட்டேன். எனினும் இது படிப்பவர்களுக்கு உடனே விளங்குமா எனத் தெரியவில்லை. எனவே, சார்பாளர் (பிரதிநிதி) என்று பயன்படுத்தலாமா?--Sivakumar \பேச்சு 12:43, 15 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
ஆம் சார்பாளர் (பிரதிநிதி) என்று ஆளலாம். "மக்களின் சார்பாக மக்களின் கருத்துக்களைத் எதிரொலிக்க, முன்வைக்க, தெரிவிக்க நிறுத்தப்படுபவர்தான் சார்பாளர் என்பதில் குழப்பம் வராது என நினைக்கிறேன். பல முறை இந்த விளக்கத்தை எடுத்து வைத்தால் சார்பாளர், சார்பாண்மை என்னும் சொற்கள் இயல்பாய் விளங்கும். பிரதிநிதி என்பதை யாரும் ஏதோ நிதி பணம் என்று குழம்பிக்கொள்வதில்லையே அதுபோல இதுவும் இயல்பான பொருள் வழி வழக்கூன்றும், குழப்பம் தலைதூக்காது என நினைக்கிறேன்.
மேலும், அன்றாட வழக்கிலும், "தொழிலாளிகள் சார்பாக இவர் பேசுவார்", "என் சார்பாக இவரை அனுப்புகிறேன்" "ஏழைகளின் சார்பாக", "மாணவர்களின் சார்பாக" என்றெல்லாம் கூறக்கேட்டிருக்கலாம். எனவே சார்பாளர் அல்லது சார்பாளி என்னும் சொல் பொருத்தமான சொல் என நினைக்கிறேன். --செல்வா 15:54, 15 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

மேலும், biased என்பதை எப்படிச் சொல்வது? ஒருதலையான எனலாமா? --Sivakumar \பேச்சு 12:45, 15 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

இதற்குச் சரியான சொல் ஒருபாற்கோடல், ஒருபாற்பட பேசுதல், ஒருசாய்வுப் பார்வை, பணக்காரர்-சாய்வுக் கருத்துக்கள், என்பன போல இடத்திற்கு ஏற்றார்போல வழங்கும். ஒருதலையான பார்வை என்பதும் மிகச்சரியான சொல். ஆனால் இவை எல்லாம் இடத்திற்கு ஏற்றார்போலவே சொல்தேர்வுறும்.--செல்வா 13:01, 15 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
விளக்கத்திற்கு நன்றி செல்வா :)--Sivakumar \பேச்சு 13:15, 15 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மக்களாட்சி&oldid=2282245" இலிருந்து மீள்விக்கப்பட்டது