குவான்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு ஆபிரிக்க அமெரிக்கப் பெண் கினாராவில் விளக்கேற்றுகிறார்

குவான்சா (Kwanzaa) அமெரிக்காவில் சில ஆபிரிக்க அமெரிக்கர்களால் ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படுவரும் ஒரு விழாவாகும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. "குவான்சா" என்ற பெயர் சுவாகிலி மொழியில் "மடுன்டா ய குவான்சா" (முதல் பழங்கள்) என்ற சொற்றொடரிலிருந்து வருகிறது. 1966இல் மௌலானா கரெங்கா இவ்விழாவை தொடங்கப்பட்டார்.

குவான்சாவின் கொள்கைகள்[தொகு]

இவ்விழாவில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் குவான்சாவின் ஏழு கொள்கைகளில் நாளுக்கு ஒரு கொள்கை கொண்டாடப்படுகின்றனர்.

  • உமோஜா (ஒன்றியம்)
  • குஜிசகுலியா (தன்முடிவு உரிமை)
  • உஜிமா (கூட்டத் தொழிலும் பொறுப்பும்)
  • உஜமா (குட்டப் பொருளாதாரம்)
  • நியா (நோக்கம்)
  • கூம்பா (ஆக்கத்திறன்)
  • இமானி (நம்பிக்கை)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவான்சா&oldid=2145190" இருந்து மீள்விக்கப்பட்டது