புர்க்கினா பாசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புர்க்கினா பாசோ
கொடி சின்னம்
குறிக்கோள்: "Unité, Progrès, Justice"  (பிரெஞ்சு)
"ஐக்கியம், முன்னேற்றம், நீதி"
நாட்டுப்பண்: Une Seule Nuit  (பிரெஞ்சு)
ஒரு தனி இரவு
தலைநகரம்வாகடூகு
12°20′N 1°40′W / 12.333°N 1.667°W / 12.333; -1.667
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
அரசாங்கம் குடியரசு
 •  ஜனாதிபதி பிளைஸ் சொம்போரே
 •  பிரதம மந்திரி டேர்ஷியஸ் சொங்கோ
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து
 •  தேதி ஆகஸ்ட் 5 1960 
பரப்பு
 •  மொத்தம் 2,74,000 கிமீ2 (74வது)
1,05,792 சதுர மைல்
 •  நீர் (%) 0.1%
மக்கள் தொகை
 •  2005 கணக்கெடுப்பு 13,228,000 (66வது)
 •  1996 கணக்கெடுப்பு 10,312,669
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $16.845 பில்லியன்1 (117வது)
 •  தலைவிகிதம் $1,284 (163வது)
மமேசு (2004)0.342
தாழ் · 174வது
நாணயம் மேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் (XOF)
நேர வலயம் GMT
அழைப்புக்குறி 226
இணையக் குறி .bf
1. இங்குள்ள தரவுகள் 2005க்கான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.

புர்க்கினா பாசோ (Burkina Faso) என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன. வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ மற்றும் கானா, தென்மேற்கே கோட் டிவார் ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன. இந்நாடு முன்னர் அப்பர் வோல்ட்டா (Upper Volta) என்ற பெயரில் இருந்தது, பின்னர் ஆகஸ்ட் 4, 1984இல் அதிபர் தொமஸ் சங்கரா என்பவரால் பெயர் மாற்றப்பட்டது. மோரி, டியோலா மொழிகளில் உயர் மக்களின் நாடு என்று இதற்குப் பொருள். 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1970களிலும், 1980களிலும் அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கானா மற்றும் ஐவரி கோஸ்ட் போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

புர்கீனா பாசோவில் பாரம்பரியக் குடிசைகள்

2022 இராணுவப் புரட்சி[தொகு]

23 சனவரி 2022ல் இராணுவ அதிகாரி டமீபாவின் தலைமையில் நடந்த இராணுவப் புரட்சியில் அதிபர் கபோரே சிறைப்பிடிக்கப்பட்டு இராணுவத்தால் ஆட்சி கைப்பற்றப்பட்டது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளன[1]. பாதுகாப்பற்ற தன்மையிலிருந்து நாட்டைக் கபாரேவினால் காக்க இயலாது என்ற காரணத்தைக் கூறி இராணுவப் புரட்சி நடத்தப்பட்டுள்ளது.

புர்கினா பாசோவின் வரைபடம்
Tolotama reforestation, Burkina Faso.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்

  1. "Soldiers Seize Power in Burkina Faso, Drawing International Ire".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்க்கினா_பாசோ&oldid=3379848" இருந்து மீள்விக்கப்பட்டது