உள்ளடக்கத்துக்குச் செல்

துவாரக்கு மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவாரக்கு
மொத்த மக்கள்தொகை
(5.7 மில்லியன் (மதிப்பீடு))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
துவாரக்கு மொழிகள் (தமாசெக்கு)
சமயங்கள்
இசுலாம்

துவாரக்கு (Tuareg) எனப்படுவோர் வடக்கு ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் முக்கிய இனக்குழுவாகும்[1][2]. இவர்கள் பாரம்பரியமாக நாடோடிகளாக கால்நடை மேய்ப்பவர்களாக வாழும் பெர்பர் மக்கள் ஆவர்.

துவாரக்குகள் அதிகமாக வாழும் பகுதிகள்

5.7 மில்லியன் மக்கள் பேசும் துவாரெக் மொழி பெருமொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது[3] பெரும்பாலான துவாரக்கு மக்கள் நைஜர், மற்றும் மாலியின் சகாராவை ஒட்டிய பகுதிகளில் வாழ்கிறார்கள். ஆனாலும் இவர்கள் நாடோடிகளாக வாழ்வதால் இவர்களில் சிலர் தமது எல்லையை விட்டு வெளியேறி, தென்கிழக்கு அல்ஜீரியா, மற்றும் தென்மேற்கு லிபியா, வடக்கு புர்க்கினா பாசோ போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு குடியேறியுள்ளனர். மேலும் சிலர் நைஜீரியாவின் வடக்கேயும் குடியேறியுள்ளனர்[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Q&A: Tuareg unrest". BBC. 7 September 2007. http://news.bbc.co.uk/2/hi/africa/6982266.stm. பார்த்த நாள்: 4 January 2008. 
  2. "Who are the Tuareg?". Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 2007-11-03.
  3. Lewis, M. Paul (ed.), 2009. Ethnologue: Languages of the World, Sixteenth edition. Dallas, Tex.: SIL International. Online version: http://www.ethnologue.com/.
  4. "The total Tuareg population is well above one million individuals." Keith Brown, Sarah Ogilvie, Concise encyclopedia of languages of the world, Elsevier, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-087774-7, p. 152.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரக்கு_மக்கள்&oldid=3216980" இலிருந்து மீள்விக்கப்பட்டது