சகாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகாரா (الصحراء الكبرى)
பெரும்பாலைவனம்
பாலைவனம்
Sahara satellite hires.jpg
நாசாவால் எடுக்கப்பட்ட சகாராப் பாலைவனத்தின் தோற்றம்.
நாடுகள் அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா
மிகவுயர் புள்ளி எமி கௌசி 11,204 ft (3,415 m)
 - ஆள்கூறுகள் 19°47′36″N 18°33′6″E / 19.79333°N 18.55167°E / 19.79333; 18.55167
மிகத்தாழ் புள்ளி கட்டாரா தாழ்மையம் −436 ft (−133 m)
 - ஆள்கூறு 30°0′0″N 27°5′0″E / 30.00000°N 27.08333°E / 30.00000; 27.08333
நீளம் 4,800 கிமீ (2,983 மைல்), E/W
அகலம் 1,800 கிமீ (1,118 மைல்), N/S
பரப்பு 94,00,000 கிமீ² (36,29,360 ச.மைல்)
Biome பாலைவனம்

சஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் (அரபு:الصحراء الكبرى) என்பது ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் மத்திய தரைக்கடல் கடற்கரையின் வளமான பகுதிகள், மக்ரேபின் அட்லஸ் மலைகள், எகிப்து மற்றும் சூடானில் உள்ள நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் வளமான பகுதியைத் தவிர்த்து, வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. இது கிழக்கில் செங்கடலில் இருந்து நீண்டும், வடக்கே மத்திய தரைக்கடலும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லைகளாக கொண்டு, இதன் நிலப்பரப்பு கடற்கரையை நோக்கிச் செல்லச்செல்ல படிப்படியாக பாலைவனத்திலிருந்து கடலோர சமவெளியாக மாறுகிறது. தெற்கில், இது நைல் நதி பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் துணை சகாராவின் வெப்பமான பகுதிக்கு அருகிலுள்ள அரைப் பாலைவன வெப்பமண்டல சவன்னாவை பட்டாயாச சுற்றியுள்ளது. சகாராவை மேற்கு சஹாரா, நடு அஹாகர் மலைகள், திபெஸ்டிக் மலைகள், ஏய்ர் மலைகள், டெனெரெ பாலைவனம், லிபிய பாலைவனம் போன்ற பல பிரதேசங்களாக பிரிக்கலாம். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது.

இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா (About this soundصحراء ) என்பதில் இருந்து எழுந்ததாகும்.

நிலவியல்[தொகு]

சஹாரா பாலைவனத்திற்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும், வட திசையில் அத்திலசு மலையும் மத்தியதரைக்கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. சஹாரா பாலைவனம் அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோக்கோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மத்தியதரைக் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது. சஹாரா பாலைவனம் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் (3,500,000 சதுர மைல்) அளவு கொண்டது. இது ஆப்பிரிக்காவில் 31 சதவிகிதம் என்றாலும் இந்த பரப்பளவு காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது. 250 மி.மீ க்கும் குறைவான சராசரி வருடாந்திர மழைப்பகுதி கொண்ட அனைத்து பகுதிகளும் சகாரா பாலைவனத்திற்கு உள்ளடக்கப்பட்டிருந்தால், சகாரா 11 மில்லியன் சதுர கிலோமீட்டர் (4,200,000 சதுர மைல்) கொண்டதாக இருக்கும்.

பல ஆழ்ந்த சிதறல்களைக் கொண்ட மலைகள், பல எரிமலைகளும், இந்தப் பாலைவனத்திலிருந்து எழுந்தன, இதில் குறிப்பிடத்தக்கன அஹர் மலைகள், அஹாகர் மலைகள், சஹரன் அட்லஸ், திபீஸ்டிக் மலைகள், அட்ரார் டெஸ் இஃபோராஸ், செங்கடல மலை போன்றவை ஆகும். சகாராவின் மிக உயர்ந்த சிகரம் எமி குசீசி ஆகும், இது ஒரு கேடய எரிமலை ஆகும்.

சஹாரா ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் நாடும் காங்கோ வடிநிலப் பகுதியும் உள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகளால் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே மூடியுள்ளது.

மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தில் சஹாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சஹாராவில் முதலைகளும் 30,000ற்கும் மேற்பட்ட மற்றுமுள்ள நீர்வாழ் விலங்குகளும் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளன. நவீன சஹாராவில் நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை. சைத்தூன் மரம் போன்ற மத்திய தரைக் கடற் பகுதித் தாவரங்களே அங்கு இருந்தன. இந்நிலை கி.மு 1600 வரை இருந்தது. இப்போதய சஹாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றமும் வெப்பநிலை மாற்றங்களுக்கும் ஏற்பட்ட பிறகு, இது மணற்பாங்கான பாலைவனமாக மாறியது.

நடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது. நடு சகாராவின், கலப்பு பாலைப் பகுதியில், பெரும் பாலைவனத்தின் பல துணைப்பிரிவுகள் உள்ளன அவை: டேன்சுரூஃப், டெனெரெ, லிபிய பாலைவனம், கிழக்கு பாலைவனம், நுபியான் பாலைவனம் மற்றும் பல. இது மிகவும் வறண்ட பகுதிகளாக பல ஆண்டுகள் அடிக்கடி மழை இருக்காது.

வடக்கு சகாரா என்பது எகிப்தில் மத்தியதரைக் கடல் மற்றும் லிபியாவின் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இது   மத்தியதரைக்கடல் வனப்பகுதி, மரக்காடு, மற்றும் வட ஆபிரிக்காவின் சூழல் மண்டலங்களை சுற்றிக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் மத்திய தரைக்கடல் காலநிலை மற்றும் வெப்பமான கோடைக்காலம் மற்றும் குளிர் மற்றும் மழையான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் (3.9 அங்குலம்) வருடாந்திர மழையைப் பெறுகின்றது.[1]

பருவகால அளவின் படி, சஹாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ (5.9 அங்குலம்) வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது (இது ஒரு நீண்ட கால சராசரி அளவீடு ஆகும், மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது).[1]

சகாராவில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள், மவுரித்தானியாவின் தலைநகரான நுவாக்சூத், அல்ஜீரியாவின் தாமன்ராஸெட், ஓர்குலா, பெச்சர், ஹாஸ்ஸி மெஸ்அௗத், கர்தாயா, எல் ஒய்யுட்; மாலிவில் உள்ள திம்புக்டு; நைஜரில் அகடெஸ்; லிபியாவில் காட்; சாத் நகரில் ஃபைஏ-லார்கோவ் போன்ற தகரங்களாகும்.

சுற்றுச் சூழல்[தொகு]

கடைசி பனி ஆண்டிற்குப் பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது. பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் பாலைவனமாக மாறி விட்டது என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் சஹாரா பல சூழல் மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற மாற்றங்கள் 41000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி 22o முதல் 24.5o சாய்வதனால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் 15000 (17000 A.D) வருடங்கள் கழித்து சஹாரா பசுமையான இடமாக மாறும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது உலகிலேயே வெப்பம் மிகுந்த பகுதியாகும். ஆனாலும் இது வறண்ட பகுதியல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன. அவற்றிற் சில மலைகளில் கோடை காலங்களிலும் பனி படர்ந்திருக்கும்[2][3]. திபெஸ்தி மலைகளில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை 2500 மீட்டர் அளவு பனிப்படர்வு இருக்கும். சில மலைகளில் பனிப்படர்வு சில நிமிடங்களில் கரைந்து விடும்[4]. இதில் முக்கியமான மலைத் தொடர்கள் அல்ஜீரியப் பகுதிகளில் உள்ளன. எகிப்துப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன. சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புக்கள் உள்ளன[2].சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.[2].சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். மேற்கு அல்ஜீரியப் பகுதிகளில் காற்று கடுமையாக வீசும்[5][6].

இங்கு இரும்புத் தாதுக்களும் பெறுமளவிற் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும், அல்ஜீரியாவில் எண்ணெயும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடைக்கின்றன.

தாவரங்களும் விலங்குகளும்[தொகு]

சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர்[7].

சாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்

இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

பாலத்தீன மஞ்சள் தேள் என்னும் தேள் இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது. எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே.

பல வகையான நரிகளும் இங்கு காணப்படுகின்றன. அடாக்சு எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக்குப் பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறு மான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக் கூடியன.

அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாராச் சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.

பல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும். இங்கு வெள்ளி எறும்புகள் எனும் உயிரினமும் உள்ளது. இது பூமிக்கடியில் குழிகளில் வசிக்கும். ஒரு மணி நேரத்திற்கு மேல் இவை வெளியில் திரிந்தால் இறந்து விடும். இவை வெப்பத்தினால் இறக்கும் உயிரிணங்களை உணவாக உட்கொள்ளும்.

வரலாறு[தொகு]

நூபியர்[தொகு]

பெனி ஐசுகன் அல்ஜீரிய சஹாராவில் தடித்த சுவர்களால் சூழப்பட்ட ஒரு புனித நகரம்.

நவீன கற்காலத்தில், அஃதாவது பொ.மு. 9500 இல் பாலைவனமாக மாற தொடங்க முன், இங்கு மத்திய சூடான் பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத் தேவையான உணவை வழங்கும் காலநிலை நிலவி வந்தது.

எகிப்தியர்கள்[தொகு]

போனீசியர்கள்[தொகு]

கிரேக்கர்கள்[தொகு]

நகர நாகரீகம்[தொகு]

இஸ்லாமிய விஸ்தரிப்பு[தொகு]

===துருக்கியர்களின் காலம்===

ஐரோப்பியர்களின் குடியேற்றவாதம்[தொகு]

பேரரசுகளின் உடைவுகளும் அதன் பின்னான காலமும்[தொகு]

மக்களும் மொழிகளும்[தொகு]

19 ஆம் நூற்றாண்டில், வணிகத்தில் கறுப்பு நிற ஆப்பிரிக்க அடிமைகளை சகாராவினூடாக இடம்மாற்றும் ஒரு படம்

caravan transporting black African slaves across the Sahara.]]

சகாராவைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு பூர்வீகத்தைக் கொண்டவர்களாயும், வெவ்வேறு மொழிகளைப் பேசுபபர்களாகவும் உள்ளனர். அரேபிய மொழிகளே அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளன.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Walton, K. (2007). The Arid Zones. Aldine. 
  2. 2.0 2.1 2.2 "Sahara - LookLex Encyclopaedia". looklex.com. 16 செப்டம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 May 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Snow in the Sahara". Algeria.com. 5 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Snow Falls In The Sahara". The Spokesman-Review (Spokane, Washington: Cowles Publishing Company): pp. 1. 19 February 1979. http://news.google.com/newspapers?id=UsoRAAAAIBAJ&sjid=9O0DAAAAIBAJ&dq=snow%20sahara&pg=2960%2C2123284. 
  5. Messerli, B. (1973). "Problems of Vertical and Horizontal Arrangement in the High Mountains of the Extreme Arid Zone". Arctic and Alpine Research (Boulder, Colorado: University of Colorado) 5 (3): 139–147. 
  6. Kendrew, Wilfrid George (1922). The Climates of the Continents. Oxford: Clarendon Press. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4067-8172-4. http://books.google.com/?id=pyDpdkVOInMC&pg=PA27&lpg=PA27&dq=ahaggar+snowcapped&q. 
  7. "Sahara (desert, Africa) -- Britannica Online Encyclopedia". britannica.com. Retrieved 4 May 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாரா&oldid=3659301" இருந்து மீள்விக்கப்பட்டது