நரி
| நரி | |
|---|---|
| ஜப்பான் நாட்டில் உள்ள ஒக்கைடோ தீவில் நரி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனங்கள் | |
|
Vulpes bengalensis | |
நரி நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி காட்டு விலங்கு. உருவில் ஓநாய்களைக் காட்டிலும் இவை சிறியதாக இருக்கும். உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. கடுங்குளிரான பனிபடர்ந்த ஆர்ட்டிக் முனைப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சுடுநிலமாகிய சகாராப் பாலைவனத்திலும் வாழ்கின்றன. மேற்கு நாடுகளில் நரி என்று பொதுவாக செந்நரியைக் குறிப்பிடுகின்றனர்.
நரி பெரும்பாலும் 2 - 3 ஆண்டுகள் வாழ்கிறது[மேற்கோள் தேவை]. ஆனால் பிடித்து வளர்க்கப்படும் நரிகள் பத்துக்கும் அதிகமான ஆண்டுகள் வாழ்வதுண்டு. நரிகள் பெரும்பாலும் சுமார் 9 கிலோ.கி எடை இருக்கும். கருவில் வளரும் நாட்கள் 60-63 நாட்கள். ஆனால் ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் வாழும் பெருஞ்செவி நரிகளின் குட்டிகள் கருவில் வளரும் நாட்கள் சுமார் 50 நாட்கள் ஆகும்.[1]
நாய்ப்பேரினத்தின் மற்ற வகைகளான நாய், ஓநாய் போன்றவற்றைவிட அளவில் மிகச் சிறியது.
மேற்கோள்
[தொகு]- ↑ Macdonald, David (Ed) All the World's Animals - Carnivore, Torstar Books Inc., New York, 1985.
வெளி இணைப்புகள்
[தொகு]- BBC Wales Nature: Fox videos
விக்கிமூலத்தில் உள்ள ஆக்கங்கள்:
- "Fox". The American Cyclopædia. (1879).
- "Fox". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (9th) 9. (1879).
- "Fox". New International Encyclopedia. (1905).
- "Fox". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).
- "Fox". The New Student's Reference Work. (1914).
- "Fox". Encyclopedia Americana. 1920.
- "Fox". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).
