உள்ளடக்கத்துக்குச் செல்

அமேசான் தர அடையாள எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமேசான் தர அடையாள எண் (Amazon Standard Identification Number) என்பது அமேசான் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பத்து இலக்கங்கள் கொண்ட ஒரு தனித்துவ எண்ணாகும். இது அமேசான் மற்றும் அதன் கூட்டாளர்களால் உபயோகப்படுத்தப்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு அடையாளங்காட்டி எண்ணாகும்.[1] 1996 ஆம் ஆண்டு அமேசான் மென்பொருள் பொறியாளரான ரெபேக்கா ஆலனால் இது வடிவமைக்கப்பட்டது.[2] அமேசானில் விற்கப்படும் ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு தனிப்பட்ட அமேசான் தரப்புத்தக எண் கொடுக்கப்பட்டுள்ளது. 10 இலக்க பன்னாட்டுத் தரப்புத்தக எண் (ISBN) கொண்ட புத்தகங்களுக்கு, இந்த இரண்டு எண்களும் ஒன்றாகவே உள்ளன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Product UPCs and GTINs". Amazon Seller Central. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 25 May 2011.
  2. Allen, Rebecca (8 June 2021). "The Story behind ASINs". Invent Like an Owner. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
  3. "FAQ: ISBN for Amazon Associates". Affiliate-Program.Amazon.com. பார்க்கப்பட்ட நாள் 29 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்_தர_அடையாள_எண்&oldid=3950567" இலிருந்து மீள்விக்கப்பட்டது