உள்ளடக்கத்துக்குச் செல்

நாடோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாடோடிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2005-இல் நமுத்சோ என்னுமிடத்திற்கு அருகில் முகாமிட்டுள்ள இடையர் நாடோடிகள். திபெத்தில் திபெத்திய இன மக்கட்தொகையில் 40% மக்கள் நாடோடிகளே[1]

.

நாடோடிகள் (Nomads) என்போர் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் குழுவினர். உலகெங்கும் மொத்தம் 30 முதல் 40 மில்லியன் வரையிலான நாடோடிகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாடோடிகள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர் எனினும் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் இவர்களைக் காண்பதரிது.

நாடோடிகளை அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரித்துள்ளனர். முதல் வகையினர் அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள வளங்களை வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்க்கை நடத்துபவர்கள். இரண்டாவது வகையினர் விலங்குகளை வளர்ப்பவர்கள். இவர்கள் மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளுக்குத் தமது வளர்ப்பு விலங்குகளுடன் நகர்ந்து கொண்டே இருப்பர். மூன்றாவது வகையினர் தமது திறமைகளைப் பயன்படுத்தி தங்களுடன் பயணிப்பவர்களுக்கு உதவி பொருளீட்டுவோர்.

கடல் வாழ் நாடோடிகள்

[தொகு]

பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.[2]

கலை நாடோடிகள்

[தொகு]

இந்தியாவின் தமிழ் நாடு மாநில மக்கள் தொகையில் 5 லட்சம் மக்கள் நாடோடிகளாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் முக்கியமாக தாசரிகள், மணியாட்டிக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பாம்பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல் வேசக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக் குறவர்கள், மற்றும் வம்சராஜ் என பல இனத்தவர்கள் வாழுகிறார்கள்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. In pictures: Tibetan nomads BBC News
  2. இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! - வியக்கத்தக்க படங்கள் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் தினகரன்19 அக்டோபர் 2015
  3. அழிவின் விளிம்பில் தமிழக நாடோடிகள்: அரசின் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடி&oldid=3713329" இலிருந்து மீள்விக்கப்பட்டது