பலதுணை மணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது பலதுணை மணம் (Polygamy) எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அமைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கணவர்களுடன் மண உறவு கொண்டு வாழலாம். முதல் வகை மணம், பலமனைவி மணம் (polygyny) என்றும், இரண்டாவது வகை, பலகணவர் மணம் (polyandry) என்றும் அழைக்கப்படும்.

உலகில் மிகப் பெரும்பான்மையான சமுதாயங்களில் பலதுணை மணமே வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதிலும் மிகப் பெரும்பான்மையாகக் கைக்கொள்ளப்படுவது பலமனைவி மணமேயாகும்.[மேற்கோள் தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலதுணை_மணம்&oldid=2022510" இருந்து மீள்விக்கப்பட்டது