கணவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவ்விருவருக்கு இடையில் உருவாகின்ற புதிய உறவு முறையில், அக்குறிப்பிட்ட ஆண் அப்பெண்ணுக்குக் கணவன் (ஒலிப்பு) ஆகின்றான். சமுதாயங்களின் பண்பாடுகளை ஒட்டிக், கணவன் என்னும் உறவு முறைக்குரிய வகிபாகம் (role) வேறுபட்டுக் காணப்படுகின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாடுடையது தமிழ்ச் சமுதாயம், இதனை ஒருதாரம்("மோனொகேமி") என்கிறோம். ஆனாலும் பலதாரங்களைக் கொண்ட கணவர்களும் உள்ளனர். மாறிவரும் உலகில் திருமணமில்லாத ஒன்றி வாழும் முறையும் தமிழகத்தில் உள்ளது.[1][2][3]

பழமொழிகள்[தொகு]

  • கணவனே கண்கண்ட தெய்வம்
  • மணாளனே மங்கையின் பாக்கியம்
  • கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dower - Definition of dower by Merriam-Webster". m-w.com.
  2. "SGN Page 6". www.sgn.org.
  3. William C. Horne, Making a heaven of hell: the problem of the companionate ideal in English marriage, poetry, 1650–1800 Athens (Georgia), 1993
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவன்&oldid=3889780" இலிருந்து மீள்விக்கப்பட்டது