பெண் உறுப்பு சிதைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆப்பிரிக்காவில் பெண் உறுப்பு சிதைக்கும் முறை உள்ள இடங்களும் பெண் உறுப்பு சிதைப்பு நடக்கும் அளவும்

பெண் உறுப்பு சிதைப்பு (ஆங்கிலம்: Female genital mutilation) என்பது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றுவதாகும். இது உகாண்டா, சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே சிறுமிகளுக்கு நடைபெறும் ஒரு சடங்கு ஆகும். கந்து அகற்றம் நடத்தப்பட்ட ஒரு பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்கவே முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவளாக இருந்தாலும் அப்பெண்ணால் புணர்ச்சிப் பரவசநிலையை (Orgasm) அடைய முடியாது. இந்த வழக்கத்தால் கந்து அகற்றப்பட்ட சிறுமிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியான பல பிரச்சினைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.[1]

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் தற்போதும் பின்பற்றப்படுகிறது. 13 கோடி பெண்களுக்குக் கந்து அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் கந்து அகற்றப்படுகிறது.[2]

வகைகள்[தொகு]

கந்து உள்ள பெண் உறுப்பும் மற்றும் மூன்று வகையான கந்து அகற்று முறையும்

பெண் உறுப்பு சிதைப்பில் மூன்று வகையான முறை கடைபிடிக்கப்படுகிறது. அவை,

  1. பெண்ணின் கந்து முனையை மட்டும் வெட்டி விடுதல் (TYPE I).
  2. கந்து முனை மற்றும் புழையின் (Vagina) இரு பக்கத்திலும் உள்ள இதழ்களையும் (labia minora) வெட்டு விடுதல் (TYPE II)
  3. கந்து முனையை அறுத்து, இதழை அறுத்து, புழையின் மேல்பகுதியை நூலால் தைத்துவிடுதல் (TYPE III)[3]


மேற்கோள்கள்[தொகு]

  1. http://islamindia.wordpress.com/2009/12/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E2%80%98%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E2%80%99-%E0%AE%89/
  2. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6056:2009-08-02-17-56-52&catid=283:-httpudarublogdrivecom
  3. http://islamindia.wordpress.com/2009/12/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E2%80%98%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E2%80%99-%E0%AE%89/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_உறுப்பு_சிதைப்பு&oldid=1753886" இருந்து மீள்விக்கப்பட்டது