மயக்க மருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயக்க மருந்து
மயக்க மருந்து ஏற்றப்படும் பிள்ளை
பாடத் தலைப்புE03.155
MedlinePlusanesthesia
மின்மருத்துவம்1271543

மயக்க மருந்து (Anesthetic) என்பது அறுவை சிகிச்சைகளின் போது வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஆகும். இம்மருந்து மனித உடலின் சுவாசம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இதயத்தின் செயற்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது.[1] மயக்க மருந்தானது தோலில் உரோஞ்சுவதன் மூலமும், மருந்து ஊசியின் மூலமும் வாயுவாகவும் மனித உடலினுள் உட்செலுத்தப்படுகின்றது. 1842 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாக டை எத்தில் ஈதர் குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.[2] மயக்க மருந்துப் பயன்பாட்டினை அனஸ்தீசியா (anaesthesia) என அழைப்பர். ஜோசப் லிஸ்டர் என்பவரே நவீன மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர். கோக்கைன், மதுசாரம் ஆகியவையும் வேறுசில போதைப்பொருட்களுமே முற்காலத்தில் மயக்க மருந்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயக்க_மருந்து&oldid=3734461" இருந்து மீள்விக்கப்பட்டது