மதுசாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதுசார மூலக்கூறு ஒன்றின் வினைத் தொகுதி. காபன் அணு ஐதரசன் அணுவுடன் பிணைக்கப்பட்டுள்ளதுடன், காபன் சங்கிலியொன்றை ஒருவாக்கும் வகையில் காபன் அணு இன்னொரு காபன் அணுவுடன் பிணைக்கப்பட்டு இருத்தலும் கூடும். ஒரு காபன் அணுவைக் கொண்ட மெதனோல் படத்தில் காட்டப்பட்டுள்ளது. எத்தனால், எனப்படும் குடிக்கும் மதுசாரம் இரண்டு காபன் அணுக்களைக் கொண்டது.

வேதியியலில், மதுசாரம் (alcohol, ஆல்ககால்) என்பது, அல்கைல் அல்லது பதிலிடப்பட்ட அல்கைல் கூட்டம் ஒன்றிலுள்ள கரிம (காபன்) அணுவொன்றுக்குப் பிணைக்கப்பட்டுள்ள ஐதரொட்சைல் கூட்டத்தைக் கொண்ட ஒரு கரிமச் சேர்வை ஆகும். எளிமையான வளையமிலா மதுசாரம் ஒன்றின் பொதுச் சூத்திரம் CnH2n+1OH ஆகும். மதுசாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் இச்சேர்வையைக் குறிக்கும் அரபு மொழிச் சொல்லான அல்-குகூல் என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.

பொது வழக்கில் மதுசாரம் என்பது எதனோல் என்னும் குறிப்பிட்ட மதுசாரத்தைக் குறிக்கிறது. நிறம் அற்றதும், எளிதில் ஆவியாகக் கூடியதும், குறைந்தளவு மணம் கொண்டதுமான எதனோல் சர்க்கரைப் பொருட்களை நொதிக்க வைப்பதன் மூலம் பெறப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுசாரம்&oldid=1877256" இருந்து மீள்விக்கப்பட்டது