சல்போனைல் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சல்போனைல் குழு இரண்டு ஐதரோகார்பன் பதிலிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரு சல்போன்

சல்போனைல் குழுக்கள் (Sulfonyl group) என்பவை R−S(=O)2−R′ என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன. இவ்வேதி வினைக்குழுவின் வாய்ப்பாட்டில் கந்தகம் மற்றும் ஆக்சிசன் அணுக்களுக்கிடையில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் இடம்பெற்றிருக்கும். [1]:53[2] முதன்மையாக சல்போன்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு வேதி வினைக்குழுவாகவும் அல்லது அசைல் குழுக்களைப் போல சல்போனிக் அமிலத்திலிருந்து ஓர் ஐதராக்சில் குழுவை நீக்குவதால் கிடைக்கும் ஒரு பதிலியாகவும் இக்குழு பார்க்கப்படுகிறது. [1]:1470-1476

சல்போனைல் குழுக்களை ஈரைசோபியூட்டைல் அலுமினியம் ஐதரைடுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி சல்பைடுகளாக மாற்ற இயலும். இலித்தியம் அலுமினியம் ஐதரைடும் இந்த ஒடுக்க வினையை நிகழ்த்தும் என்றாலும் முழுமையாக சல்போன்கள் முழுவதையும் சல்பைடாக இது மாற்றுவதில்லை. [1]:1851

கரிம வேதியியலில் −S(=O)2− குழு எந்தவொரு கார்பன் அணுவுடனும் இணைக்கப்படாமல் இருந்தால் அது சல்பியூரைல் சேர்மம் என்று அழைக்கப்படுகிறது. [3]

சல்போனைல் குழு பதிலிக்கு எடுத்துக்காட்டுகள்[தொகு]

சல்போனைல் குழுக்கள்:

குழுவின் பெயர் முழு பெயர் போலிதனிமக் குறியீடு எடுத்துக்காட்டு
டோசில் பாரா-தொலுவீன்சல்போனைல் Ts டோசில் குளோரைடு (பாரா-தொலுயீன்சல்போனைல் குளோரைடு)
CH3C6H4SO2Cl
புரோசில் பாரா-புரோமோபென்சீன்சல்போனைல் Bs
நோசில் ஆர்தோ'- அல்லது பாரா-நைட்ரோபென்சீன்சல்போனைல் Ns
மெசில் மெத்தேன்சல்போனைல் Ms மெசில் குளோரைடு (மெத்தேன்சல்போனைல் குளோரைடு)
CH3SO2Cl
டிரைபிலைல் டிரைபுளோரோமெத்தேன்சல்போனைல் Tf
டிரெசில் 2,2,2-டிரைபுளோரோயெத்தில்-1-சல்போனைல்
தான்சில் 5-(இருமெத்திலமினோ)நாப்தலீன்-1-சல்போனைல் Ds தான்சைல் குளோரைடு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Smith, Michael B.; March, Jerry (2007). March's Advanced Organic Chemistry (6th ). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-72091-1. 
  2. வார்ப்புரு:Clayden
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 694-695. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்போனைல்_குழு&oldid=3351738" இருந்து மீள்விக்கப்பட்டது