தையோ அசிட்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தையோ அசிட்டால்களின் பொதுவான அமைப்பு
டைதையோ அசிட்டால்கலின் பொதுவான அமைப்பு

தையோஅசிட்டால்கள் (Thioacetals) என்பவை அசிட்டால்களின் கந்தக ஒப்புமை சேர்மங்களாகும். அசிட்டால்கள் தயாரிப்பது போலவே ஆல்டிகைடுடன் தையோல் சேர்த்து வினைபுரிவதன் மூலமாக இவற்றைத் தயாரிக்க முடியும்.

RSH + R'CHO → R'CH(OH)SR

இடைநிலைச் சேர்மமான டைதையோ அசிட்டால்கள்,தையோ அசிட்டால்கள் தயாரிப்பது போலவே தயாரிக்கப்படுகின்றன.

RSH + R'CH(OH)SR → R'CH(SR)2 + H2O

குறிப்பாக இத்தகைய வினைகள் இலூயிக்கமிலம் அல்லது பிரோன்சுடெட்டமிலம் போன்ற வினையூக்கிகளின் உதவியால் நிகழ்கின்றன. ஆல்டிகைடுடன் 1,2 ஈத்தேன் டைதயோல் வினைபுரிவதால் உண்டாகும் டைதையோ அசிட்டால்கள் கரிமத் தொகுப்பு வினைகளில் உபயோகமாக உள்ளன.

C2H4(SH)2 + R'CHO → R'CHS2C2H4 + H2O

ஆதலால் ஆல்டிகைடில் உள்ள கார்பனைல் கார்பன் அதாவது இரட்டை பிணைப்பில் ஆக்சிசனைக் கொண்டுள்ள கார்பன் அணு எலக்ட்ரான் கவரியாக உள்ளது. டைதையோ அசிட்டால்களின் புரோட்டான் நீங்கும் வழிப்பொருள் சிறப்புறுப்பாக அணுக்கருகவர் கார்பன் மையங்கள் உள்ளன.

R'CHS2C2H4 + R2NLi → R'CLiS2C2H4 + R2NH

பொதுவாக இவ்வினை 1,3 டைதையோலேன்களில் நடைபெறுகிறது. R'(H)Cδ+Oδ− மற்றும் R'CLi(SR)2 இடையிலான முனைவுத்தன்மை தலைகீழாகிறது. இவ்வாறு முனைவுத்தன்மை தலைகீழாதலை உம்போலங்கு என்கிறார்கள்[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. எஆசு:10.1002/anie.197902393 10.1002/anie.197902393
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. எஆசு:10.1055/s-1977-24412 10.1055/s-1977-24412
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தையோ_அசிட்டால்&oldid=2169507" இருந்து மீள்விக்கப்பட்டது