அணுக்கரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹீலியம் அணுவொன்றின் கரு. நேர்மின்னிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் நொதுமிகள் ஊதா நிறத்திலும் காணப்படுகின்றன.

அணுக்கரு (Atomic nucleus) என்பது ஓர் அணுவில் நேர் மின்னேற்றத்தைக் கொண்டுள்ள மிகச் சிறிய அடர்ந்த பகுதியாகும். இதன் மையத்திலேயே நேர்மின்னி, நொதுமி ஆகிய அணுக்கருனிகள் உள்ளன.

இந்த அணுக்கருவின் ஆரம் (ஐதரசன் போன்ற பாரமற்ற அணுக்களில்) 1.6 fm (1.6 x 10-15 மீ) முதல் (யுரேனியம் போன்ற பாரமான அணுக்களில்) 15 fm வரையாகும்.

"அணுக்கரு" என்ற சொல் என்பது முதன் முதலில் 1844 இல் மைக்கேல் பாரடேயினால் "அணுவொன்றின் மையப்புள்ளி" என்ற விளக்கத்தோடு தரப்பட்டது. தற்கால எளிய விளக்கம் 1912இல் எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டுவினால் தரப்பட்டது.[1]

அணுக்கருவானது நேர்மின்னிகளையும் நொதுமிகளையும் (இரு வகை பாரியான்கள், baryons) அணுக்கரு விசை மூலம் பிணைப்பில் வைத்திருக்கிறது. இந்த பாரியன்கள் மேலும் உட்பகுப்பான நுண்அணுத்துகள்களான குவார்க்குகளினால் அணுக்கருப் பெருவிசை (strong interaction) மூலம் பிணைக்கப்பட்டிருக்கின்றன.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. அணுக்கரு – Etymology ஒன்லைன் அகராதி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு&oldid=1558568" இருந்து மீள்விக்கப்பட்டது