ஆல்க்கைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசிட்டிலீன் அல்லது எத்தைன் வளிமம், C2H2
ஆக்ஸி-அசிட்டிலீன் எரிகுழல்

ஆல்க்கைன் (Alkyne) அல்லது மதுக்கணியம் என்பது ஏதேனும் இரு கரிம அணுக்களுக்கு இடையேயாயினும் மூவிணைப்பு (முப்பிணைப்பு) கொண்ட ஒரு ஹைடிரோ-கார்பன் (கரிம-நீரதை) சேர்வை (மூலக்கூறு). ஆக்ஸிஜனோடு இணைந்து மிக அதிக வெப்பம் தரும் அசிட்டிலீன் என்னும் வளிமம் இந்த வகை ஆல்க்கைன் தான். அசிட்டிலீன் இவ்வகை ஹைடிரோ-கார்பன் வரிசையில் ஓர் எளிமையான ஒரு மூலக்கூறாயினும், சில பொழுதுகளில் இவ்வரிசையையே அசிட்டிலீன் என்னும் பெயரால் அழைப்பதும் உண்டு. இந்த அசிட்டிலீனில் கரிம அணுக்குகளுக்கிடையே மூன்று பிணைப்புகள் இருப்பதால், இவை வளைய இயலாமல்நேராக இருக்கும் மூலக்கூறு. கரிமத்திற்கும் ஹைடிரஜனுக்கும் இடையே உள்ள கோணம் 180° பாகை ஆகும். ஆல்க்கேன்கள் போல ஆலாமல், இவ்வகை ஆல்க்கைன்கள் உறுதிநிலையற்ற மூலக்கூறாகும், எனவே எளிதில் இணையக்கூடிய (வேதியியல் இயைபுகொள்ள கூடிய) நிலையில் இருக்கும். அசிட்டிலீன் வளிமம், ஆக்ஸிஜனோடு கலந்து எரியும் தன்மை கொண்டது. இப்படி எரியும் பொழுது இதன் தீ நாக்குகள் 3200°C முதல் 3500°C வெப்பம் தரவல்லது. இவ்வளவு அதிக வெப்பம் உள்ளதால் உலோகங்களை (மாழைகளை) வெட்ட இவை பயன்படுகின்றன.

இவற்றின் பொது வாய்பாடு CnH2n–2 என்பதாகும். எ.கா: அசிட்டிலீன் HC≡CH

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்க்கைன்&oldid=2047938" இருந்து மீள்விக்கப்பட்டது