உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராக்சைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐதராக்சைல் (Hydroxyl) என்று வேதியியலில் குறிக்கப்பெறுவது ஓர் ஆக்சிசன் அணுவும், ஓர் ஐதரசன் அணுவும் பகிர்வுப் பிணைப்பு (covalent bond) கொண்டு சேர்ந்த ஒரு குழு. இதில் உள்ள ஆக்சிசன் அணு இன்னும் பெரிய ஒரு சேர்மத்துடன் இணைந்த பகுதியாக இருந்தால், இந்த ஐதராக்சைல் (-OH) குழு, ஒரு வேதி வினைக்குழுவாக தொழிற்படும். மின்மமற்ற வடிவில் இதனை ஐதராக்சைல் தனி (= ஐதராக்சைல் ராடிசல், hydroxyl radical) என்றும் எதிர்மின்மம் கொண்ட ஐதராக்சைலை (hydroxyl anion) ஐதராக்சைடு (hydroxide) என்றும் அழைப்பர். ஐதராக்சைடு என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்கள் கொண்ட எதிர்மின்மம் தாங்கிய ஒரு மின்மி. இதனை HO¯ அல்லது ¯OH எதிர்மின்மி (anion) என்பர். ஐதராக்சைடு எதிர்மின்மி ஒரு "காரம்" ஆகவே காரக் கரைசல்கள் செய்ய இவை பயன்படுகின்றன (எடுத்துக்காட்டாக சோடியம் ஐதராக்சைடு (NaOH))

ஐந்தாக்சைல் வேதி வினைக்குழு

[தொகு]
ஐதரசன்-ஆக்சிசன் சேர்ந்த ஐதராக்சைல் குழு (-OH)

ஐதராக்சைல் குழு என்னும் சொல்லாட்சி கரிம வேதியியலில் அது ஐதரசனுக்கு மாற்றீடாகப் (substituent) பயன்பட்டால் அதனை –OH வேதி வினைக்குழு என்பர். இப்படி ஐதராக்சைல் குழு கொண்ட கரிமவேதிச் சேர்மங்கள் ஆல்க்கஃகால்கள் (alcohols) எனப்படும். இவற்றுள் மிக எளிமையானவை ஆல்க்கைல் எனப்படும். இவ் ஆல்க்கைலின் வாய்பாடு: CnH2n+1-OH

ஐதராக்சைல் தனி

[தொகு]
ஐதராக்சைல் குழுவின் முத்திரட்சி (3தி, 3D) ஒப்புரு ( model).

ஐதராக்சைல் தனி (hydroxyl radical), ·OH, என்பது மின்மமற்ற OH வடிவம். இது விரைந்து அல்லது துடிப்பாக வேதிவினைப்படுவது. எனவே மிகச்சிறிய காலமே தனித்து இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

ஐதராக்சைடுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராக்சைல்&oldid=3326490" இலிருந்து மீள்விக்கப்பட்டது