தையோகீட்டோன்
தையோகீட்டோன் (Thioketones ) அல்லது தயோகீட்டோன் என்பது கரிம கந்தகச்சேர்ம வேதி வினைக்குழுவில் ஒரு வகையாகும். இவ்வகைச் சேர்மங்களை தையோன்கள் அல்லது தையோகார்பனைல்கள் என்றும் அழைக்கலாம். இவை மரபார்ந்த கீட்டோன்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. R2C=O, என்ற கீட்டோன்களின் பொது வாய்ப்பாட்டிற்குப் பதிலாகத் தையோகீட்டோன்கள் R2C=S என்ற பொது வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன. வினைக்குழுவில் கந்தகம் இடம்பெற்றிருப்பதால் தையோ என்ற சொல் முன்னொட்டாகப் பெயருடன் இணைக்கப்படுகிறது. தடைகள் ஏதுமின்றி வினையில் ஈடுபடும் அல்கைல்தையோகீட்டோன்கள் குறிப்பாக பல்லுறுப்பிகள் அல்லது வளையங்களைத் தோற்றுவிக்கின்றன[1].
தயாரிப்பு முறைகள்
[தொகு]கந்தகம் மற்றும் ஆக்சிசன் அணுக்களை பரிமாற்றம் செய்யக்கூடிய வினைக் காரணிகள் உப்யோகித்து தையோன்களைத் தயாரிக்கலாம். பாசுபரசுஐஞ்சல்பைடும் [2] இதனில் கிளைத்த வழிப்பொருள் லாவ்சன் காரணியுமே பொதுவாக இவ்வினைக்கு காரணியாகப் பயன்படுகிறது. பிற தயாரிப்பு முறைகளில் ஐதரசன் குளோரைடு மற்றும் ஐதரசன்சல்பைடு இணைந்த கலவை காரணியாகப் பயன்படுகிறது. பிசு(மும்மெத்தில்சிலில்)சல்பைடும் வினைப்பொருள் காரணியாக பயன்படுத்தப்படுவதும் உண்டு.[3]
தையோபென்சோபீனோன் மற்றும் செலினோபென்சோபீனோன், மூல முன்மாதிரிகள்
[தொகு]தையோபென்சோபீனோன் ((C6H5)2CS)) என்பது ஒரு ஆழ்ந்த நீலநிறச் சேர்மமாகும். கரிமக் கரைப்பான்களில் இது நன்றாகக் கரைகிறது. இது ஒளியால் ஆக்சிசனேற்றம் அடைந்து பென்சோபீனோன் மற்றும் கந்தகமாக மாறுகிறது. இது கண்டுபிடிக்கப்படும்வரை இதனையொத்த பலவிதமான தையோன்கள் தயாரிக்கப்பட்டன[4].
தையோகீட்டோன்களின் செலினியப் பதிப்புச் சேர்மங்கள் செலின்கீட்டோன்கள் எனப்படுகின்றன. இவை தையோன்களை விடவும் வினைத்திறன் மிக்கவையாகும். செலினோபென்சோபீனோன் எதிர் இருபடியாக்கம் அடைகிறது. டையீல்சு-ஆல்டர் வினையைப் போலவே இதுவும் 1,3 டையீன்களுடன் சேர்ந்து வளைய கூட்டுவினைகளில் ஈடுபடுகிறது[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எஆசு:10.1016/0009-2614(74)85029-3
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ Vivek Polshettiwar, M.P. Kaushik "A new, efficient and simple method for the thionation of ketones to thioketones using P4S10/Al2O3" Tetrahedron Letters 2004, Volume 45, 6255-6257. எஆசு:10.1016/j.tetlet.2004.06.091
- ↑ எஆசு:10.1039/CS9932200199
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ எஆசு:10.1021/ar980073b
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ எஆசு:10.1002/anie.199010671
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand