எசுத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எசுத்தருக்கு ஓர் எடுத்துக்காடாக கார்பாக்சைலிக் காடி (carboxylic acid) எசுத்தர். இப் படத்தில் R, R' ஆகியவை ஆல்க்கைல் (alkyl) அல்லது அரைல் (aryl) குழுவைக் குறிக்கும்

எசுத்தர்கள் (Esters) என்பன, ஆக்சிசன் உள்ள ஒரு காடியும் (ஆக்சிசியக்காடி அல்லது ஆக்ஃசோக்காடியும்)(oxoacid), ஐதரசன்-ஆக்சிசன் பிணைந்த ஐதராக்சைல் குழு உள்ள ஓர் ஆல்க்கஃகால் அல்லது ஃவீனால் (phenol) போன்ற ஒரு சேர்மமும் சேர்ந்து உருவாகும் ஒரு வேதிப் பொருள். சுருக்கமாக ஆக்சிசியக் காடியும், ஐதராக்சைல் உள்ள ஒரு சேர்மமும் சேர்ந்து உருவாகும் பொருள் எசுத்தர்.[1] எசுத்தர்களில் ஒரு கரிமக்காடியோ அல்லது கரிமமற்ற காடியோ அதில் உள்ள ஒரு -OH (ஐதராக்சைல்) குழுவானது -O- ஆல்க்கைல் (alkyl) குழுவால் மாற்றப்பட்டு இருக்கும். -O-ஆல்க்கைல் குழுவை ஆல்க்ஆக்சி (alkoxy) குழு என்றும் கூறுவர். காடியைக் கொண்டு உப்பு உருவாக்குவதுபோல, கரிம ஆல்க்கஃகாலைக் கொண்டு எசுத்தர் உருவாக்கப்படுகின்றது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "esters". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுத்தர்&oldid=1877266" இருந்து மீள்விக்கப்பட்டது