அரைல்
அரைல் (Aryl) என்பது அரோமாட்டிக் வளையத்திலிருந்து தருவிக்கப்படும் ஒரு பதிலி அல்லது கரிம வேதியியல் வேதி வினைக்குழு என்று கருதப்படுகிறது. வழக்கமாக பீனைல், நாப்தைல், தையீனைல், இண்டோலைல், இத்யாதி [1] போன்ற ஒரு அரோமாட்டிக் ஐதரோ கார்பன் அரைலாகச் செயல்படுகிறது. பொதுமைப்படுத்தவும் சுருக்கக்குறியீடாகவுமே அரைல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. வேதியியல் கட்டமைப்பு வரைபடங்களில் இடப்படும் "Ar" என்ற குறியீடு அரைல் குழுவிற்கான ஒர் இடம்பிடிப்பான் எனக்கருதப்படுகிறது.
பீனைல்( C6H5 ) அரைல் குழுவிற்கு மிக எளிய ஓர் உதாரணமாகும். இது பென்சீனிலிருந்து தருவிக்கப்படுகிறது. தொலைல் குழு (CH3C6H4) தொலுயீனிலிருந்தும், சைலீல் குழு ((CH3)2C6H3) சைலீனிலிருந்தும் , நாப்தைல் குழு (C10H7) நாப்தலீன்|நாப்தலீனிலிருந்தும் தருவிக்கப்படுகின்றன.
அரைலேற்றம் என்பது ஒரு வேதிப்பொருளுடன் அரைல் குழுவை இணைக்கின்ற ஒரு வேதிச் செயன்முறையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]இவற்றையும் காண்க
[தொகு]- அல்கைல்
- அரைல் ஐதரோகார்பன் ஏற்பி டையாக்சினை இலக்காகக் கொண்ட புரதம் [1]
- அரோமாட்டிக் ஐதரோகார்பன்
- ↑ Bock KW, Köhle C (2006). "Ah receptor: dioxin-mediated toxic responses as hints to deregulated physiologic functions". Biochem. Pharmacol. 72 (4): 393–404. doi:10.1016/j.bcp.2006.01.017. பப்மெட்:16545780.