1-அன்டெக்கேனால்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அன்டெக்கேன்-1-ஆல்
| |
வேறு பெயர்கள்
அன்டெக்கேனால், 1-அன்டெக்கேனால், அன்டெக்கைல் ஆல்ககால், 1-என்டெக்கேனால்
| |
இனங்காட்டிகள் | |
112-42-5 | |
ChEMBL | ChEMBL444525 |
ChemSpider | 7892 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8184 |
| |
UNII | 06MJ0P28T3 |
பண்புகள் | |
C11H24O | |
வாய்ப்பாட்டு எடை | 172.31 g/mol |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.8298 g/mL |
உருகுநிலை | 19 °C (66 °F; 292 K) |
கொதிநிலை | 243 °C (469 °F; 516 K) |
கரையாது | |
எத்தனால் and இருஈத்தைல் ஈதர்-இல் கரைதிறன் | கரையும் |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | >82 °C |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-அன்டெக்கேனால் ( Undecanol ) என்பது பதினொன்று கார்பன்களைக் கொண்ட சங்கிலியால் ஆன ஓரு கொழுப்பு ஆல்ககால் ஆகும். இதனுடைய சுருங்கிய மூலக்கூறு வாய்பாடு C11H24O.இது அண்டெக்கேனால் அல்லது அன்டெக்கேன் –1- ஆல், அன்டெக்கைல் ஆல்ககால், என்டிகேனால் என்றும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இத்திரவம் நீரில் கரையாது. இதனுடைய உருகுநிலை 19 பாகை செல்சியசு மற்றும் இதனுடைய கொதிநிலை 243 பாகை செல்சியசு ஆகும்.
தயாரிப்பும் பயன்களும்
[தொகு]எலுமிச்சை பூவின் வாசமும் கொழுப்புச் சுவையும் கொண்ட இச்சேர்மம் உணவுப்பொருள்களில் சுவையூட்டும் பொருட்களாகவும் பயன்படுகிறது. பொதுவாக அன்டெக்கேனால் இதனையொத்த அன்டெக்கேனால்டிகைடை ஒடுக்கம் செய்து தயாரிக்கப்படுகிறது.
இயற்கையில் அன்டெக்கேனால்
[தொகு]ஆப்பிள், வாழைப்பழம், வெண்ணெய், முட்டை மற்றும் சமைத்த பன்றி இறைச்சி போன்ற பல உணவுப்பொருட்களில் அன்டெக்கேனால் காணப்படுகிறது.
தீங்குகள்
[தொகு]தோல், கண்கள், மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் அன்டெக்கேனால் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தீங்கு விளைவிப்பதில் அன்டெக்கேனால் எத்தனாலுக்கு நிகராக விளங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ CRC Handbook of Chemistry and Physics, 60th Edition, 1980