தென்முனைப் பெருங்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தென்முனைப் பெருங்கடல் (Southern Ocean) பூமியின் தென்முனையில் அண்டார்டிக்கா கண்டத்தைச் சூழ்ந்திருக்கும் ஒரு நீர்நிலையாகும். இதுவே உலகின் நான்காவது மிகப்பெரிய நீர்நிலையாகும். இப்பெருங்கடல் நிலநடுக்கோட்டில் இருந்து தெற்கில் 60° S கிடைக்கோட்டுக்கும் தெற்கே இருப்பதாகும்.

தென்முனைப் பெருங்கடல்

. இப்பெருங்கடல் 20,327,000 சதுர கிலோமீட்டர் (7,848,000 mi²) பரப்பளவுடையது. இதன் ஆழம் மிகப்பெரும்பாலான பரப்பில் பொதுவாக 4,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் வரையானதாக உள்ளது (13,000-16,000 அடி). தென்முனைப் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி 60°00'S, 024°W. என்னும் ஆள்கூற்றில் உள்ளது. இவ்விடத்தில் இப்பெருங்கடல் 7,235 மீட்டர் (23, 735 அடி) ஆழம் உடையது.

அண்டார்ட்டிக்கின் கண்டத் திட்டு வழக்கத்திற்கு மாறாக 800 மீட்டர் (2,600 அடி) ஆழம் உடையதாக உள்ளது. உலகின் பிற கண்டத்திட்டுகளின் சராசரி ஆழம் 133 மீட்டர் (436 அடி) ஆகும்.


பெருங்கடல்கள்
அத்திலாந்திக்குப் பெருங்கடல்ஆர்க்டிக் பெருங்கடல்இந்தியப் பெருங்கடல்தென்முனைப் பெருங்கடல்அமைதிப் பெருங்கடல்