புவியின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவியின் வரலாறு என்பது புவி என்ற கோளின் அடிப்படை வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை தோன்றிய விதம்பற்றியும் குறிப்பதாகும். இயற்கை விஞ்ஞானத்தின் எல்லா துறைகளும் புவியினைப் பற்றி படிப்பதற்கு உதவுகின்றன. இந்த அண்டத்தின் ஆயுளில் மூன்றில் ஒரு பங்கான, 4.54 பில்லியன் ஆண்டுகள் புவியின் ஆயுளாகும். புவியின் மாற்றத்திற்கேற்ப உயிரியல் மற்றும் நிலவியல் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒண்மீன் படலத்திலிருந்து பிரிந்து அடர்வளர்ச்சியின் பயனாக உருவானது. தொடக்கத்தி எரிமலை வாயுவால் காற்றுமண்டலம் உருவானது, ஆனால் அதில் உயிர்வாழத்தேவையான பிராணவாயு இல்லாமல் நச்சு வாயுக்களைக் கொண்டதாகயிருந்தது. பெரும் எரிமலைச் சிதறலாலும், பிற அண்டவெளிப் பொருளில் மோதிக்கொண்டேயிருந்ததாலும் புவியின் பெரும்பகுதி உருகிய நிலையிலேயே உள்ளது. அத்தகைய மோதல்களின் விளைவால்தான் சந்திரன் உருவானதாகவும், புவி சற்று சாய்ந்த நிலையில் மாறியதாகவும் கருதப்படுகிறது. பல காலங்கள் புவி குளிர்ச்சியடைந்து திடநிலையானது. புவியில் மோதிய வால்வெள்ளிகள் மற்றும் சிறுகோள்கள் மூலமாக மேகங்கள் உருவாகி பெருங்கடல்கள் உருவாகின. அதன்பின்னரே உயிர்கள் வாழ தகுந்த சூழல் உருவானது அடுத்து பிராணவாயுவும் அதிகரிக்கத் தொடங்கியது. வெறும் நுண்ணுயிர்கள் மற்றும் மிகச்சிறிய உயிர்கள் மட்டும் ஒரு பில்லியன் ஆண்டுகள் வரை புவியில் இருந்துள்ளன. 580 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பலசெல் உயிரினங்கள் தோன்றி கேம்பிரியக் காலத்தில் முக்கிய பெருந்தொகுதிகள் பரிணாமித்தன. 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தான் மனிதயினத்தின் நெருங்கிய சிம்பன்சிகள் தோன்றின அதிலிருந்து மனிதக் கூர்ப்புகள் பிரிந்து தற்கால நவீன மனிதர்கள் உருவானார்கள்.

தோன்றிய காலம் தொட்டே நமது கோளில் உயிரியல் மற்றும் நிலவியல் மாற்றங்கள் நடந்தவண்ணமே உள்ளது. உயிரினங்கள் படிவளர்ச்சிக் கொள்கைப்படி புதிதுபுதிதாக உருவாகிக்கொண்டே மாற்றத்தை நிகழ்த்துகிறன. புவின் தற்போதைய கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களின் வடிவத்திற்கு முக்கிய காரணம் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ஆகும். கமழிப் படலத் தோற்றமும், பிராணவாயு பெருக்கமும், மண் உருவாக்கமும் செய்து உயிரற்ற நிலையையும் காற்றுவெளியின் கணிசமான மாற்றத்தையும் கொண்டுவந்தது உயிர்க்கோளம் ஆகும்.

புவியியல் கால அளவுகோல்[தொகு]

பாறை அடுக்கு வரைவியல் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள புவியின் காலக்கோட்டு காலஅளவுகோல்.

Ediacaran PaleoproterozoicMesoproterozoic

HadeanArcheanProterozoicPhanerozoicPrecambrian
CambrianOrdovician

DevonianCarboniferousPermianTriassicJurassicCretaceous

PaleozoicMesozoicCenozoicPhanerozoic
PaleoceneEoceneOligoceneMiocene

PleistocenePaleogeneNeogeneQuaternaryCenozoic
மில்லியன் ஆண்டுகள்

சூரிய மண்டலம்[தொகு]

ஒண்மீன்படல பழங்கோள் வட்டின் தோற்றம்

புவி உட்பட மொத்த சூரிய மண்டலமும் வின்மீனிடை சுழலும் தூசி மற்றும் வாயுக்களால் உருவானதாகும், அது சூரிய ஒண்மீன் படலம் எனப்படுகிறது. 109 ஆண்டுகளுக்குமுன் நடந்த மீயொளிர் விண்மீன் பெரு வெடிப்புக்குப் பின் நீரியம் மற்றும் ஈலியம் புவியில் உருவானது. அருகே நடக்கும் மீயொளிர் விண்மீன் வெடிப்பு அதிர்வுகளால் 4.59 ஆண்டுகளுக்குமுன் இந்த சூரிய ஒண்மீன் படலம் சுருங்கத்தொடங்கியது. இத்தகைய அதிர்வுகளால் ஒண்மீன் படலம் சுழன்று வளைவுந்தம் எனப்படும் உந்துசக்தியைப் பெற்றது. சுழற்சி, புவியீர்ப்பு விசை மற்றும் நிலைமத்தால் முடுக்கப்பட்டு இத்தகைய ஒண்மீன் படலம், ஒண்மீன்படல பழங்கோள் வட்டுக்கு செங்குத்து சுழற்சி அச்சில் சுழலத்தொடங்கியது. பெரும்பாலான நிறை படலத்தின் மையத்திலுருந்தாலும், வளைவுந்தம் மற்றும் மோதலால் உருவான ஒழுங்கின்மையால் சில கிலோமீட்டர் நீளங்கொண்ட பழங்கோள்கள் மையத்தை நோக்கி சுழலலவும் செய்தன.[1]

சுழல் வேக அதிகரிப்பும், பெருப்பொருட்கள் விழுதலும் மற்றும் பொருளீர்ப்பின் அழுத்தமும் படலத்தின் மைப்பகுதியில் இயக்க ஆற்றலை அதிகரிக்கத் தொடங்கியது. ஆற்றலை கடத்தும் வழியின்றி வட்டின் மையம் வெப்பமாகி, நீரியம் ஈலியம் அணுவாகமாறி அணுக்கரு இணைவு நடைபெற்று இறுதியில் டி டவுரி(T Tauri) நட்சத்திரம் தீப்பற்றி சூரியன் உருவாகியது. இதற்கிடையில் சூரியனைச் சுற்றிக்கொண்டிருந்த பொருட்கள் குளிர்ந்து மேலும் அந்த பொருளீர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட தூசிகளும் கூளங்களும் ஒன்றிணைந்து கோள்களாக உருமாறின.[1] இப்படித்தான் புவியும் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி 10-20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதிகளவு முழுமை பெற்றது. கோள்களாக ஒன்றிணையாத தூசிகளும் பொருட்களும் புதிய டி டவுரி நட்சத்திரமான சூரியனின் சூரியக் காற்றால் அடித்து வெளியேற்றப்பட்டன. சூரிய மண்டலத்திலுள்ள பாறைக் கோள்கள் பழங்கோள் வட்டு மூலம் தோன்றியதாக கணினி பாவனைகள் காட்டுகின்றன. சூரிய மண்டலத்தின் தோற்றம், கோள்கள், அமைவு பற்றி அனுமானிக்கப்பட்ட ஒண்மீன் படல கருதுகோளே ஏனைய அண்டம் மற்றும் புறக்கோள்களுக்கும் கருதுகோளாகிறது.

நவீன கணினி மாதிரி ஆய்வுகளின்படி உயிர் தோற்றத்திற்கு முதன்மையான கரிமச் சேர்வை புவி உருவாவதற்கு முன்பே பழங்கோள் வட்டிலுள்ள அண்டத்தூசியில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[2] அதேபோல வேறு விண்மீன் கூட்டத்திலுள்ள கோள்களுக்கும் நடந்திருக்கலாம்.[2]

ஹைடேன் மற்றும் கல்தோன்றிப் பேரூழிகள்[தொகு]

ஹைடேன் பேரூழி என்பது தூசிகளிலிருந்து புவி தோன்றிய காலம் முதல் கல்தோன்றிப் பேரூழிவரை உள்ள காலமாகும். கல்தோன்றிக் காலத்தின் தொடக்கத்தில், புவி மிகுந்த குளிர்ச்சியுடன் இருந்துள்ளது. தற்கால உயிரினங்களின் அதிகமானவை இப்பேரூழியில் தான் தோன்றின.

புவியின் மேற்புறத் தோற்றம் மற்றும் முதல் வளிமண்டலம்[தொகு]

பழைய புவிக்கோளின் வெப்பம் தன்னுளிருந்த உலோகங்களை உருக்கப் போதுமானதாகயிருந்தது, அதனால் உயர் அடர்த்தி கொண்ட உலோகங்கள், இரும்பை ஒத்த உலோகங்கள்(siderophile elements) எல்லாம் புவியின் மையத்தை நோக்கியும், அடர்த்தி குறைவான சிலிக்கான் புவியின் மேற்புறத்திற்கும் வந்தன. இத்தகைய தொடர் பிரிவினையின் காரணமாக புவி தோன்றி 10மில்லியன் ஆண்டுகள் கழித்து மேற்பரப்பில் பல அடுக்குகள் உருவாகின மற்றும் புவியின் காந்தப்புலம் உருவாகவும் வழிகோலியது. குளிர்ச்சியின் பயனாக சிலிக்கான வாயுக்கள் பாறைகளாக புவியின் மீது உருவாகியது. அப்போது வளிமண்டலத்தில் நீரியம் மற்றும் ஈலியம் போன்ற அடர்த்திக் குறைவான வாயுக்கள் அதிகமாகயிருந்தன. பின்னர் சூரியப்புயலாலும் புவியின் ஈர்ப்பாலும் இந்த நச்சு வாயுக்கள் விரட்டப்பட்டு, வெப்பத்தால் நீராவியும், எரிமலைகளால் நைட்ரசன் வாயுவும் படிப்படியாக உருவாகின.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 P. Goldreich, W. R. Ward (1973). "The Formation of Planetesimals". Astrophysical Journal 183: 1051. doi:10.1086/152291. Bibcode: 1973ApJ...183.1051G. 
  2. 2.0 2.1 Moskowitz, Clara (29 March 2012). "Life's Building Blocks May Have Formed in Dust Around Young Sun". Space.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012.
  3. "Earth's Early Atmosphere - Universe Today". February 5, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியின்_வரலாறு&oldid=3767396" இலிருந்து மீள்விக்கப்பட்டது