நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு சட்டைப் பை மணிக்கூடு, நேரத்தை அளக்கும் ஒரு கருவி

வரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமாக கருத்துக்கள் உள்ளன. நேரம், அண்டத்தின் அடிப்படையான கூறு, அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதிலே நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன, இது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் கொண்டிருந்த இயல்பிய நோக்கு ஆகும்.

இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம், அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே மனிதர்கள், நிகழ்வுகளைத் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள், நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைவெளியையும் அளந்து கொள்கிறார்கள், பொருள்களின் இயக்கங்களை ஒப்பிடுகிறார்கள் என்கிறார்கள் இக்கருத்தின் ஆதரவாளர்கள். மேலும் இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல. கோட்பிரைட் லீப்னிஸ், இம்மானுவேல் கண்ட் போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர். பொதுவாக நேரம் என்பது காலத்தை அளக்க பயன்படும் ஒரு அளவை ஆகும். காலத்தை அளக்க நிறைய வழிகள் உள்ளன இதனை படிப்பதற்கு கால அளவியல் என்று பெயர்.

அறிவியலில், வெளியுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் அலகுகளின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகளாக, சூரியனின் இயக்கம், சந்திரன் தேய்ந்து வளர்தல், ஊசல்களின் இயக்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

பண்டைய முறை[தொகு]

சூரிய கடிகாரம்

பண்டைய காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்காக நாட்காட்டி உருவாக்கப்பட்டது. நாட்காட்டியை வைத்து ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என்றும் கணித்தார்கள். பின்னர் நாட்களுக்கு குறைவான காலத்தை கணக்கிடுவதற்காக சூரியக்கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன. சூரியக் கடிகாரங்களில் சூரியனின் திசையை பொருத்து நிழல் விழும். அதை வைத்து நேரத்தை கணக்கிட்டனர். அதனினும் குறைவான நேரத்தை அளக்க நீர்க் கடிகாரம், மணல் கடிகாரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர்.

எகிப்தியர்கள் கி.மு 500 க்கு முன்பே T போன்ற வடிவம் உடைய கருவியை நேரம் அளக்க பயன்படுத்தினர். T போன்ற வடிவம் உள்ள வளைவு சூரியன் உதிக்கும் திசையில் அமைந்து இருக்கும். இதில் விழும் நிழலை வைத்து நேரத்தை அளவிட்டார்கள். இக்கருவியே பின் நாளில் சூரியக் கடிகாரமாக வளர்ந்தது.

நாட்காட்டி வரலாறு[தொகு]

பழைய கற்காலத்திலிருந்தே நாட்காட்டிகள் பயன்படுத்தப்பட்டது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகில் உள்ள அனைத்து கலாச்சார மக்களும் நாட்காட்டி பயன்படுத்தியுள்ளனர். நாட்காட்டி பயன்படுத்துவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. சந்திர நாட்காட்டியே பழைய நாட்காட்டியாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. சந்திர நாட்காட்டியில் சிலர் 12 மதங்களையும்(354),சிலர் 13 மாதங்களையும்(384) ஓராண்டாக பின்பற்றி வந்துள்ளனர். யூலியசு சீசர் கி.மு.நாற்பத்து ஐந்தில் முதன் முதலாக சூரிய நாட்காட்டியை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதை பலர் ஏற்க மறுத்தனர். பின் போப் கிரிகோரி xiii என்பவர் 1582-இல் சீசரின் நாட்காட்டியில் சில மாற்றங்கள் செய்தார். அந்நாட்காட்டி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவே கிரிகோரியன் நாட்காட்டி என்றும் ஆங்கில நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்றது. தற்போது உலகின் பல நாடுகளில் இந்த நாட்காட்டியே கடைபிடிக்கப்படுகின்றது.

நொடி[தொகு]

நொடியின் கால அளவை கணக்கிட வறையருக்கப்பட்ட முறை ஐன்சுனின் சார்பியல் கோட்பாட்டின் அடிபடையில் உருவாக்கப்பட்டதாகும். அதன்படி ஒரு நொடி என்பது நூற்றுமுப்பத்து மூன்று அணு எண் கொண்ட ஒரு சீசியம் அணு(இயல்பு நிலையில் சீசியத்தின் வெப்பம் சுழியம் ஆகும்) 9192631770 முறை அதிர்வதற்கு சமமான நேரம் ஆகும்.

அலகு[தொகு]

அலகு என்பது ஒன்றன் அளவைக் குறிக்கப் பயன்படும் முறை ஆகும். நேரத்திற்கு நிறைய அலகுகள் உள்ளன. நிமிடம், மாதம், நாள், வாரம், நூற்றாண்டு என்பன அவற்றுள் சில அலகுகள் ஆகும்.

சர்வதேச முறை அறிவிப்பின்படி நேரத்தின் அடிப்படை அலகு நொடி ஆகும். நாள், மாதம், ஆண்டு, மில்லி நொடி போன்றவை அடிப்படை அல்லாத அலகுகள் ஆகும். நிமிடத்திற்கு குறைவான நேரத்திற்கும் அலகுகள் உள்ளன.

நேர அலகு
அலகு கால அளவு குறிப்பு
நொடியில்(instant) வரையறுக்கப் படாதது கூறும் நேரத்தைக் குறிக்கும்; காலக் கோட்டில் ஒரு புள்ளி; அல்லது, பூச்சிய நேர அளவைக் குறிக்கும்.
ப்ளாங்க் நேரம் 5.39 x 10–44 நொடி ஒளியானது ஒரு ப்ளாங்க் நீளத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகும், தோராயமாக 10−43 மணித்துளிகள்.
யாக்டோ நொடி 10−24 நொடி
ஜெப்டோ நொடி 10−21 நொடி
அட்டோ நொடி 10−18 நொடி அளக்கக்கூடிய மிக குறைந்த நேரம்
ஃபெர்மெடொ நொடி 10−15 நொடி
பிக்கோ நொடி 10−12 நொடி
நானோ நொடி 10−9 நொடி
மைக்ரோ நொடி 10−6 நொடி
மில்லி நொடி 0.001 நொடி
சென்டி நொடி 0.01 நொடி
டெசி நொடி 0.1 நொடி
நொடி 1 நொடி அடிப்படை அலகு
டெக்கா நொடி 10 நொடி
நிமிடம் 60 நொடி
ஹெக்டோ நொடி 100 நொடி 1 நிமிடம் 40 நொடி
கிலோ நொடி 1,000 நொடி 16 நிமிடம் 40 நொடி
மணி 60 நிமிடம்
நாள் 24 மணி
வாரம் 7 நாள்
மெகா நிமிடம் 1,000,000 நிமிடம் 11.6 நாள்
வருடம் 12 மாதங்கள்
சக வருடம் 365 நாட்கள் 52 வாரங்கள் + 1 நாள்
கிரிகோரியன் ஆண்டு 365.2425 நாள்
லீப் வருடம் 366 நாள் 52 வாரம் + 2 நாட்கள்
டெகேட் 10 ஆண்டுகள்
தலைமுறை மாறுபடக்கூடியவை மனிதர்களுக்கு 17-35 ஆண்டுகள்
பெருவிழா 50 ஆண்டுகள்
நூற்றாண்டு 100 ஆண்டுகள்

கருவிகள்[தொகு]

மணிக்கூடு

நேரத்தை அளக்கப்பயன்படும் கருவிகளில்

  • சூரிய கடிகாரம்-பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது.
  • மண்கடிகாரம்-பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது.
  • மணிக்கூடு-தற்போது பயன்படுத்தப்படும் கருவி.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரம்&oldid=2223102" இருந்து மீள்விக்கப்பட்டது