தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிலப்பலகையியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு (plate tectonics) என்பது நிலவியல் கோட்பாடுகளில் ஒன்று. கண்டப் பெயர்ச்சித் தோற்றப்பாட்டை விளக்குவதற்காக எழுந்த இந்தக் கோட்பாடு, இத்துறையிலுள்ள மிகப் பெரும்பான்மையான அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக் கோட்பாட்டின்படி பூமியின் உட்பகுதி வெளிக் கற்கோளம் (lithosphere) மற்றும் உள் மென்பாறைக்கோளம் (asthenosphere) ஆகிய இரண்டு படைகளால் ஆனது.

Tectonic plates (surfaces are preserved)
20ஆம் நூற்றாண்டு பாதியின் நிலப்பலகையில் அமைப்பு. படிமம் தற்போது பலகைகள் எவ்வழியின் நகர்கின்றன என்று காட்டுகின்றது. படிமத்தின் மீது சொடுக்கி பெரிதாக காணலாம்.

கற்கோளம் மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்து கொண்டு இருப்பதுடன், பத்து தட்டுகளாகப் பிரிந்தும் உள்ளது. இவை ஆபிரிக்க, அண்டார்ட்டிக், ஆஸ்திரேலிய, யூரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசிபிக், கோகோஸ், நாஸ்கா மற்றும் இந்தியத் தட்டுக்கள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. மேற்கூறிய தட்டுக்களும், மேலும் பல சிறிய தட்டுக்களும் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று, தட்டு எல்லைகளில், நகர்கின்றன. இத்தட்டு எல்லைகள் மூன்று வகையாக உள்ளன. அவை ஒருங்கும் தட்டு எல்லை (எல்லைகளில் தட்டுக்கள் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டு இருத்தல்), விலகும் தட்டு எல்லை (தட்டுக்கள் ஒன்றிலிருந்து விலகிச் செல்லுதல்), உருமாறும் தட்டு எல்லை (இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லுதல்) என்பனவாகும். நிலநடுக்கம், எரிமலை நிகழ்வுகள், மலைகள் உருவாக்கம், கடற் பள்ளங்கள் என்பன தட்டுக்களின் எல்லைகளை அண்டியே ஏற்படுகின்றன.

முக்கியமான கொள்கைகள்[தொகு]

புவியின் உட்பகுதியை கற்கோளம், மென்பாறைக்கோளம் என்ற கூறுகளாகப் பிரிப்பது, அவற்றின் பொறிமுறை வேறுபாடுகளை ஒட்டியே ஆகும். கற்கோளம் ஒப்பீட்டளவில் குளிந்ததும், உறுதியானதுமாகும். ஆனால் மென்பாறைக்கோளம் சூடானதாகவும், பொறிமுறைப் பலம் குறைந்ததாகவும் உள்ளது. தட்டுப் புவிப்பொறைக் கோட்பாட்டின் மிக முக்கியமான கொள்கை, கற்கோளம் வெவ்வேறான புவிப்பொறைத் தட்டுக்களாக திரவம் போன்ற மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டிருக்கிறது என்பதாகும். இடத்துக்கிடம் வேறுபட்ட திரவத் தன்மையுடன் இருக்கும் இந்த மென்பாறைக்கோளம், அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் புவிப்பொறைத் தட்டுக்களை வெவ்வேறு திசைகளில் நகரச் செய்கிறது.

இரு தட்டுகள் ஒன்றையொன்று அவற்றின் பொதுத் தட்டு எல்லையில் சந்திக்கின்றன. இத் தட்டு எல்லைகள் பொதுவாக பூமியதிர்ச்சி, மற்றும் மலைகள் போன்ற நில உருவவியல் (topography) சார்ந்த அம்சங்களின் உருவாக்கம் போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. உலகிலுள்ள பெரும்பாலான உயிர்ப்புள்ள எரிமலைகள் தட்டு எல்லைகளிலேயே அமைந்துள்ளன. இவற்றுள் பசிபிக் தட்டின் தீ வளையம் மிக உயிர்ப்புள்ளதும், பிரபலமானதும் ஆகும்.

புவிப்பொறைத் தட்டுகள் இரண்டு விதமான கற்கோளங்களைக் கொண்டுள்ளன. அவை கண்டம் சார்ந்த மற்றும் கடல் சார்ந்த கற்கோளங்களாகும். எடுத்துக்காட்டாக, ஆபிரிக்கத் தட்டு ஆபிரிக்காக் கண்டத்தையும், அத்திலாந்திக் மற்றும் இந்து மாகடல்களின் பகுதிகளின் தரைகளையும் உள்ளடக்குகின்றது. இந்த வேறுபாடு இத் பகுதிகளை உருவாக்கியுள்ள பதார்த்தங்களின் (material) அடர்த்திகளை அடிப்படையாகக் கொண்டது. கடல் சார்ந்த கற்கோளம், கண்டம் சார்ந்த கற்கோளத்திலும் அடர்த்தி கூடியதாகும். இதன் விளைவாகவே கடல் சார்ந்த கற்கோளங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்துக்குக் கீழேயே காணப்பட கண்டம் சார்ந்த கற்கோளங்கள் கடல் மட்டத்துக்கு மேலே துருத்திக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தட்டு எல்லை வகைகள்[தொகு]

தட்டு எல்லை வகைகள்.

தட்டுக்கள் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று நகர்கின்ற விதத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டு எல்லைகள் மூன்று வகைகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. அவை வெவ்வேறு விதமான மேற்பரப்புத் தோற்றப்பாடுகளுடன் (surface phenomena) தொடர்புபட்டுள்ளன. தட்டு எல்லை வகைகளாவன:

1. உருமாறும் எல்லைகள் (Transform Boundaries)

உருமாறும் எல்லைகளில் இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லும். கிடைமட்டமான இயக்கம் மட்டுமே நிகழ்கிறது.

2. விலகும் எல்லைகள் (Divergent Boundaries)

அடுத்தடுத்து அமைந்துள்ள இரு தட்டுக்கள் எதிர் எதிர் பக்கங்களில் நகரும் போது விலகும் எல்லைகள் உருவாகின்றன. இச் செயற்பாட்டின் போது வெளியிடப்படும் மக்மாவினால் புதிய புவிமேலோடு உருவாக்கப்பட்டு கடற்தரை விரிவாக்கம் (seafloor spreading) நிகழ்கிறது. மத்திய அட்லாண்டிக் மலைமுகடு கடலடியில் உள்ள விலகும் எல்லைகளுக்கான ஓர் உதாரணமாகும்.

3. ஒருங்கும் எல்லைகள் (Convergent Boundaries)

ஒருங்கும் எல்லைகளில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரு தட்டுக்கள் ஒன்றை ஒன்று நோக்கி நகர்கின்றன. மோதலின் போது அடர்த்தி கூடிய தட்டு மேலாகவும் அடர்த்தி குறைந்த தட்டு அதற்கு கீழாகவும் பயணிக்கின்றன. கீழாக செல்லும் தட்டு புவியின் உட்பகுதி வெப்பத்தாலே உருக்கப்பட்டு எரிமலை குழம்பாக வெளிவருகிறது. இந்த பகுதி subduction zone எனப்படும். உலகில் அதிகமான எரிமலைகள் ஒருங்கும் எல்லைகளிலேயே அமைந்துள்ளன.

தட்டு நகர்வின் பொறிமுறைகள்[தொகு]

  1. வெப்பச்சலனம் (convection)

பூமியின் மையத்திலுள்ள மக்மாவின் இயக்கத்தினால் வெப்பம் தட்டுக்களுக்கு செலுத்தப்படல்.

  1. கடத்துதல்(conduction)

இரண்டு தட்டுக்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளும் போது வெப்பம் கடத்தப்படல்.

  1. இழுக்கும் தள்ளும் தட்டு (push-pull slab)

புவியீர்ப்பினால் தட்டு கீழே தள்ளப்பட மக்மாவின் இயக்கத்தினால் மறுபடியும் மேலே தள்ளப்படுகிறது.

உராய்வு[தொகு]

புவியீர்ப்பு[தொகு]

முதன்மைத் தட்டுகள்[தொகு]

வரலாறும் அதன் தாக்கமும்[தொகு]

கண்டப் பெயர்ச்சி[தொகு]

1912 ஆம் ஆண்டு அல்பிரட் வெஜனர் என்ற ஜேர்மானிய புவியியலாளர் முன்வைத்த கொள்கையின் படி சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமி ஒரு தனிக் கண்டமான பந்ஜியா(pangaea) வையும் அதனை சூழ்ந்த ஒரு தனி சமுத்திரமான பந்தலாஸ்சா (panthalassa)வையும் மாத்திரமே கொண்டிருந்தது. தற்போதைய கண்டங்கள் யாவும் பந்ஜியாவில் இருந்து உடைந்து வந்தவையாகும். கண்டங்களின் ஒன்றுக்கொண்டு சார்பான நகர்தல் பொறிமுறை(கண்டப்பெயர்ச்சி) "தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு" (plate tectonics) என்னும் நிலவியல் கோட்பாடாக பின்னர் வடிவமைக்கப்பட்டது.

கண்டப் பெயர்ச்சிக்கான ஆதாரங்கள்[தொகு]

  • ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடிய கரையோர அமைப்புகள்
உதாரணமாக தெற்கு அமெரிக்காவின் கிழக்கு கரையோரமும் ஆபிரிக்காவின் மேற்கு கரையோரமும் ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடியது.
  • வெவ்வேறு கண்டங்களில் காணப்படும் ஒரே வகையான மலைத்தொடர்கள்
நோர்வே, கிரீன்லாந்து மற்றும் வட அமெரிக்காவின் மேற்குப் பகுதிகள் ஒரே கற்கட்டமைப்பு, வயது, உருவாக்கம் கொண்ட மலைத்தொடர்களை கொண்டுள்ளன.
  • பனிப்பாறைப் படிவுகளின் பாய்ச்சல்
இந்தியாவின் இமாலய பகுதி, சில தெற்கு ஆபிரிக்க பகுதிகள், தெற்கு அவுஸ்திரேலியா ஆகியன இன்றும் பனிப்பாறைப் படிவுகளை கொண்டுள்ளன. ஆதியிலே இவை யாவும் தென்துருவத்தோடு இணைக்கப்பட்டு இருந்திருக்கலாம்.
  • உயிரினங்களின் பங்கீடு
ஒரே உயிரினங்கள் வெவ்வேறு கண்டங்களில் காணப்படல். உதாரணமாக தெற்கு அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா கண்டங்களில் மீசோசர்ஸ் எனப்படும் ஊர்வன விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டப் பெயர்ச்சிக்கான எதிர்ப்புகள்[தொகு]

  • கடல் அடித்தட்டிலிருந்து கண்டங்கள் பிரிந்து வர முடியாது.
  • ஈர்ப்பு விசை ஒப்பீட்டளவில் மிக சிறியது எனவே கண்டங்களை நகர்க்க போதுமானதல்ல
  • போதுமான ஆதாரங்கள் இல்லை

மிதக்கும் கண்டங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]